எஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள்? ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா?
ஆர்க்டிக் பகுதிகளில் எஸ்கிமோக்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வர். அந்த வீட்டை ‘இக்ளூ’ என்று அழைப்பர். பார்ப்பதற்கு இது அரைக் கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளிக்கும் என்றாலும் உண்மையில் இது பரவளையவுரு (paravalaiyaboloid ) வடிவம் கொண்டது. இந்த வடிவத்தின் அழுத்தம், ஐஸ்கட்டிகள் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதற்கு உதவுகிறது.
இந்த வீடுகளைக் கட்ட எந்த வகைப் பனிக்கட்டியை வேண்டுமானாலும் பயன்படுத்திவிட முடியாது. அது சரியான வகையில் வெட்டுவதற்கு உகந்ததாக இருக்கவேண்டும். அடுக்குவதற்கு இடம் தரும் வகையிலும் இருக்ண்டும். உறுதியானதாகவும் இருக்கவேண்டும். இதனை தகுதிகளும் கொண்டதாக காற்றினால் அடித்து வரப்படும் பனிக்கட்டிகள்தான் கருதப்படுகின்றன. இந்த வகைப் பங்க் கட்டிகளை ஒன்றோடொன்று பிணைத்து இறுக்கமாக வைக்கப்படுகின்றன.
வாசல் கதவைத் திறக்கும்போது குளிர் காற்று வேகமாக உள்ளே செல்லக்கூடாது. வெப்ப இழப்பும் இருந்துவிடக்கூடாது. இதற்காக ‘இக்ளூ’ வீடுகளின் வாசல் பகுதியில் குறுகலான ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்படும். இந்த வகை வீடுகளின் உட்புறத்தை தோலால் மூடுவதும் உண்டு. இதன் காரணமாக உள்ளே இருக்கும் வெப்பநிலை இரண்டு டிகிரியிலிருந்து 10 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.
*************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments