/* ]]> */
Aug 032010
 
நீங்கள் நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு பதிவு செய்துவிட்டு நடையாய் நடக்கிறீர்களா? அதன் விவரங்களைக் கேட்டால் உங்கள் வழக்கறிஞர் “ஏன் சார் சும்மா சும்மா ஃபோன் போடறீங்க? “ என்று அலுத்துக் கொள்கிறாரா? கவலை வேண்டாம். கர்நாடகா உயர் நீதி மன்றம் ஒரு எஸ்.எம்.எஸ் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த சேவையின் மூலம் வழக்குகளின் தற்போதைய நிலையை ஒரு எஸ்.எம்.எஸ் ( குறுஞ்செய்தி) அனுப்பி நாம் தெரிந்து கொள்ள முடியும். NIC உடன் இணைந்து உயர்நீதி மன்றம் இந்த சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

KARHCCS Case Type Case No Case Year Bench


என்ற குறுஞ்செய்தியை 9212357123 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உங்கள் வழக்கின் தற்போதைய நிலை உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். இந்த சேவை முற்றிலும் இலவசம். இந்த வசதியின் எல்லா செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுள்ளது. கர்நாடகாவில் இந்த சேவை எப்படிப் போகிறது என்று பார்த்துவிட்டு எல்லா மாநிலங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுமா? இந்த சேவை கர்நாடகத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட முதல் வாரத்திலேயே 1500 குறுஞ்செய்திகள் வந்து விட்டன. ஆகவே இந்த சேவை வெற்றி பெறப் போவது நிச்சயம்.
ஆனா பாத்துங்க , “நாட்டாமை, தீர்ப்பை மாத்தி சொல்லு”ன்னு எஸ்.எம்.எஸ் அனுப்பாம இருந்தா சரிதான்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>