/* ]]> */
Oct 202010
 

ஒரு ரஜினி ரசிகனிடமிருந்து இன்னொரு ரஜினி ரசிகனுக்கு கடிதம்
வணக்கம் தலிவா,
எந்திரன் படம் மொத நாள் பாத்துருப்ப! எத்தினி மணி ஷோ பாத்த? நாங்கள்ளாம் விடிகாலை மூணு மணி ஷோ பாத்தோம்! தலவரு கலக்கிட்டாருல்ல! நாங்கல்லாம் முப்பது வருசமா ரஜினி ரசிகரு . நீ எப்படி? நானு மொதல்ல எங்க தெரு முனையாண்ட காளி ரசிகர் மன்றத்துல இருந்தேன்அப்பால அது ஃபேஷனாயில்லாங்காட்டி எங்க இஸ்கூல் க்ரவுண்டு பக்கமா மாவீரன் ரசிகர் மன்றம் தொடங்குனாங்க அதுல ஜாயின் ஆயிக்கினேன்அதெல்லாம் ஒரு காலம் தலிவாபடிக்காதவன்லாம் இன்னா சூப்பர் படம் சொல்லு.. தலைவர் கலக்கியிருப்பாரு..அப்பத்தான் விக்ரம் போஸ்டர் கிழிச்சு கமல் ரசிகனுங்ககிட்ட அடி வாங்கினதெல்லாம்நம்ம பசங்க உடுவாங்களா? மறு நாளே ரசிகர் மன்றத் தலைவர் அங்க போய் அவனுங்கள மெரட்டிட்டுத் தான் வந்தாரு. தீபாவளிக்கு தலைவர் படம்னாலே இன்னா கொண்டாட்டமா இருக்கும் ?  
ஒரு தீபாவளிக்குதளபதிவந்தப்ப பேட்டயே கல கலத்துருச்சுல்லரசிகர் மன்றத் தலைவரால எனக்கு டிக்கெட் வாங்கி கொடுக்க முடியல! சொந்த செலவுல நானே தனியா தியேட்டர் உள்ள போய்  அபிஷேகம் காசுமாலை எல்லாம் போட்டு கலக்கிட்டேன்ல! “அந்த ராக்கம்மா கைய தட்டுல்ல தலிவரு ஒரு மூமென்ட் கொடுப்பாரே அதுக்கே பைசா வசூல் மச்சி ! நம்ம தோஸ்துங்க கூட சொன்னாங்க குணாவுல கமல் கலக்கியிருக்காரு.. இன்னா ஆக்டிங்குன்னு! நான் பாக்கல மச்சி! ரஜினி ரசிகன் கமல் படம் பாத்தா அத்த விட அவமானம் எனக்கு இன்னா சொல்லு!  
அப்பால புச்சா நாங்கள்ளாம் ஒரு குரூப்பா சேர்ந்துமன்னன்ரசிகர் மன்றம் தொடங்குனோம்.. துவக்க விழாவுக்கு சத்தி அண்ணணே வந்தாருப்பாகிராண்டா பண்ணோம்வயசுல பெரியவன்றாதால என்ன தலிவரா போட்டாங்கப்பாஅதனால நம்ம செலவும் கொஞ்சம்  ஜாஸ்திதான் ! ஆனா இன்னா செய்ய? தலிவனுக்காக செய்யலேன்னா யாருக்கு செய்யப் போறோம்? அப்பா அம்மா கூட சொன்னாங்க..ரசிகர் மன்றம் மன்றம்னே அழிஞ்சு போறே! காலா காலத்துல கண்ணாலம் கட்டுறா! பொறுப்பு வரும்னுஎனக்கும் சரியா வேலை இல்ல ! அங்க அங்க தாவிக்கினே இருந்தேன்! சரின்னு சொல்லி கண்ணாலம் கட்டுனேன்!  
கண்ணால மண்டபத்துலயும் தலைவன் கட் அவுட்டுத்தான்நம்ம தோஸ்துங்க எல்லாம் எப்படியாவது தலைவனையே கூட்டி வந்து தலைவன் முன்னாடியே கண்ணாலம் பண்ணி வக்கலாம்னு பாத்தாங்கஆனா தலிவரு எங்கயோ ஃபாரின் ஷூட்டிங் போயிட்டாரு ! சத்தி அண்ணன் கூட வரலப்பா அதான் வருத்தமாக்குது! சரி கண்ணாலம் முடிஞ்ச கையோட கரிக்டா பாட்ஷா படம் வந்ததுஅத்த விட கல்யாணப் பரிசு இன்னா வேணும் சொல்லு? பாட்ஷா படத்துல தலைவன் நடந்து வருவாரே அத்த பாத்து நான் குதிச்சத பாத்து நம்ம பொஞ்சாதியே பேஜாரிகிப் பூடுச்சி! பாட்ஷா முடிஞ்ச கையோட தலைவன் வெற்றி விழாவுல வெடிகுண்டு கலாச்சாரம் பத்தி பேசநம்ம மன்றத்துலயே கூட ரெண்டு மூணு பேரு அம்மா கட்சின்னு சொல்லி ஒதுங்கிக்கினாங்கநாங்க விடலையே! டே கட்சியாடா பெரிசு? எங்க தலைவனே கட்சி தொடங்குவாரு பாருடான்னு சொல்லி புது தெம்போட மன்றம் நட்த்துனோம்!
தலைவன் ஆனா லைஃப்லயே பெரிய மிஸ்டேக் அப்பத்தான் பண்ணாரு.. கட்சி தொடங்காம மூப்பனாருக்கும் கலைஞருக்கும் வாய்ஸ் கொடுத்தாருகட்சி வந்து ஏதோ ஒன்றியச் செயலாளராவது ஆயிடலாம்னு பார்த்தாதலைவரு திமுக காரனுக்கும் காங்கிரஸ் காரனுக்கும் குடை பிடிக்க வச்சாருசரி தலைவன் சொல்லிட்டாருன்னு அந்த எலிக்ஷனு அத்தயும் செஞ்சோம்! தேர்தல்ல சூப்பரு வெற்றி! ஆனா தேர்தல் முடிஞ்ச கையோட அவன் அவன் எங்களை கழட்டி உட்டுட்டான்பா! சரி மத்த கட்சிக்கு பல்லக்கு தூக்குனா அப்டித்தான்.. நம்ம தலைவன் சொந்த கட்சி தொடங்குனா எல்லாம் சரியாயிடும்னு தெம்பா இருந்தோம்தலைவன் வேற முத்துவுலஎப்ப வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரம் கரக்டா வருவேன்!”னு சொல்லிட்டாரு. அப்புறம் இன்னா கவலை? பொஞ்சாதி கூட நகையெல்லாம் வச்சு நாமளே ஒரு வர்க்ஷாப் தொடங்கலாம்னா.. நாந்தான் வேணான்னு சொல்லிட்டேன்.. மன்றத்துல எவ்ளோ பெரிய மாற்றம் வரப் போகுதுஇவ பிரியாம சொல்றாளேன்னு நெனச்சேன்!  
அடுத்த எலக்ஷன்ல தலைவர் வருவார்னு பாத்தா இப்ப அப்பன்னு இஸ்துக்கினே பூட்டாருஅப்பால தலைவனை பாக்கறத வுடு சத்தி அண்ணனைக் கூட பாக்க முடியலஆனாகூட பாபா பனியன் நான் காசு போட்டு வாங்குனேன்பா! ஆனா தலைவன் சிக்னல் கொடுக்கவேயில்ல! மன்றம் மன்றம்னு சுத்தி வீட்டுல கொழந்த புள்ளங்கக்கிட்டக் கூட மருவாதி இல்ல! ஆனா கூட சிவாஜி படம் பத்து வாட்டி பார்த்தேன்! எந்திரனுக்கு மின்னாடி ஏதோ மீட்டிங் போட்டாங்க! தலைவரே வந்து பேசுனாருஇந்தப் படம் முடிஞ்சோன்ன்ன்னு சொன்னாரு! ஆனா இப்பவும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்றாருபெரிய பையன் தோள் வரை வந்துட்டான்லைஃபே பூடுச்சி இனிமே தலிவன் வந்து இன்னா வராங்காட்டி இன்னான்னு நம்ம தோஸ்துங்களே பேச ஆரம்பிச்சுட்டாங்க! சரி அத்த வுடுஅடுத்த படம் இன்னா நடிக்கிறாராம்? உனுக்கு ஏதாவது தெரியுமா
இப்படிக்கு ,
ரஜினிப்ரியன் ( இந்தபேர் கூட நானே வச்சிக்கிட்டதுதான் நண்பா !)

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>