/* ]]> */
Nov 302017
 

ஒரு பாம்பை இன்னொரு பாம்பு கடித்தால், விஷம் தாக்கி இறக்குமா?:

snake biting

அதே வகைப் பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது.அதாவது தன் விஷத்துக்கு எதிரான ஆன்டிஜென்னை (ANTIGEN) அதே இனத்துப் பாம்பு தன்னிடம் வைத்திருக்கும். வேறு வகைப் பாம்பு கடித்தால் அதற்கான எதிர்ப்பு அதனிடம் இருக்கது என்பதால், அந்தப் பாம்பு இறக்கும்.

தன் விஷத்தை தானே தவறுதலாக விழுங்கிவிட்டால் ஒன்றும் ஆகாது. ஏனைய புரதங்கள் செரிமானம் ஆவதுபோல பாம்புக்கு விஷம் செரிமானம் ஆகிவிடும். அதாவது , விஷமானது ரத்தத்தின் வழி பரவும்போது மட்டுமே விஷம்.

பாம்பு கடித்து விஷம் ரத்தத்தில் கலந்து செல்லும்போது , இரண்டு வகையில் வேலை செய்யும். நல்ல பாம்பு போன்ற பாம்பின் விஷத்தில் நியூரோடாக்ஸின் ( Neurotoxin) எனும் நரம்பு நச்சுப் பொருள் உள்ளது. இது மூளை நரம்பு செல்களைக் கோளாறு செய்து செயலற்றுப் போகச் செய்யும். இதன் காரணமாக எந்தத் திசுவும் இயங்காது. மூச்சுவிட முடியாது. இதயம் சுருங்கி விரியாது என்பதால், மரணம் நிகழும்.

வேறு சில பாம்புவகை விஷத்தில் , சைடோடாக்ஸிக்( Cytotoxic) எனும் நச்சுப் பொருள் உள்ளது. இது ரத்த அணுக்கள் போன்ற உடலின் பல்வேறு திசுக்களை நசித்துவிடும். உள்ளே ரத்தப்பெருக்கு ஏற்பட்டு மரணம் நேரும்.

^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>