/* ]]> */
Dec 042014
 

ஐபிஎஸ் வேடத்தில் ஸ்ரீதேவி:

sridevi and vijay
பதினாறு ஆண்டுகளுக்குப் பின் , சினிமாவில் மீண்டும் பிரவேசித்துள்ள ஸ்ரீதேவி, விஜய் தமிழில் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்தில் ப்ளாஷ்பேக்கில் வரும் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இதையடுத்து மலையாளத்தில்மோகன்லால்-மீனா நடிப்பில் வெளியான ‘ த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில், ஐபிஎஸ் வேடத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கும் முயற்சியும் நடக்கிறது. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் கமல்’ இந்த வேடத்துக்கு ஸ்ரீதேவி பொருத்தமாக இருப்பார் ‘ என்று கருத்து சொன்னதையடுத்து மும்பைக்கு சென்று ஸ்ரீதேவியிடம் பேசியுள்ளார். ஆக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கமலுடன் இணைகிறார், ஸ்ரீதேவி.
கார்த்தி-லட்சுமி மேனன் ஜோடி:

karthi -lakshmi menan
கார்த்தியும் லட்சுமி மேனனும், முதன் முறையாக ஒரு புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்கள். லட்சுமி மேனனுக்கு இதுவரை கிராமத்து படங்களில் நடித்த போது கிடைத்த வரவேற்பு நகர்ப்புற வேடங்களில் நடித்தபோது கிடைக்கவில்லை. கார்த்திக்கும் இதே கதைதான். அவரின் அறிமுகப் படமான் , ‘ பருத்தி வீரன்’ கிராமத்து பின்னணியில் அமைந்த படம் இது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின் நகர்ப்புறத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படங்களில் , அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றாலும், பருத்தி வீரன் அளவுக்கு இல்லை. இப்போது, இவர்கள் இருவரும் , கிராமத்து கதைக் களத்தில் தயாராகும் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இதனல், இந்த படத்தை இரண்டு பேருமே பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். இந்த ஜோடிப் பொருத்தத்துக்கு , தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை, பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நகர்ப்புற வேடங்களைத் தேடும் நந்திதா:

NANDHITHA
‘அட்டகத்தி’ நந்திதா நடித்ததில், கிராமத்து கெட்டப்புகளில் நடித்த படங்களே, அவருக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன. அதனால், கிராமத்துக் கதையென்றால், முதலில் அவரிடம்தான் கால்ஷீட் கேட்கின்றனர். ஆனால், நந்திதாவுக்கோ தன்மீது கிராமத்து நடிகை என்ற முத்திரை விழுவதில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. இந்த முத்திரை முன்னணி நடிகையாவதற்கு தடையாக இருக்கும் என நினைக்கிறார். அதனால், தான் நடித்துவந்த கிராமத்து கெட்டப்பிலேயே, சினிமா வட்டாரங்களில், இதுவரை விசிட் அடித்துவந்தவர், இப்போது படுகிளாமரான , மாடர்ன் ட்ரெஸ அணிந்து வருகிறார். அத்துடன், ‘நகர்ப்புற’ இளம்பெண் வேடத்துக்கும் நான் சரிப்பட்டு வருவேன்’ என இயக்குனர்களிடம் வாய்ப்பும் கேட்டு வருகிறார்.
வெள்ளைப்புறா வேதிகாவுக்கு புது வசந்தம்:

vedhika
‘மதராசி’, ‘முனி’ போன்ற படங்களில் நடித்த வேதிகாவுக்கு, அந்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதையடுத்து, அவர் நடித்த ‘பரதேசி’ படத்தில் செமத்தியான வேடம் கிடைத்தது. ஆனாலும் அதில் கருப்பு மை பூசி நடித்ததால், தன் இயற்கையான வெள்ளநிற அழகு வெளிப்படாமல் போய்விட்டதே என புலம்பி வந்தார். தற்போது அவருக்கு நம்பிக்கையை ஏறப்டுத்தும் வகையில், வரலாற்று பின்னணியில் உருவாகும் புதிய படத்தில், எந்தவித மேகக்ப்பும் இல்லாமல், இயற்கையான தன் வெண்ணிற அழகுடன் பட்டையைக் கிளப்பியுள்ளாராம். இதனால், தமிழில் தனக்கு பெரிய ப்ரேக் கிடைக்கும் என நம்புவதுடன், நல்ல வேடங்களும் கிடைக்கும் என்று உறுதியுடன் கூறுகிறார், வெள்ளைப்புறா, வேதிகா.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>