/* ]]> */
Sep 132010
 
 எந்திரன் ட்ரெய்லர் ரிலீஸ் விழா – சன் டிவியின் அடுத்த சொதப்பல்

நேற்று இரவு சன் டிவியில் எந்திரன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் விழாவினை ஒளிபரப்பினார்கள். ஆமாம்…ட்ரெய்லர் ரிலீஸ் விழா! சனிக்கிழமை அன்று சரியாக விநாயகர் சதுர்த்தி அன்று தமைழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் புடை சூழ, பாலாபிஷேகம் நெய்யாபிஷேகம் எல்லாம் நடத்தி, திருநெல்வேலியில் ஒரு படி மேலே போய், ட்ரெய்லர் படச்சுருள் பெட்டியை யானை மீது ஊர்வலமாய் கோவிலில் இருந்து எடுத்து வந்து… இப்படி என்னவெல்லாம்  கிறூக்குத்தனம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்து.. ட்ரெய்லரை தியேட்டர்களில் ஓடவிட்டு , பின்பு அன்று மாலையே நடந்திருக்கிறது இந்த விழா. சன் பிக்சர்ஸ் படமான எந்திரன் ட்ரெய்லர் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்தது மங்களகரமான விஷயம் ( திரவிட கழக கொள்கைகளுக்கேற்ப..?) . ஆனாலும் கூட.. ட்ரெய்லர் நம்மை மெய் மறக்க செய்தது என்னவோ உணமை. ஆங்கிலப் படத்துக்கு இணையான தொழில் நுட்பம் கொண்டது எந்திரன் என்பதை ட் ரெய்லர் நிரூபித்தது.

ட்ரெய்லர்

ஒரு சேஞ்சுக்காக கருணாசை தொகுத்து வழங்க சொல்லியிருக்கிறார்கள். கருணாஸ் விவேக் ம்லேஷியாவில் செய்தது போல் எந்த சோதனை முயற்சியும் செய்யாமல் கருமமே கண்ணாய் அதை செய்தார். சில இடங்களில் புகழாரங்களை மறந்து விடுவோமோ என பயந்து காகிதத்தை பார்த்து படித்தார். வந்து பேசிய கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர் மூன்று விஷயங்களை கிட்டத்தட்ட ஒப்பிப்பதைப் போல சொன்னார்கள்..
1. எந்திரன் படத்தை இவ்வளவு பணம் போட்டு எடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் திரையுலகத்துக்கே பெரிய சேவை செய்திருக்கிறார்.
2. எந்திரன் இதுவரை யாரும் பார்க்காத சாதனை படம்.
3. ரஜினி போன்ற எளிமையான சூப்பர் ஸ்டார் யாரும் இல்லை
மூன்றுமே உணமைதான் என்றாலும் அரைத்த மாவையே எத்தனை பேர் திரும்பத் திரும்ப அரைப்பது? இது த்விர சில வித்தியாச விஷயங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறோம்.
பாக்கியராஜ் உள்ளது உள்ளபடி பேசினார். இந்த விலைக்கு படத்தை விற்றால் எனக்கெல்லாம் தூக்கமே வராது என்று அப்பவித்தனமாய் சொன்னார். எந்திரன் ஒரு விஷப்பரீட்சை என்று எல்லோர் வயிற்றுலும் புளியைக் கரைத்தார். வி.சி.குகநாதன் எப்படி “நாடோடி மன்னன்” எம்.ஜி.ஆருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ எப்படி எந்திரன் ரஜினிக்கு அமையும் என்று ரஜினியின் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஆர்யா அட்டெண்டென்ஸ் கொடுத்துவிட்டுப் போனார். பார்த்திபன் கலாநிதி மாறனுக்கு புது விளக்கம் சொல்லி மாறனைக் கவர்ந்தார்… கலையில் லாபமாக நிதியை ஈட்ட நிர்வாகத் திறன் வாய்ந்தவராம்… ரூம் போட்டு யோசிப்பாங்களோ! ஆனாலும் அவர் ” நாங்க இவ்வளவு புகழ்ந்து பேசறோம் ! அதுக்காக நீங்க காசு பணமெல்லாம் தர வேண்டாம். எந்திரன் படத்துக்கு ஒரு டிக்கெட் கொடுங்க! அதுவும் முழுசா வேணாம், அரை டிக்கெட் கிழிச்சுட்டு கொடுங்க !” என்று சொன்னது பார்த்திபன் பன்ச். விவேக் தான் பாவம். இப்போதெல்லாம் அவர் சொல்லும் ஜோக்குகளுக்கு அவரைத் தவிர யாரும் சிரிக்க மாட்டேன் என்கிறார்கள். ரஜினி ஷங்கர் ஹார்ட்வொர்க் கலாநிதி ஸ்மார்ட் வொர்க் என்று உளறிக்கொட்டி யாரும் கைதட்டாததால் அவரே கைதட்ட சொல்லி , அவரே அதையும் “கேட்டு வாங்க வேண்டியிருக்கு” என்று சொல்லி… பாவம்பா! அபிராமி ராமநாதன் எந்திரன் பட ரிலீஸ் தேதியே தெரியாத போது கூட ரசிகர்கள் “முதல் நாள் மேட்னி ஷோ” என்று போட்டு டிக்கெட் கொடுங்கள் என்று சொன்னது எந்திரன் படத்தின் எதிர்பார்ப்பை காட்டியது. ஆனாலும் ஒரு ஹீரோயின் கூடவா இவர்களுக்கு கிடைக்கவில்லை. நிகழ்ச்சி ட்ரையாய் இருந்ததற்கு இது ஒரு காரணம்
சுந்தர் சி அழகாக பேசினார். ரஜினி எல்லருமே “ஃபேன் மாதிரி; ஆண்டவன் ஸ்விட்சை ஆஃப் பண்ணிடுவான்.அதுக்கப்புறம் நாமளா கொஞ்ச்சம் சுத்தி ஓட்டணூம்” என்று சொன்னதாகவும் நாமெல்லாம் ஃபேனுக்குள்ள் இருந்து சுத்த பாக்கறோம். ஆனால் ரஜினி ஃபேன் மேல நின்னு சுத்தறார்” என்று சொன்னது  இன்டெலெக்சுவல் பன்ச். ஷங்கர் எந்திரனைப் பற்றி நம்பிக்கையோடு பேசினார். ட் ரெய்லரில் முதன்முறையாக தான் ஹைலைட் சீன்களைக் காட்டுவதாக சொன்னார். எப்படி சிவாஜியில் மொட்டை பாஸ் ரஜினி பத்து நிமிடம் கலக்கினாரோ அப்படி எந்திரனில் சைண்டிஸ்ட் ரஜினி, ரோபோ ரஜினி தவிர மூன்றாவதாக ஒரு ரஜினி 45 நிமிடம் கலக்கப் போவதாக சொன்னார். சுஜாதா பற்றி நினைவு கூர்ந்தார். எந்திரனில் ஒரு கொசுவின் பெயர் “ரங்கூஸ்கி” என்றும் அது சுஜாதாவின் சின்ன வயசு நிக் நேம் என்றும் சொன்னார். கொசு கிராஃபிக்ஸில் கலக்கியது…  கலாநிதி மாறன் “ரஜினி” எந்திரன் படத்தின் மூலம் இந்திய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதாக சொன்னார்..

