Jan 212016
எண்ணெய் வழியும் முகம்-சிகிச்சை முறைகள்:
கேள்வி: என் முகம் எண்ணெய் வழிகிறது, குறிப்பாக மூக்கைச் சுற்றிலும் அதிகமாக எண்ணெய் வழிகிறது. கன்னத்தில் சிறு சிறு வேணல் கட்டிகளும் உள்ளன. ஏற்கெனவே பரு வந்து மறைந்ததால் ஏற்பட்ட கருப்பு நிறத் திட்டுகளும் இருக்கின்றன. சிகிச்சை முறை என்ன?
பதில்:
- தினமும் காலையிலும், இரவு படுக்கப் போகுமுன்பும் இருமுறை ஒரு மருந்து சோப்பால் முகத்தைக் கழுவவும். அதன் பிறகு, ஒரு ஆல்கஹால் கலந்த லோஷனை பஞ்சினால், முகத்தில் தடவவும்.
- மிதமான தீயில் வேப்பிலையை கொதிக்கவைத்து வடிகட்டவும். வடிகட்டி எடுத்த இலைகளை அரைத்து, தினமும் முகத்தில் தடவவும். பின்பு அரை மணி நேரம் கழித்து, சுத்தமான தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.
- சந்தன பௌடராலான பேஸ்டை முகத்தில் தடவவும்.
- லவங்கப்பட்டையை பௌடராக்கி, அத்துடன் சிறிது எலுமிச்சைச் சாறு, சில துளி தேன் கலந்து ஒரு பேஸ்டாக்கி, பருக்களின் மீது மட்டும் தினமும் தடவவும். 2 மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவவும்.
- முல்தானி மட்டியை எலுமிச்சை சாறு மற்றும், ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்டாக்கி வாரத்தில் மூன்று முறை முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் கழுவவும்.
- முகம் வறண்டு போயிருந்தால், 2 டீஸ்பூன் தயிர் மற்றும் மஞ்சள் தூள் கலந்து தடவவும். 15 நிமிடம் கழித்து கழுவவும். முகத்தின் வறண்ட தன்மையை நீக்கி, பருக்களையும் போக்கும்.
- க்ரீம் , மாய்ச்சரைசர் இவற்றைத் தவிர்க்கவும்.
- பழங்கள், சாலட் வகைகள், கொட்டைகள் மற்றும் தயிர் இவற்றை தினசரி உணவில் கலந்துகொள்ளவும்.
- தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
- காலையில் வெறும் வயிற்றில் சிலதுளிகள் எலுமிச்சைசாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments