/* ]]> */
Aug 022010
 

எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த எந்திரன் படத்தின் பாடல்கள் வெளிவந்துவிட்டன. ஷங்கரும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தாலே பொறி பறக்கும். அதிலும் ரஜினியும் அதில் சேர்ந்துவிட்டால் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுவது எதிர்பார்க்கப் பட்டதுதான். ஏழு பாடல்களுடன் வெளிவந்திருக்கிறது எந்திரன் பாடல் குறுந்தட்டு.

அரிமா அரிம: ஹரிஹரனும் சாதனா சர்கமும் பாடியிருக்கிறார்கள். எந்திரா என்பதை ஒருவித பன்சோடு ஹரிஹரன் பாடுகையில் இது “அதிரடிக்காரன் மச்சான்” என்ற சிவாஜி படப் பாடல் போல ஒரு ரஜினி பன்ச் டூயட்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. “அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன் அக்கினி அணையலியே!” அன்ற வரிகளின் கவிநயம் அருமை! “நான் மனிதன் அல்ல அஃறிணையின் அரசன் நான்!” என்று ரோபோவை வர்ணித்திருப்பது புதுமை! “ரோபோவை போபோ என்னாதே!” என்ற வரிகளில் குறும்பு! வைரமுத்து கலக்கியிருக்கிறார்.
புதிய மனிதா : எஸ்.பி.பி , ஏ.ஆர்.ரஹ்மான், கதிஜா ரஹ்மான் பாடியிருக்கிறார்கள். எஸ்.பி.பியின் குரலில் இன்னமும் அந்த மந்திரம் இருக்கிறது என்பதை அவர் எந்திரா என்று சொல்லும்போதெல்லாம் அறிகிறோம். “கருவில் பிறந்த எல்லாம் மறிக்கும் அறிவில் பிறந்த எதுவும் மறிப்பதில்லை!” ”தந்திர மனிதன் வாழ்வதில்லை! எந்திரன் வீழ்வதில்லை!” போன்ற வைரமுத்துவின் தத்துவத் துளிகளுக்கும் குறைவில்லை!
கிளிமஞ்சாரோ : ஜாவத் அலியும் சின்மாயும் பாடியிருக்கிறார்கள். கலகலப்பான டூயட். எந்திரன் படத்தில் வெகு விரைவாக ஹிட் ஆகக்கூடிய பாடல் இதுவாக இருக்கும்! அஹா அஹா என்று கொஞ்சம் வட இந்திய ஸ்டைலில் ஆரம்பித்தாலும் துரித வேக பீட்டோடு ஏற்றம் எடுக்கிறது இந்தப் பாட்டு. “எண்ணிக்கோ நீ” என்று சின்மாய் சொல்லும் இடம் சுவையோ சுவை! சின்மய் தான் இதுவரை பாடிய பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் பாடியிருக்கிறார். பா.விஜய் எழுதியிருக்கும் ஒரே பாட்டு. தன் வழக்கமான ரைமிங்கில் அசத்தி இருக்கிறார்.
காதல் அணுக்கள் : விஜய் பிரகாஷும் ஷ்ரயா கோஷலும் பாடியிருக்கிறார்கள். வரிகளின் வார்த்தை விளையாட்டா, ரஹ்மானின் தீம் தோமா. ஷ்ரயா கோஷலின் இனிமையா, விஜயின் ஓ பேபி சொல்லும் லாவகமா எதை ரசிப்பது என்று தெரியாமல் நம்மை லயிக்க வைக்கும் பாடல். “பட்டாம் பூச்சி கால்களை கொண்டு ருசியறியும் மனிதப் பூச்சி கண்களை கொண்டு ருசியறியும்” என்று வைரமுத்து அறிவியலையும் காதலையும் சரி சம்மாய் தெளிக்கிறார். ஒரு பெப்பியான அதேசமயம் மெலடியான டூயட் காதல் அணுக்கள் டாப் டென்களை ஆக்ரமிக்கப் போவது நிச்சயம்.
பூம் பூம் ரோபோடா : யோகி, கீர்த்தி சகாதியா , ஸ்வேதா , தன்வி ஷா : ட்ரம்களின் பீட்டும் இடையில் தெறிக்கும் அந்தத் திகிடதிகிட தத்தகாரமுமாய் பாட்டை எங்கோ கொண்டு போய்விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். என்றாலும் கூட இடையில் ஏனோ மைக்கேல் ஜாக்ஸனின் “பேட்” ஆல்பம் நினைவுக்கு வருகிறது. வைரமுத்து மகன் கார்க்கி இயற்றியிருக்கும் பாட்டு.

இரும்பிலே ஒரு இதயம் : ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார். காஷ, க்ரிஸ்ஸியும் இணைந்திருக்கிறார்கள். சௌண்ட் மிக்சிங்கில் புதுத்தடம் தொடுகிறது இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் மிக மிக மென்மையாய் பாடியிருக்கிறார். குரலில் நல்ல மெருகு. ஃப்யூஷன் ஸ்டைலை கொஞ்சம் கொஞ்சம் தொடுகிறது பாட்டு. ஒரு அசத்தலாமன மேற்கத்திய பாணி டூயட். பாடல் வரிகளில் ஒரு ரோபோ காதலிப்பதின் வித்தியாசத்தை அழகாக புரிய வைக்கிறார்கள். இடையில் வரும் ராப் எங்கோ கேட்ட மாதிரியே இருப்பதை தவிர்த்திருக்கலாம். கார்க்கி தந்தையின் அறிவியல் வரி எழுதும் திறனை தொட முயன்றிருக்கிறார்.
சிட்டி டேன்ஸ் : ப்ரதீப் விஜய் , ப்ரவீன் மணி, யோகி பாடியிருக்கிறார்கள். பூம் பூம் ரோபோடா பாட்டின் ராப் வடிவம். இசைக்கருவிகளின் பிரவாகம் இந்தப் பாட்டு! இடையில் வரும் வயலின் மென்மையான டச். சட்டென்று த்த்தித்தா ஆரம்பிப்பதும் சூப்பர்! நிச்சயம் கல்லூரிகளிலும் டிவி டான்ஸ் ஷோக்களிலும் அடிக்கடி கேட்கப் போகும் பாட்டு!

எந்திரன் எதிர்பார்ப்பை ஏ.ஆர்.ஆர் காப்பாற்றிவிட்டார்! இனி ஷங்கரும் ரஜினியும் காப்பாற்றுவார்களா? பார்ப்போம்….

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>