ஓட்ஸ்,வெஜிடபிள் சூப்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 2 மேசைக்கரண்டி

வேகவைத்த பருப்பு தண்ணீர் – 2 டம்ளர்

காரட்,பீன்ஸ்,கோஸ்,காளிபிளவர்,ப.பட்டாணி -தலா 25 கிராம்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி -1

பச்சை மிளகாய் -1

இஞ்சி – சிறிது

துருவிய சீஸ் – 1மேசைக்கரண்டி

மிளகு தூள் -1தேக்கரண்டி

செய்முறை:

*குக்கரில் வேகவைத்த பருப்புத் தண்ணீருடன் ஓட்ஸ்,இஞ்சி,நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் போட்டு வேகவைக்க வேண்டும்.

*பின்பு அதை blender அல்லது மத்தினால் கடைந்து,தேவையான தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொதிக்க விடவும்.

*ஒரு கொதி வந்தவுடன் துருவிய சீஸ் ,மற்றும் மிளகு தூள் தூவி இறக்கி பரிமாறவும்.

சமையல் குறிப்பு:வள்ளிமயில் சரவணன்

புதுக்கோட்டை.

Comments

comments

Article written by