/* ]]> */
Sep 272018
 

கடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது?

சாவி கொடுக்கும் கடிகாரத்தின் உள்ளே சுள் (spring) இருக்கும். சாவி கொடுக்கும்போது அந்தச் சுருள் சுருங்கிக்கொள்ளும். மெல்ல மெல்ல விரிவடையும்போது அதன் இயக்கம் கடிகார முள்ளை சீராக உந்தும். இதன் காரணமாக முள் சீரான வட்ட இயக்கத்தில்  செல்லும்.

தற்போதுள்ள நவீன எலெக்ட்ரானிக் மின்னனு கடிகாரங்கள் குவார்ட்ஸ் கிரிஸ்டல்களின் துடிப்பு உதவியுடன் இயங்குகின்றன. மின்சக்தி பெறும்போது கட்டுப்படுத்தி நொடிக்கு ஒரு துடிப்பு எனச் சரி பார்த்து அமைக்கப்படும். மின்சக்தியைத் துடிப்பாக மின்சக்தியைத் துடிப்பாக மாற்றும் கிரிஸ்டலின் தன்மைக்கு பிசோ மின்சாரம் (piezo electricity) என்று பெயர். இதுதான் கடிகாரத்தின் மிகத் துல்லியமான இயக்கத்துக்கு காரணமாக இருந்து நேரத்தையும் காலத்தையும் அறிந்துகொள்ள உதவுகிறது.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>