/* ]]> */
May 022011
 

ஒசாமா பின் லேடன் மரணம் – கொன்றது நாங்கள்தான் – அமெரிக்கா அறிவிப்பு

 

osama bin laden - ஒசாமா பின் லேடன்

osama bin laden - ஒசாமா பின் லேடன்

அமெரிக்காவில் செப்டம்பர் ஒன்பதாம் நாள் என்றால் இன்னமும் நடுங்குகிறார்கள். அன்றைய தினம் ட்வின் டவரை தாக்கி ப்ல ஆயிரம் மக்கள் இறப்பதற்கு காரணமாக இருந்த அல் கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக நேற்று நள்ளிரவு அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகார பூர்வமாக அறிவித்தார்… ஒசாமா பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாகவும் இதில் இஸ்லமாபாத் அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததாகவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

 

ஒசாமா மூப்பு காரணமாக சில தினங்கள் முன்பே இறந்து விட்டதாகவும் அவர் இறந்ததை வைத்து வருகிற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதாயம் தேட ஒபாமா இதை அமெரிக்காவின் வெற்றியாக கொண்டாடுவதாகவும் இன்னொரு புறம் தகவல்கள் வருகின்றன.

 

ஒசாமா வாழ்க்கை குறிப்பு

 

ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லேடன் (பிறப்பு மார்ச் 10, 1957) பொதுவாக ஒசாமா பின் லேடன் அல்லது உசாமா பின் லேடன் என் அறியப்படும் இவர் சவூதி அரேபியாவில் பிறந்த இசுலாமிய போராளியாவர். இவர் அல் கைடாவை தொடக்கியவராக கருதப்படுகிறார். இவர் செல்வந்தக் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் ஏனைய இசுலாமிய போராளிகளுடன் சேர்ந்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளை வாபஸ் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் இராணுவத்தினரையும் கொலை செய்யுமாறு முஸ்லிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.

ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என் கூறப்படுகிறது. அவர் மொத்த 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா இவரது 10 வது மனைவி அமிதியா அல் அட்டாஸ் என்பவருக்கு ஒரே மகனாக பிறந்த்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்.

 

நன்றி : ந்யூயார்க் ஸ்பெஷல் எடிஷன்

விக்கி பீடியா

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>