/* ]]> */
Sep 122013
 

சினிமினி:
ஓவியாவுக்கும் விமலுக்கும் இடையே எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை:

vimal

விமலுக்கும் உங்களுக்கும் இடையே கெமிஸ்ட்ரியா என்ற கேள்விக்கு ஒவியா டென்ஷனாவார். நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. சேர்ந்து நடித்தோம் அவ்வளவுதான். அதற்குமேல் சொல்ல என்ன இருக்கிறது என்பார். இவர் எந்தப் படத்தில் நடித்தாலும் கதாநாயகர்களை நன்கு புரிந்துகொண்டு நடிப்பாராம். மற்றும் விமல் இவரது முதல் ஹீரோ. மேலும் ஓவியாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர் . அவ்வளவுதான், என்கிறார், ஓவியா. மேலும் இவருக்காக எந்த ஹீரோவும். படங்களுக்கு சிபாரிசு செய்வதில்லையாம். தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோதான் இவரைத் தொடர்புகொண்டு கேட்பார்களாம். குறிப்பிட்ட கதைக்கு இவர் பொருத்தமானவர் என்று அவர்களுக்குத் தோன்றினால் மட்டுமே, இவரைத் தேர்வு செய்வார்களாம். மற்றபடி எந்த நடிகர் சிபாரிசும் தேவைப்படுவதில்லையாம்.
இவரோடு அறிமுகமான நடிகைகள் பலரும் பெரிய அளவில் முன்னேறிவிட்டனர். அவர்களுக்கு அதிக வாய்ப்புகளும் குவிகின்றன. ஆனால் அதுபற்றி இவருக்கு எந்த வருத்தமும் இல்லையாம். அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி ம்கிழ்ச்சியடைகிறேன். ஆனால் இவரை மற்றவரோடு ஒப்பிட்டுக்கொள்வதில்லையாம். எனக்கு வரும் வாய்ப்புகள் என்னைத் தேடி வரும் எந்த ஆதரவும் இல்லாமல் இந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளேன் என்பதில் பெருமையடைகிறேன், என்கிறார். ஒரே ஆண்டில் 4,5 படங்கள் செய்யவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். யார், ஹீரோ, யார் டைரக்டர் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். எத்தனையோ புதுமுக டைரக்டர்கள் ஜெயிக்கிறாங்க. எனவே பெரிய டைரக்டர்தான் வேண்டும் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பேன். நல்ல கதை இல்லையென்றால் வீட்டில் உட்கார்ந்திருப்பேனே ஒழிய தப்பான கதையில் நடிக்கமாட்டேன், என்கிறார். இவருடைய முதல் படமான ‘களவாணி’யின் வெற்றியைப் பற்றி பெருமையடைகிறார். தொடர்ந்து, மெரினா, கலகலப்பு முதலிய படங்களும் வெற்றிபெற்றன. தற்போது நடித்துவரும், ‘ மூடர் கூடம்’ என்ற படம் ஒரு வித்தியாசமான இடத்துக்கு இவரை அழைத்துப் போகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>