ஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி திரை விமர்சனம் – ஒஸ்தி சினிமா விமர்சனம் – Osthi Review
இயக்கம் : தரணி
Directed by S. Dharani
தயாரிப்பு : மோஹன் அப்பாராவ், டி.ரமேஷ்
Produced by Mohan Apparao , T. Ramesh
திரைக்கதை : திலீப் ஷுக்லா, தரணி
Screenplay by Dileep Shukla, S. Dharani
கதை : திலீப் ஷுக்லா, அபினவ் காஷ்யப்
Story by Dileep Shukla, Abhinav Kashyap
நடிப்பு : சிம்பு என்கிற எஸ்.டி.ஆர், ரிச்சா, ஜித்தன் ரமேஷ், சோனு சூட், ரேவதி, நாசர்
Starring Silambarasan, Githan Ramesh, Richa Gangopadhyay, Sonu Sood
இசை : தம்ன்
Music by S. Thaman
ஒளிப்பதிவு : கோபினாத்
Cinematography Gopinath
எடிட்டிங்க் : வி.டி.விஜயன்
Editing V. T. Vijayan
To read Osthi review in English click here
எதிர்பார்ப்புகள்:
1. இந்திவாவின் வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த சல்மான் கான் படமான தபாங் படத்தின் ரீமேக்.
2. சிம்பு போலீசாக நடிக்கும் முதல் படம்
3. கலசலா கலசலா என்ற சூப்பர் ஹிட் குத்தாட்டப் பாடலுக்கு நயனை நடிக்க வைக்க முயற்சி பண்ணி பின் மல்லிகா ஷெராவத் சிம்புவுடன் சூப்பர் குத்தாட்டம் போட்ட பாடல்.
4. சிம்புவே எழுதிய வாடி வாடி க்யூட் பொண்டாட்டி ஆல்ரெடி சூப்பர் ஹிட்.
கதை :
சிம்பு ஒரு போலீஸ் அதிகாரி. ஆனால் வெவகாரமான போலீஸ். கை அரிக்கும் போலீஸ். அவருடைய உடன் பிறப்பு ஜித்தன் ரமேஷ். ஒரு நாள் சிம்பு ஒரு ரவுடிக் கும்பலை வளைக்கையில் அவர்களிடம் அளவுக்கு அதிகமான திருட்டுப் பணம் சிக்க அதை தன்னுடனே வைத்துக் கொள்கிரார் சிம்பு. அரசியல் தலைவர் சோனு சூட் ( இந்தி பதிப்பிலும் இவர்தான் வில்லனாம் ) சிம்புவிடம் அது கட்சிப்பணம் என கதையளக்க, சிம்பு மிரளாமல் பணத்தை திருப்பித் தர மறுக்கிறார்.
சிம்பு ஒரு என் கவுண்டரில் ரிச்சாவை டாவடிக்க, ஜித்தன் சரண்யா மோகனிடம் மயங்க, ரெண்டு உடன்பிறப்புக்களும் கல்யாண ஆசையோடு பெண் கேட்க, இருவருக்குமே பிரச்சினை. ஜித்தனுக்கு பண பிரச்சினை. ஆகவே அவர் சிம்பு தடாலடியாக அடித்திருந்த பணத்தில் கை வைத்து விடுகிறார். இதற்கிடையில் மர்மமான முறையில் சிம்புவின் அம்மா கொலை செய்யப்படுகிறார். சிம்புவின் வளர்ப்பு தந்தை அவரை கழட்டி விட சிம்பு அநாதையாகிறார். கடைசியில் களைமேக்சில் சிம்புவை வில்லன் சூடின் அறிவுரைப்படி கொலை செய்ததாய் ஜித்தன் சொல்ல, நம்பிய சூட், சிம்புவின் தாயை கொன்றது தான் தான் என உண்மையை போட்டு உடைக்க, ஜித்தன் சிம்புவை கொலை செய்ததாய் சொன்னது பொய் என தெரிகிறது. சிம்பு ஒரு போலீஸ் படையுடன் வந்துசசூடின் கும்பலை துவம்சம் செய்து ஜித்தனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். ரிச்சாவும் தான் உண்டாயிருப்பதாக அறிவிக்க சுபமாய் முடிகிறது படம்.
