/* ]]> */
Sep 222010
 
ரஜினி ஏன் என்றைக்கும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்பதற்கு இந்த பேச்சு ஒரு சாட்சி.  எந்திரன் படத்தின் ஹிந்திப் பதிப்பான ரோபோ வின் அறிமுக விழாவில் ரஜினி பேசிய பேச்சின் ஒரு பகுதியைப் பாருங்கள்
இதில் ரஜினி தன்னை ஒரு ராஜஸ்தானியர் வந்து சந்தித்ததைப் பற்றி சொல்கிறார்:
ராஜஸ்தானியர் : என்னா ரஜினி முடியெல்லாம் எங்கே போச்சு?
ரஜினி : போச்சுப்பா !
ராஜஸ்தானியர் : அப்புறம் என்னா ரிடையர் ஆயிட்டு ஜாலியா இருக்கியா?
ரஜினி : இல்லப்பா இன்னும் படத்துல நடிச்சுட்டு தான் இருக்கேன்.இப்பக்கூட ரோபோன்னு ஒரு படத்துல நடிக்குறேன். ஐஷ்வர்யா தான் ஹீரோயின்.
ராஜஸ்தானியர் : அப்படியா ! சரி, யார் ஹீரோ?
( பலத்த சிரிப்பு)
ரஜினி : நான் தாம்பா ஹீரோ!
ராஜஸ்தானியர் அதிர்ச்சியாகிறார். கொஞ்ச நேரம் கழித்து அவர் வெளியே சென்றபின் அவர் வெளியே பேசுவது ரஜினிக்கு கேட்கிறது. 
” இந்த ஐஷ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? “ 
இதை ரஜினியே வர்ணித்துவிட்டு ஐஷ்வர்யா ராயைப் பார்த்து “என்னுடன் சேர்ந்து நடித்ததற்கு நன்றி!” என்று சொல்கிறார்.
யாருக்கு இப்படி வெளிப்படையாய் பேச தைரியம் வரும் ? எந்த நடிகர் இந்தியாவில் இவ்வளவு தன்னடக்கத்தோடு நடந்து கொள்கிறார்கள். இந்த நகைச்சுவை கலந்த வெளிப்படையான பேச்சின் மூலம் ரஜினி குணத்திலும்  எளிமையிலும் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>