/* ]]> */
Oct 262011
 

ஏழாம் அறிவு விமர்சனம் – ஏழாம் அறிவு சினிமா விமர்சனம் – ஏழாம் அறிவு திரை விமர்சனம் – ஏழாம் அறிவு திரைப்பட விமர்சனம்

ezham arivu review

ஏழாம் அறிவு விமர்சனம்

 

Starring Suriya

Shruti Haasan

Johnny Tri Nguyen

நடிப்பு:சூர்யா,ஷ்ருதி ஹாசன்

Directed by A. R. Murugadoss

இயக்கம் : ஏ.ஆர். முருகதாஸ்

Produced by Udhayanidhi Stalin

தயாரிப்பு : உதயநிதி ஸ்டாலின்

Music by Harris Jayaraj

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

Cinematography Ravi K. Chandran

கேமரா : ரவி.கே.சந்திரன்

Editing by Anthony

எடிட்டிங்க் : அந்தோனி

Studio Red Giant Movies

பேனர் : ரெட் ஜெயன்ட் மூவீஸ்

ஷ்ருதி ஹாசன்

கதை :

5ம் நூற்றாண்டு :

சைனாவுக்கு போகும் பல்லவ மன்னன் போதி தர்மன் அங்கே பல அற்புதங்களை நிகழ்த்தி சீனர்களின் மதிப்பையும் மரியாதையையும் பெறுகிறான். ஆனால், அவனே தன் நாடு திரும்பலாம் என எண்ணுகையில் தெய்வீக சக்திகளே தங்கள் நாட்டை விட்டுப் போய் விடுமோ என அஞ்சி , போதி தர்மனை அங்கேயே கொன்று போட்டு அவனை சமாதியாக்குகிறார்கள் சீனர்கள்.

Ezham arivu review

இப்போது :

சீனர்கள் இந்தியாவின்மேல் பயோவார் தோடங்குகிறார்கள். அதற்கு ஆபரேஷன் ரெட் என பெயரிட்டு ஜானி ட்ரிந்யுஎன்னை அனுப்புகிறார்கள். மார்டியல் ஆர்ட்சிலும் நோக்கு வர்மத்திலும் கைதேர்ந்த அவன் இந்தியா வருகிறான்.

ஷ்ருதி ஹாசன் ஒரு விஞ்ஞானி. சீனர்களின் பயோவார் அச்சுறுத்தலை முறியடிக்க ஆராய்ச்சி செய்து போதி வர்மனின் டி.என்.ஏ வே அதற்கு தீர்வாய் காணுகிறார். இப்போது போதி வர்மன் வழிவந்து சர்கசில் இருக்கும் சூர்யாவின் டி.என்.ஏவைத் தூண்டி போதி வர்மனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து இந்தியாவை சீன ஆபத்திலிருந்து காக்க முயற்சிக்கிறார். ஆனால் வில்லன் ஜானி எமகாதகராய் இருக்க, ஷ்ருதி தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதே கதை !

ஏழாம் அறிவு விமர்சனம்

நடிப்பு :

சூர்யா :

போதி வர்மனாய் மிரட்டுகிறார். அவர் உடல்வாகும் அநாயசமாய் அந்த பழங்கால காஸ்ட்யூம் அவருக்கு பொருந்துவதும் அந்த செட்டுகளும் நம்மை பழங்காலத்துக்கே கொண்டு செல்கிறது . சர்க்கஸ் கலைஞனாய் அவர் நிகழ்த்தும் வித்தைகள் ஒவ்வொரு படத்துக்கும் சூர்யா எந்த அளவுக்கு மெனக்கெடுகிறார் எனக் காட்டுகிறது. ஷ்ருதியுடன் பாடல் காட்சிகளில் பின்னியெடுக்கிறார். அதிலும் அந்த முன்னந்தி பாடலில் ரொமான்ஸ் தூள் பறக்கிறது சூர்யாவிடம். இறுதி காட்சிகளில் ஷ்ருதிக்கு முக்கியத்துவம் இருந்தாலும் சிறு சிறு கண் அசைவுகளிலேயே தான் எவ்வளவு சிறந்த நடிகர் என காட்டுகிறார் சூர்யா. சூர்யாவிற்கு இன்னொரு மணிமகுடம் ஏழாம் அறிவு !

