/* ]]> */
Nov 092017
 

ஒமேகா -3 சத்து அவசியம்:

omega-3

ஒமேகா-3 பரிசோதனை ஆண்டுக்கு ஒருமுறை அவசியம்.

ஒமேகா-3 என்பது  ALA,DHA,DPA கொழுப்புகள். இவை தாவரங்கள் கடல் உயிரினங்களில் இருந்து கிடைக்கும். மீனில் இருக்கும்  DHA,EPAகொழுப்புகள் உடலுக்கு அவசியமானவை, ALA  கொழுப்பு எளிதாகக் கிடைக்ககூடியது.

கொழுப்புகளில் இரண்டு வகை உண்டு. நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. அந்த வகையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட். இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.  தமனிகளில்; தங்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்.

ஒமேகா அளவைபரிசோதிக்க ஒமேகா-3 இன்டெக்ஸ் டெஸ்ட் எடுக்வும். வாழ்க்கை, உணவு முறை, உடல் செயல்பாடுகளைப் பொறுத்து இதன் தேவை வித்தியாசப்படும்.ஓட்டப் பந்தய வீரர் வீராங்கனைகளுக்கு அதிகம் தேவைப்படும். அவர்கள் சராசரியான உணவு எடுக்கும்போதுஅவை தசை சவ்வுகளுக்கு செல்லாமல், எரிபொருளாக மாறிவிடும்.இதற்குக் காரணம் உடலின் அதிக செயல்பாடுகள்தான்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் சத்து எல்லா மீன்களிலும் உண்டு. குறிப்பாஅக் சாலமன், சூரை ரகங்களில் மிகவும் அதிகம். சைவ உணவில் ஆளி விதை வால்நட், அவகோடா பழம், பூசணி விதை, ஆலிவ் எண்ணெயில் உள்ளது.

ஒமேகா-3 பரிசோதனையில் DHA குறைவாக இருந்தால் கீழ்க்கண்ட பாதிப்புகள் உண்டாகும்:

  • மூளை வளர்ச்சி தடைப்படும்.  அறிவாற்றல் குறையும்.படிப்பில் மந்தமாக இருப்பார்கள்.
  • ஆட்டிசம் நோய்க்கு ஆளாக்கும்.
  • பார்வைக் குறைபாடு தோன்றும்.

இந்தச் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால்,

  • இருதய ஆரோக்கியம் மேம்படும்.
  • முதுமையைத் தள்ளிப் போடும்.
  • தமனி உள் சுவர்களில் கொழுப்புகள் படிவதைத் தடுக்கும்.
  • ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைக் கட்டுப்படுத்தும்.
  • புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சி கூடும்.
  • செல்களுக்குள் சீரான தொடர்பை உருவாக்கும்.
  •  சூரிய ஒளியை உடல் ஈர்க்க உதவும்.
  • பார்வைத் திறன் ஞாபக சக்தி அதிகரிக்கும்  .
  • பெண்களுக்கு குறைப் பிரசவம் தடுக்கப்படும்.
  • அறிவான ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் .

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>