சரத்குமார் ரஜினியின் எளிமையை பற்றி சிலாகித்தார். அவர் நினைத்தால் ஃபெர்ராரி காரில் வரலாம் ஆனாலும் எளிமையாய் வலம் வருகிறார் என்றார். ஷங்கரை ஜெண்டில்மேனில் மிஸ் செய்ததற்காக தான் இப்போதும் வருந்துவதாக சொன்னார். வைரமுத்து பேசுகையில் ” ரஜினி எப்போது ஜப்பானில் புகழடைந்தாரோ அப்போதே அவர் “இன்டர்நேஷனல் ஸ்டார் ஆகிவிட்டதாக சொல்லி கலாநிதி மாறன் முன்னர் சொன்னதை மறுப்பதைப் போல பேசினார். ஆனாலும் அவரும் கலாநிதி மாறனுக்கு ஐஸ் வைக்க தவறவில்லை. ஒரு சீனின் ரீரெக்கார்டிங்குக்காக  ஏ.ஆர்.ரஹ்மான் “60 லட்சம்” செலவாகும் என்பதால் தயங்கியதாகவும் ஆனால் மாறன் உடனே ஓகே சொன்னதாகவும் சொன்னார். ஒரு விஷய்ம நன்றாய்த் தெரிகிறது.. ரஜினியை பக்கத்தில் வைத்துக் கொண்டே இத்தனை பேர் ரஜினையை விட கலாநிதி மாறனை அதிகம் புகழ்கிறார்கள் என்றால் அது சன்பிக்சர்ஸ் எவ்வளவு பெரிய சக்தி என்பதைக் காட்டியது. 
ரஜினி இறுதியாக பேச வந்தார். ஆரம்பத்திலேயே இயல்பான பேச்சால் சிக்ஸர் அடித்தார் தலைவர். “நமக்கு எப்பவுமே பிக்பாக்கெட், திருடன், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுறவன்” மாதிரிதான் ரோல் வரும் . ஆனா இதுல ஒரு சைன்டிஸ்டா நடக்க சொன்னாங்க!” என்று அவர் சிரித்ததும் அரங்கமே சிரித்தது. விவேக் குட்டிக்கதை ஊத்திக் கொண்டதாலேயோ என்னவோ ரஜினி குட்டிக்கதை சொல்லவில்லை. மாறாக தன் எளிமையின் ரகசியத்தை சொன்னார்..” “நீங்கள்ளாம் என்னை இவ்வளவு உயரத்துல தூக்கி வச்சிட்டீங்க. இவ்வள்வு உயரத்துலே இருந்து நான் கீழ விழுந்தா கை கால் ஒடஞ்சிடும் . அதனால தான் சிம்பிளா இருக்கேன். இளமையா இருக்கற ரகசியம் இது தான் ..கொஞ்சம் எக்சர்சைஸ். கொஞ்சம் சாப்பாடு. கொஞ்சம் தியானம். கொஞ்சம் சம்பாதிக்கறது! ” என்று சூப்பர்ஸ்டாரின் தத்துவ ஸ்டைலில் சொன்னார். அடுத்த படம் என்ன பண்ணப் போறீங்கன்னு கேக்கறாங்க. அத நான் ஏன் யோசிக்கணும். பெரிய பெரிய டைரக்டர்ஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டர்ஸ் இருக்காங்க. அவங்க யோசிப்பாங்க! அது என் வேலை இல்லை!” என்று முத்தாய்ப்பாய் முடித்தார் சூப்பர் ஸ்டார். ஆனாலும் கூட ஹைப்பும் கலாநிதி மாறனுக்கும் வைத்த ஐஸ் ஜாஸ்தியாகிப் போனதால் நிகழ்ச்சி டல்தான்… ட்ரெய்லர் மிரட்டிதென்னவோ உண்மை…

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>