/* ]]> */
Apr 032012
 

ஏப்ரல் 2, 2011. மறக்கமுடியாத நாள். 28 வருடங்களுக்கு பின் இந்தியா உலகக்கோப்பை வென்ற நாள். உலகக்கோப்பை வென்று ஒரு வருடம் ஆகிய நிலையில் ,இங்கிலாந்திடம் அசிங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் கேவலப்பட்டு இதோ ஐபில்-5க்கு தயாராகி வருகிறோம். நான்கு வருடங்கள், நான்கிலும் அரையிறுதி, மூன்று முறை இறுதிக்கு தகுதி, இரண்டு முறை சாம்பியன் என்று அசைக்க முடியாத சக்தியாக நமது சென்னை சூப்பர் சிங்கங்கள் விளங்குவது நமக்கு பெருமையே. இந்த முறை நமது வாய்ப்புகள் எப்படி என்று பார்ப்போம்.

அணியின் நம்பிக்கைகள்:

சுரெஷ் ரெய்னா- ஐபில் போட்டிகளின் சச்சின். அதாவது அதிக ரன் குவித்தவர் இவரே. தனது அபார பேட்டிங் மற்றும் பீல்டிங் தவிர இவரது பந்துவீச்சும் சில சமயம் எடுபடுவது அணியின் பலம்.

பத்ரினாத்- இவர் தமிழ்நாட்டின் சச்சின். அதாவது ரஞ்சி போட்டிகளில் அதிக ரன் குவித்த தமிழர் இவரே. ரெய்னா, விஜய், உள்ளிட்ட முதல் நிலை பேட்டிங் கவிழ்ந்ததால் சுவராக நின்று அணியை தாங்கும் முக்கிய நபர் இவரே.

தோனி- அணியின் மிக முக்கிய நபர். தனி ஆளாக நின்று ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்டவர். அதிகம் சொல்லத் தேவையில்லை.

இது தவிர நமது முக்கிய பலம் ஆல்-ரவுண்டர்கள். ஆல்பி மார்க்கெல், பிராவோ, ஜடேஜா, அஸ்வின், ரெய்னா, ப்லெஸி என்று ஒரு படையே இருப்பது நமது மிகப்பெரும் நம்பிக்கை.

புதிய வரவு- ரவீந்த்ர ஜடேஜா

கொச்சி அணிக்கு ஆடிய இவர், அந்த அணி கலைக்கப்பட்ட நிலையில் ஏலத்திற்கு வந்தார். நடைப்பெற்ற ஏலத்தில் அதிக விலைக்கு சென்னை இவரை வாங்கியது. சிறந்த ஆல்-ரவுண்டரான இவரது அபார பந்துவீச்சும் அவ்வப்போது இவர் பறக்க விடும் சிக்ஸர்களும் அணியை மென்மேலும் பலப்படுத்தும்.

அணியின் பலவீனம்-

சந்தேகமேயில்லாமல் தொடக்கம் தான். முதல் மூன்று வருடங்களாக ஹெய்டன் பார்த்து வந்த பணியை, கடந்த வருடம் ஹஸ்ஸி செய்தார். இம்முறை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அவர் முதல் 10 ஐபில் போட்டிகளை ஆடாதது பலவீனமே. அதுபோக காயம் காரணாமாக முகுந்த் சில ஆட்டங்கள் ஆடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி. இம்முறை நமது சிங்கங்களிடம் என்ன எதிர்ப்பார்க்கலாம்? கண்டிப்பாக ப்ளே ஆப்(play-off, )இல் ஒரு இடம். மற்றும் பல பிரபல பெட்டிங் நிறுவனங்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணிகளாக நமது சென்னையயும், மும்பையயும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க. . .. . !

அர்ஜுன்

படம்-இணையம்

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>