ஏழாம் அறிவு விமர்சனம்

ஷ்ருதி :

கமல் பெண்; சோடை போகவில்லை. சைன்டிஸ்டாய் அவர் காட்டும் சீரியஸ்னெச்சில் பிரகாசிக்கிற அவர் காதல் காட்சிகளில் கொஞ்சம் திணறுகிறார். முன்னாள் காதல் இளவரசனின் மகள் கொஞ்சம் ரொமான்ஸ் பிக்கப் பண்ண வேண்டும். ஆனால் வில்லனுடன் மோதும் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.

வில்லன் ஜானி : ஏழாம் அறிவு படத்தின் ஹைலைட் இவர்தான். ஃபைட்டாகட்டும் ஒரு நோக்கு வர்ம பார்வையாகட்டும், மனிதர் மிரட்டுகிறார். சூப்பர் புது வரவு தமிழ் சினிமாவுக்கு ! காஸ்டிங்கிற்காக ஏ.ஆர்.முருகதாஸை பாராட்ட வேண்டும்.

இசை : ஹாரிசுக்கு இன்னொரு மைல்கல் ஏழாம் அறிவு . முன்னந்தியில் மெலடியில் பின்னிவிட்டு மற்ற பாடல்களில் படத்தின் கதைக்காக தன் டெரிடரி விட்டு வந்திருக்கிறார் ஹாரீஸ். ஓ ரிங்கா ரிங்கா ரிதம் சூப்பர் என்றால், யம்மா யம்மா எஸ்பிபியின் குரலில் சூப்பர் வின்டேஜ் . இன்னும் என்ன தோழாவை இன்னும் பெட்டராய் செய்திருக்கலாம்.  ரீ ரெக்கார்டிங்கிலும் சில இடங்களில் சறுக்குகிறார் ஹாரீஸ்.

ஏழாம் அறிவு

கேமரா : நிச்சயம் அவார்ட் கிடைக்கும் கேமராவுக்கும் ஆர்ட் டைரக்ஷனுக்கும். அந்த அளவிற்கு விஷுவல் ட்ரீட் ஏழாம் அறிவு.  ரவி கே சந்திரன் கலக்கியிருக்கிறார்.

இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யா காம்பினேஷன் கஜினியில் தந்த எதிர்பார்புக்களை சமாளித்தாக வேண்டும் என்ற ப்ரஷரை தள்ளி வைத்து விட்டு ஒரு வித்தியாசமான பீரியட் + சைன்ஸ் ஃபிக்ஷனை தந்திருப்பதற்கு ஏ.ஆர்.முருகதாசைப் பாராட்ட வேண்டும். பழங்கால ஆர்டிஃபேக்ட்ஸ் முதல் பழக்க வழக்கம் வரை, சர்க்கஸில் நெட் தாவும் காட்சியில் கை மேனரிசம் வரை முருகதாஸ் எந்த அளவுக்கு டீடெயிலாக ஸ்க்ரிப்ட் பண்ணியிருக்கிறார் என ஒவ்வொரு காட்சியும் அவர் உழைப்பை சொல்கிறது.  கடைசி காட்சிகளில் அவர் டென்ஷன் கூட்டுவது முருகதாஸ் ஸ்பெஷல். தமிழர்களின் பெருமையை சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்ததற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் !

ஏழாம் அறிவு விமர்சனம்

பார்க்கலாமா ?

கட்டாயம் !

ஃபைனல் வெர்டிக்ட் : ஏழாம் அறிவு – அறிவாற்றல் !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>