/* ]]> */
Aug 162010
 

எந்திரன் ஏன் ஓடாது? பாயின்ட் பை பாயின்ட் அலசல்:

எந்திரன் ஷங்கர்-ரஜினி-ரஹ்மான்-ஐஷ்வர்யா கூட்டணியில் ரிலீசாகப்போகும் 250 கோடி பட்ஜட் படம். செப்டம்பர் மாதம் ரிலீஸ். ஆனால் படம் ரிலீசாவதற்கு முன்பே அது நிச்சயம் ஃப்ளாப் என்று ஆரூடம் சொல்வதற்கு பல பாயின்டுகள் அல்லது திரையுலக் செண்டிமெண்டுகள் இப்போது கோடம்பாக்கத்தில் வலம் வந்து எந்திரனை விலை பேசும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கிலி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது…

1. ஐஷ்வர்யா ராய் நடித்த எந்த தமிழ் படமும் ஓடியதில்லை… இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் போன்ற மெகா ஃப்ளாப்புகளையும் ஜீன்ஸ் போன்ற ஆவரேஜ் பாஸ் படங்களில் மட்டுமே ஐஷ்வர்யா தமிழில் நடித்திருக்கிறார். ஐஷ்வர்யா நடித்தாலே அந்த தமிழ்படம் ஃப்ளாப் என்ற செண்டிமென்ட் எல்லா விநியோகஸ்தர்களையும் யோசிக்க வைத்திருக்கிறது.

2. சமீப காலமாக, ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் நாயகனாக புகழப்பட்டாலும் யுவன் ஷங்கர், ஹாரீஸ் ஜெயராஜ் என்றால் சப்புக் கொட்டும் விநியோகஸ்தர்கள் ஏ.ஆர்.ஆர் மியூசிக் என்றால் கொஞ்ச்ம் செண்டிமென்டாய் யோசிக்கிறார்கள். சமீப காலமாய் வந்த அவர் இசையில் வெளி வந்த படங்களான சக்கரக்கட்டி, ராவணன் ஆகிய படங்கள் அவர்களை அப்பட்சி நினைக்கத் தூண்டுகின்றன. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா ஓடவில்லையா என்று எதிர்கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

3. ஷங்கருக்கு ஒரு செண்டிமென்ட் இருக்கிறது. அவர் சீரியஸ் படங்களை “ன்” ல் முடித்தும் ஜாலி படங்களை “ஸ்” ல் முடித்தும் எடுப்பார். அதே மாதிரி ஒரு ஜாலி ஒரு சீரியஸ் என்று மாறி மாறி எடுப்பார். ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் என்று “ன்” எல்லா “ன்” முடிவு படங்களும் சீரியஸ் படங்கள். அந்த வகையில் வருவதுதான் எந்திரன். ஆனால் அதிலும் ஒரு செண்டிமென்ட் தடங்கல். ஷங்கரின் பாய்ஸ் படம் படுதோலிவியடுத்து அவர் அந்நியன் எடுத்து வெற்றி கண்டார். ஆனால் அடுத்தது ஜாலி படம் எடுப்பதற்கு பதில் சிவாஜி என்று “ஸ்” “ன்” இரண்டு சென்டிமென்ட்களையும் விட்டு வெளியே வந்தார். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை எந்த சென்டிமெண்டுமே அதற்கு மதிப்பு கொடுக்கும் வரைதான் செல்லுபடியாகும். அதை விட்டு வெளி வந்து விட்டால் வேலை செய்யாது. எப்போது ஷங்கர் தன் “ஸ்” “ன்” ராசி வீடு வெளிவந்தாரோ அப்போதே “ன்” ல் முடியும் அடுத்த படமான எந்திரனுக்கு அந்த ராசி வேலை செய்யாது. அது ஃப்ளாப் தான் என்று பல செண்டிமெண்டுகள் கநொறுங்கப் பார்த்த திரை செண்டிமெண்டுகளில் கொட்டை போட்ட ஆட்கள் சொல்கிறார்கள்.4. எஸ்.பி.பிக்கும் ரஜினி படங்களுக்கும் ஒரு பெரிய செண்டிமென்ட் தொடர்பு உண்டு. எஸ்.பி.பி ரஜிக்கு தனிப்பாடல் ( கூடுமானவரை அறிமுகப் பாடல்) பாடாவிட்டால் அந்தப் படம் ஃப்ளாப். இது தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடமாய் பலர் கண்கூடாய் பார்த்து வரும் செண்டிமென்ட். படப்பிடிப்பே முடித்துவிட்டு பின்னர் எஸ்.பி.பியைக் கூப்பிட்டு பாடவைத்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. ரஜினி இந்த சென்டிமென்டை கவனிக்கத் தவறவில்லை. அதனால் தன் சொந்த படமான பாபா படத்தில் இதை முறியடிக்க எஸ்.பி.பிக்கு பாட்டே தரவில்லை. ஷங்கர் மகாதேவனை வைத்து அறி முக பாடல் பாட வைத்தார். படம் சூப்பர் ஃப்ளாப். அதனால் அவரும் சந்திரமுகி, சிவாஜியில் மீண்டும் எஸ்.பி.பி தனிப்பாட்டு ஃபார்முலாவுக்கு வந்து விட்டார். ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் எந்திரன் சிடியில் எஸ்.பி.பி ஒரே ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அதுவும் தனிப்பாடல் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானோடு சேர்ந்து பாடியிருக்கிறார். பாடல் வரிகளைக் கேட்டார் “ரோபோ”வின் அறிமுகம் போல் தோன்றினாலும் படத்தின் அறிமுகம் போலில்லை. அதனால் இந்தத் தனிப்பாட்டு சென்டிமென்ட் படி பார்த்தால் எந்திரன் நிச்சயம் ஃப்ளாப்.

5. இன்னொரு செண்டி மெண்ட்… படம் ரிலீஸ் இழுத்தடித்தால் படம் நிச்சயம் ஃப்ளாப்.. இது கமலின் விக்ரம் காலம் முதல் இருந்து வரும் செண்டிமெண்ட். அந்த வகையில் எந்திரன் இரண்டரை வருட தயாரிப்பு. ஜூலை, ஆகஸ்ட் என்று இழுத்தடித்து இப்போது செப்டெம்பர் வரை போய்விட்டது. இதை வைத்தே இது ஃப்ளாப் என்று சொல்லும் கோலிவுட் பட்சிகள் ஏராளம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>