/* ]]> */
Mar 052012
 

கட்சி சார்பின்றி சட்டசபையில் ப்ளூ

ஃபில்ம் பார்த்த 15 எம்.எல்.ஏக்கள்

 

கர்நாடகா பிஜேபி எம்.எல்.ஏ மொபைல் ஆபாச படம்

கர்நாடகா பிஜேபி எம்.எல்.ஏ மொபைல் ஆபாச படம்

கர்நாடக சட்டசபை கூட்டத்தில் பிஜேபி கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். சட்டசபை நிகழ்ச்சியை படம் எடுத்துக் கொண்டு இருந்த தொலைக்காட்சி கேமிராவில் இது பதிவானது. அது லோக்கல் சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து பாரதீய ஜனதாவைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் லட்சுமண் சபதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ண பாளேமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.  அது பாரதீய ஜனதா கட்சிக்கு தேசிய அளவில் பெருத்த பின்னடவை ஏற்படத்தியது.

இந்த அமைச்சர்கள் சட்டசபையில் மொபைல் மூலம் ப்ளூ ஃபில்ம் பார்த்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீசைலப்பா பிதரூர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக இக்குழு பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தியது.

இதை தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்கிய 3 முன்னாள் அமைச்சர்களிடம் நேரில் விசாரணை நடத்த பேரவை குழு தீர்மானித்தது.


இதற்காக வருகிற 8-ந்தேதி ஆஜராகுமாறு 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆபாச படத்தை மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பார்த்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.


இது குறித்து பேரவை குழுவில் இடம் பெற்று இருக்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நேரு செலேகர் தெரிவிக்கையில்,


’’சட்டசபையில் 3 முன்னாள் அமைச்சர்கள் தவிர பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படத்தை பார்த்துள்ளனர். இது எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எங்கள் கடமையை அரசியல் பாரபட்சமின்றி நிறை வேற்றுவோம்’’ என்று நிருபர்களிடம் கூறியுள்ளார். இது பொது மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. பிஜேபியை கடுமையாகத் தாக்கி வந்த காங்கிரஸ் தன் கட்சி எம்.எல்.ஏக்கள் பலான படம் பார்த்ததை அறிந்து என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>