/* ]]> */
Feb 212020
 

எள்ளும் கொள்ளும்:

HORSE GRAMSESAME

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி.  இரண்டையும் உணவாகக் கொண்டால், உடலை ஆரோக்கிய நிலையில் பேணும் என்பதுதான் இதன் பொருள்.

எள்ளு:

இதை உணவாக்க கொண்டால்,

  • அசதியைப் போக்கி புத்துணர்ச்சி ஊட்டும்.
  • மூளைக்கு தெளிவு தரும். பசியைத் தூண்டும்
  •  வாயுவால் ஏற்படும் வலியைக் குறைக்கும்.
  •  பெண்ணின் கர்பப்பை வலியைப் போக்கும்.
  •  எள்ளை தூளாக்கி சுடு சாதத்துடன் நல்லெண்ணெய் கலந்து சாப்பிடலாம். வெல்லப் பாகுடன் எள் கலந்து உருண்டை கொழுக்கட்டை செய்து சாப்பிடலாம்.
  • பல், ஈறு, தாடைகளில் குறையுள்ளவர்கள் எள் விதையை மென்றால் பலன் கிடைக்கும்.
  •  நீரிழிவு நோயாளிகளும், மாதவிடாயின்போது வயிற்றுவலியால் அவதியுறும் பெண்களுக்கும் எள் கலந்த உணவு நல்ல பலன் தரும்.
  • எள்ளை செக்கிலிட்டு ஆட்டினால், நல்லெண்ணெய் கிடைக்கும். இதுவும் சிறந்த உணவுப் பொருள். நல்லெண்ணெய் உடலில் தேய்த்தால், தோலின் வழி ஊடுருவி வியர்வையை முறையாக வெளியேற்றும்.
  •  நல்லெண்ணெய் தசைகளின் தேவையற்ற கழிவுகளை தங்க விடாமல் அகற்றும். தசைக்கு பலமும் , தோலுக்கு மென்மையும், மயிர்க் கால்களுக்கு திடமும் கேசத்திற்கு கருமையும் தரும்.
  •  நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் நலத்தைக் காக்கும்.

கொள்ளூ:

  • இதைக் கஞ்சியாக தயாரித்துப் பருகினால், ஜலதோஷம் மூச்சுத் திணறல் உப்புசம் போன்ற உபாதைகள் நீங்கும்.
  • கொள்ளு உணவை எளிதாக ஜீரணமாக்கும்.
  • கொள்ளு உடல் சூட்டை அதிகரிக்கும்.
  • கொள்ளு தானியத்தைப் பொடியாக்கி, புளித்த மோருடன் கலந்து, சூடாக்கி உடலில் பூசினால், கொழுப்பு கரையும். உடல் இளைக்கும். உடலின் வெளிப்புற பூச்சு மருந்தாக பயன்படுத்துவது பலனைத் தரும்.

********************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>