/* ]]> */
Mar 072018
 

எலியை மட்டும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது ஏன்?

rats used in research

ஆய்வாளர்கள் எலியை சோதனை விலங்காகப் பயன்படுதுவதில் பல காரணங்கள் உள்ளன. எலியைப் பராமரிப்பது எளிது. புதிய இடத்திலும் எளிதில் புழங்கி இயல்பாகிவிடும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளே வாழும் என்பதால், , பல தலைமுறைகளை உற்றுநோக்கி சோதனைகளைச் செய்ய முடியும். சோதனைக்கு உட்படும் எலிகளுக்கு இடையே மரபணு பரவல் குறைவாக இருக்கும். எனவே பல எலிகளில் நடத்தப்படும் சோதனை மேலும் துல்லியமாகும். மரபணு பரவல் அதிகம் கொண்ட எலிகளில் எலிகளில் புதிய மருந்தைச் சோதனை செய்யும்போது  இருக்கும் உடல்வாகு  வியாதியாலா அல்லது மருந்தால் ஏற்பட்டதா என்ற குழபப்ம் ஏற்படும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எல்லா எலிகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மரபணு பரவல் கொண்டவை என்றால்,  உடல்வாகு எல்லாவற்றுக்கும் ஒன்றுபோலவே இருக்கும். எனவே மருந்தின் விளைவுகளைத் தெளிவாகப் பிரித்து அறிய முடியும்.

உடலின் செயல் அடிப்படையில் மனிதர்களி ஒத்தது எலியின் அமைப்பு. மனிதருக்கு ஏற்படும் நீரிழிவு போன்ற நோய்களை எலிகளுக்கு செயற்கையாக ஏறப்டுத்தி, புதிய மருந்துகளின் வீரியம் குறித்து ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதாலேயே அதிக அளவில் எலியை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>