/* ]]> */
Aug 052010
 
எபிக் ப்ரவுசர் – முதல் இந்திய ப்ரவுசர் – எப்படி?
முதலில் பிரபலமான ப்ரவுசர் நெட்ஸ்கேப் நேவிகேடர். பின்னர் ப்ரவுசர் என்றாலே இன்டர்னெட் எக்ஸ்ப்லோரர் தான் என்ற நிலைமை ஏற்பட்டது. பின்னர் மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் வந்து மைக்ரோசாஃப்டின் இரும்புக் கோட்டையை தகர்த்தெறிந்தது. கூகுளும் தன் பங்கிற்கு க்ரோம் என்ற பரவுசரை அறிமுகப்படுத்தியது. என்றாலும் கூட 70 சதவிகித மார்க்கெட் ஷேருடன் முண்ணனியில் இருக்கிறது ஃபயர்ஃபாக்ஸ். இப்போது இந்த வரிசையில் முதல் முறையாக இந்தியாவில் இந்தியர்களுக்கெனவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எபிக் என்ற ப்ரவுசர் களமிறங்கியுள்ளது. இந்த எபிக் ப்ரவுசரில் என்னென்ன புதுமை?

1. எபிக் ப்ரவுசரில் நீங்கள் வேறெந்தவித தனி சாஃப்ட்வேரும் இல்லாமலே பல இந்திய மொழிகளில் ( தமிழ் உட்பட) கருத்துக்களை பதிவு செய்யலாம். சேட்டிங்கும் செய்யலாம். இதற்கெனவே “இண்டிக்” என்ற பிரத்யேகமான பட்டன் ஒன்றைக் கிளிக் செய்தால் போதும்.

2. எபிக் ப்ரவுசருடன் கூடவே முழுமையான பன்மொழி வர்ட் ப்ராஸசர் இணைந்தே வருகிறது.

3. “எபிக் இண்டியா” என்ற ஒரு சிறப்பான பகுதி எபிக்குடன் வருகிறது. இதில் இந்தியா சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் இந்திய சானல்கள் சிலவும் கூட நாம் பார்க்கலாம்.

4. எபிக் பரவுசரின் மற்றொரு சிறப்பு இது இன்பில்ட் ஆண்டிவைரஸ்சுடன் வருவதுதான். இதை வைத்து நீங்கள் உங்கள் கணிப்பொறியில் வைத்திருக்கும் ஃபைல்களையும் கூடவே டவுன்லோட் செய்யும் ஃபைல்களையும் வைரஸ் ஸ்கேன் செய்யலாம்.

5. எபிக் ப்ரவுசர் கூகுள் சேர்ச், ஜிமெயில், ட்விட்டர் , ஃபேஸ்புக் போன்ற பிரபல வலைத் தளங்களுக்கு இன்பில்ட் ஷார்ட்கட்களுடன் வருகிறது.
எபிக் ப்ரவுசரை நாம் www.epicbrowser.com என்ற வலைத்தளத்தில் டவுன்லோட் செய்யலாம். இந்தியர்களுக்கென்றே வந்திருக்கும் இந்த இந்திய ப்ரவுசர் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>