ஏலக் கடைக்கு வந்த அலோசரஸ் எலும்புகள்:
அரிய பொருட்களை ஏலம் விடும்போது, ஹைதர் காலத்து அரிய கலைப் படைப்புகள் வருவது சகஜம். ஆனால், ஜுராசிக் யுகத்தைச் சேர்ந்த எலும்புக் கூடுகள், பற்கள் போன்றவையும் எட்டிப் பார்த்து சிரிப்பது அவ்வப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. வரும் நவம்பரில், டைனோசருக்கு ஒன்றுவிட்ட உறவான அலோசரஸ் என்ற விலங்கின் எலும்புக்கூடு ஏலத்திற்கு வருவதாக . ‘சம்மர்ஸ் ப்லேஸ் ஆக்ஷன்ஸ்’ அன்ற ஏல நிறவன்ம் அறிவித்திருக்கிறது. ஏறக்குறைய முழுமையாக உள்ள அலோசரஸின் கூடு, 9 அடி நீளம் இருக்கிறது. பிரிட்டனில் முதல் முறையாக ஏலத்திற்கு வரும் இந்த வகை எலும்புக்கூடு , நிச்சயம் சகாய விலைக்குப் போகாது. குறைந்தது , 5 கோடியே 13 லட்சம் தேறும் என்று புதைபொருள் வல்லுனர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். உயிரியல் வல்லுனர்களின் கணிப்புப்படி, அலோசரஸ் விலங்கு , 155 முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம். அதாவது ஜுராசிக் யுகம் முடியும் கட்டத்தை சேர்ந்த பிராணி இது. அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்திலுள்ள கல் குவாரியை தோண்டும்போது தட்டுப்பட்டது. இந்த அலோசரஸ் , விலங்கின் மண்டையோட்டில் இருக்கும் பற்கள் , இடுப்பில் செருகும் கட்த்தியளவுக்குப் பெரியவை. ஜுராஸிக் யுகத்தைச் சேர்ந்த விலங்குகளின் மிச்சம் மீதிகள் எது கிடைத்தாலும், போட்டி போட்டு வாங்கிகொண்டுபோய் தங்கள் சொந்த சேகரிப்பில் வைத்துக்கொள்ள ஐரோப்பிய , ஆசிய பெரும் பணகாரர்கள் முந்தியடிப்பதாக ஏல நிறுவனத்தின் இயக்குனரான ரூபர்ட் வான்டெர் வெர்ப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே ஏல நிறவனம் டைப்லோடோகஸ் விலங்கின் எலும்புக்கூட்டை, 4.94 கோடி ரூபாய்க்கு டென்மார்க் கண்காட்சியகத்திற்கு விற்றது. டைனோசர் இறந்தாலும் கோடி; அதை சினிமாவில் உயிர்ப்பித்தாலும் கோடி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments