/* ]]> */
Oct 182010
 எந்திரன் ஹிட் ஃபீவரில் கோடம்பாக்கமே அதிர்கிறது. எங்க பார்த்தாலும் புது புது ரோபோ கதை எடுத்துட்டு புது இயக்குநர்கள்ளாம் அலைய ஆரம்பிச்சுட்டங்க! அப்படி சில நடிக நடிகையர்ட சொல்லப்பட்டதா நாம் கேட்ட சில கதைகள் தான் இங்கே !

இயக்குநர் : மேடம், உள்ள வரலாமா?

நயன் : ம், வாங்க வாங்க… ஏதாவது ரோபோ டைப்புல கதை வச்சிருக்கீங்களா

இயக்குநர் : ஆமாம், மேடம்…

நயன் : குட் சொல்லுங்க சொல்லுங்க

இயக்குநர் : மேடம்.. கதை ஆரம்பிக்கறப்ப நீங்க சிம்புன்னு சிம்பிளான ரோபோவை வச்சிருக்கீங்க ….அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விரலாட்டறத தவிர எதுவுமே செய்யாத அந்த ரோபோ போரடிச்சு போயிடுது.. அப்பத்தான் ரம்லத்ங்கறவங்க வச்சிருக்க பிரபுங்கற ரப்பர் ரோபோவை பாக்கறீங்க… ரப்பர் மாதிரி வளைஞ்சு வளைஞ்சு ஆடுற அந்த ரோபோ உங்களுக்கு ரொம்ப புடிச்சுப் போயிடுது! உடனே அந்த ரோபோவை உங்க கன்ட்ரோலுக்கு கொண்டு வர்ரீங்க

நயன் : நைஸ் ஸ்டார்ட் யா… மேல சொல்லுங்க…

இயக்குநர் : ஆனா ரம்லத்துக்கு ரப்பர் ரோபோ உங்க கன்ட்ரோல்ல இருக்கறது புடிக்கலை ! அதனால அவங்க போலீஸ்ல கம்ளேயின்ட் கொடுத்துடறாங்க ! நீங்க அந்த ரம்லத்தை சமாளிச்சு ரப்பர் ரோபோவை உங்க கூடவே வச்சிருக்கீங்களான்னுதான் கதை ….

நயன் : நைஸ் ப்ளாட்.. ஐ லைக் இட்… நீங்க கூட இந்தப்பக்கம் சிம்பு மாதிரி அந்தப்பக்கம் பிரபு மாதிரி இருக்கீங்க … ஆமா … உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ….

இயக்குநர் எஸ்கேப் ஆகிறார்…..

————————xxxxxxxxxxxxxx———————-

இளைய தலைவலி சாரி தளபதி விஜய் ஆவேசமா இருக்கிறார்.. உதவியாளர்கள் கவலையோடு பின்தொடர்கிறார்கள் .

” என்ன அண்ணன் அந்நிக்கு பிரஸ் மீட்டுல கோவப்பட்டத விட இன்னிக்கு கோவமா இருக்காரு ?”

“அது ஒண்ணும் இல்லப்பா… காவலன் விஜய்னு போடுறதுக்கு பதிலா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆகிப்போய் கேவலன் விஜய்ன்னு போட்டுட்டாங்களாம்”

“சரி சரி அண்ணனை கூல் பண்ணுவோம்… அண்ணே … நம்ம அடுத்த ப்ராஜக்ட் என்னாண்ணே?”

விஜய் : இப்ப இருக்கற படமே எந்த டிஸ்ட்ரிப்யூட்டரும் வாங்க மாட்டேங்கறான்.. முன்னடியெல்லாம் படம் பார்த்து வாங்க மாட்டானுங்க… ரசிகனுங்க போஸ்டர் பார்த்து படம் பாக்க மாட்டானுங்க… ஆனா இப்ப எல்லாம் படம் ஸ்டில் வந்தோன்னவே “இது ஊத்திக்கும்”னு சொல்லிடறாங்களே அது எப்படி?

உதவி : உங்க ஹேர்ஸ்டைலை வச்சே படத்தோட ரேஞ்ச ஜட்ஜ் பண்ணிடறாங்க !

விஜய் : அசின் படத்துக்கு தடை அது இதுன்னு ஏதாவது பப்ளிசிடி பண்ண வேண்டியதுதான ?

உதவி : பப்ளிசிடியா… பப்ளிசிடில பி.எஹ்.டி பண்ண கலாநிதி மாறனே உங்க படத்துல கவுந்துட்டாரு … இன்னமும் அவங்க வீட்டுல சுறா புட்டு செய்ய தடையாம் தெரியுமா? அசின் மேட்டர்லாம் சப்ப மேட்டர்… பாவம் அந்தப் பொண்ணே விஜய் கூட நடிக்குது போறாத காலம் போலன்னு எல்லாம் அசினுக்கு இரக்கப்படறானே ஒழிய போராட்டம் பண்ண எவனுக்கும் தோணல!

விஜய் : அப்ப இதுவும் காலியா…

உதவி : அட இந்த ப்ராஜக்டை விடுங்கண்ணா ! அடுத்த ப்ராஜக்டுக்கு சூப்பர் கதை ஆந்த்ராவுல இருந்து ரைட்ஸ் வாங்கி வந்திருக்கோம்……..

விஜய் : ஏய் இப்ப நீ கதை சொல்லப் போறியா?

உதவி : ஆமாண்ணே … ஏண்ணே சுத்தி முத்தி பாக்கறீங்க?

விஜய் : அதும் ஒண்ணுமில்ல எங்க அப்பன் இருக்காரான்னு பார்த்தேன்… அந்தாளு கத கேட்டு கத கேட்டு தான் இந்த நிலைமைக்கு இருக்கேன்…..சரி அவரு இல்ல… இப்ப சொல்லு… கதை நம்ம எந்திரன் ரேஞ்சுக்கு இருக்கணும் ஓகே?

உதவி : நீங்க ஒரு சைன்டிஸ்ட்.. ஒரு ரோபோ வை கண்டுபிடிக்கறீங்க… ஆனா வில்லன் அதை கெட்ட ரோபோவா மாத்திடறான்.. நீங்க அந்த ரோபோ கூட மோதி எப்படி ஜெயிக்கறீங்கன்னுதான் கதை..

விஜய் : யே என்ன எந்திரன் ரேன்சுக்கு கதை சொல்ல சொன்னா எந்திரன் கதையே சொல்ற?

உதவி : (திறு திறுவென விழித்தபடி.).. அது ஒண்ணுமில்லண்ணா வழக்கமா நாம தெலுங்குல எந்தப்படம் ஹிட்டானாலும் அதோட ரைட்ஸ் வாங்கிடுவோம்… இப்ப ஆந்திராவுல ரோபோதான் ஹிட்… அதான் உணர்ச்சி வசப்பட்டு அதோட தமிழ் ரைட்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன்!

விஜய் துரத்த உதவி ஓடுகிறார்….

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>