நடிப்பு :
சிம்பு :
சிம்பு சல்மான் கானாக முயன்றிருக்கிறார். ஆனால் பரிதாபமாக அந்த முயற்சியில் தோற்றிருக்கிறார். அவர் காட்டும் மேனரிசங்கள் மூலம் பல சமயங்களில் எரிச்சலையும் சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கிறார். சும்மாவே விரலை ஆட்டும் அவர் இதில் “கெட்ட போலீசாக ” வருவதாலோ என்னவோ, அடாவடி என்ற பேரில் ஓவர் மேனரிசம் காட்டுகிறார். வி.டி.வி யில் அமைதியாக வந்த சிம்புவை ரசித்த நாம் இவர் காட்டும் ஓவர்டோசில் ஓவர்லாடாகிறோம். பாடல் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். சண்டை காட்சிகளுக்கும் எம்னக்கெட்டிருக்கிறார். ஆனால் அவர் 25 நாளில் வைத்த எய்ட் பேக் எங்கு தேடியும் காணோம் !
ரிச்சா :
சிம்புவின் காதலியாகவும் பின் மனைவியாகவும் வரும் ரிச்சா கலக்குகிறார். அவர் புடவை கட்டிக் கொண்டு வந்து சிம்புவை மயக்கும் காட்சிகள் தூள் !
ஜித்தன் :
ஜித்தனால் நடிக்கவே முடியாது என்பதற்கு இன்னொரு சாட்சி இந்தப் படம்.
சூட் :
தமிழ் பட உலகிற்கு புது வில்லன் கிடைத்திருக்கிறார். கரக்டாக தன் ரோலை செய்கிரார்.
சந்தானம் :
கலக்கல் காமெடி டயலாக்ஸ். அவர் ரோலை நிறைவாக செய்கிறார் ( சந்தானம் அண்ணே, எல்லா படத்திலயும் ஒரே மாதிரி இருக்கு காமெடி, உஷார் பண்ணிக்குங்க !)
சரண்யா :
இன்னும் எத்தனை படங்களில் தான் இந்த அழகு பெண்ணை அக்கா தங்கை ரோலிலேயே பார்ப்பது ?
ஒளிப்பதிவு :
கோபினாத் பாடல் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார். மற்றபடி ஓகே ரகம்.
இசை :
இசை தான் படத்தின் பெரிய ப்ளஸ். போனதற்கு பைசா வசூலே இந்தப் படத்தின் பாடல்கள் தான். ஆனால் ரீரெக்கார்டிங்கில் தமன் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய !
இயக்கம் :
தரணி மசாலா பங்களின் மன்னனாக இருந்தது கில்லி, தூள் காலத்தில். அதனால் ஒஸ்தியில் அதிக எதிர்பார்ர்பு அவர் மேல். ஆனால் இந்தி திரைக்கதையை சுமக்க வேண்டி வந்ததாலேயே அவரின் விறு விறு திரைக்கதையும் இயக்கமும் ரெண்டுமே மிஸ்ஸிங்க். ஒஸ்தியின் ஜிவ் வசனங்களால் நம் காது ஜவ் கிழிவதுதான் மிச்சம். க்ளைமேக்ஸ் நெருங்குகையில் ஓரளவு பரவாயில்லை. அண்ணன் தம்பிக்கும் ஆன பாசம் வெறுப்பு கலந்த உறவை நன்றாக காட்டியிருக்கிறார். ஆனாலும் கில்லி ஃப்ளோவோ தூள் விறுவிறுப்போ இல்லாமல் ஒண்டியாகவே இருக்கிறது ஒஸ்தி !
பார்க்கலாமா :
லாஜிக்கே இல்லாம ஜாலி பண்ண போறவங்க வேணா தியேட்டர் போய் கலசலா பாட்டுக்கு கைதட்டலாம் ! மத்தவங்க விடு ஜூட் !
ஃபைனல் வர்டிக்ட் : ஒஸ்தி – ஜஸ்ட் ஓகே !
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments