/* ]]> */
Jun 092017
 

எண்ணெய் உணவுகளும் நோய்களும்:

OIL FOODS AND THE DISEASES

வயிறு சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது வேறு ஏதாவது உபாதை உள்ளவர்கள் அளவாக எண்ணெய் சேர்த்துக்கொள்வது நல்லது உதாரணமாக வடையை எடுத்துக்கொள்வோம்.அதில் இருக்கும் பருப்பில் புரதச் சத்து நிறைந்துள்ளது. அதை எண்ணெயில் போட்டு எடுக்கும்போது அதனுடன் கொழுப்புச் சத்தும் உடன் சேர்கிறது. எனவே, புரதச் சத்து, கொழுப்புச் சத்து, மாவுச் சத்து என்று ஒரு சமநிலை உணவில் உருவாகிறது.

இதை அளவோடு எடுத்துக் கொண்டால், உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை. எண்ணெய் உணவுகள் நெஞ்சு எரிச்சலை அதிகரிக்கக்கூடும் என்பதால், கெர்டு (Gerd- Gastrooesophagal) எனப்படும் நெஞ்சு எரிச்சல் பிரச்சினை இருப்பவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கெட்ட கொழுப்பு நல்ல கொழுப்பு:

ஹெச். டி.எல். (HDL) எனும் நல்லகொழுப்பு நம் உடலில் அதிகமாக இருக்கவேண்டும். எல்.டி.எல். (LDL) எனும் கெட்ட கொழுப்பு குறைவாக இருக்கவேண்டும். அதேபோல நிறைவுறா கொழுப்புகள் அதிகமாகவும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும் இருக்கவேண்டும். நல்ல கொழுப்பு சூரியகாந்தி எண்ணெயிலும் மீன், ஈரல் எண்ணெயிலும் அதிகமாக இருக்கும். எல்லாவிதமான எண்ணெய்களுமே உடலுக்குத் தேவை. எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் செக்கில் இருந்து ஆட்டப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியமானவையே. ஆனால், அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவசியம்.

உபயோகித்த எண்ணெய்:

ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பதாலும் சில கலப்படங்களை எண்ணெயில் கலக்குவதாலும் டிரேன்ஸ்ஃபேட் அதிகரிக்கிறது. இந்தக் கொழுப்பினால், கெட்ட கொழுப்பின் அளவு  அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பின் அளவு குறைகிறது. நல்ல கொழுப்பைவிட கெட்ட கொழுப்பு அதிகமாவதால், இதய நோய் போன்றவை வர வாய்ப்புள்ளது.

மேலும் எண்ணெய் போன்ற உணவுகளை அதிக வெப்ப நிலையில் கொதிக்க வைக்கும்போது, அதில் கார்சினோஜென் எனும் புற்று நோய் செல்களை அதிகரிக்கும் வேதிப்பொருள் உருவாகிறது. எனவே, எண்ணெயை மீண்டும், மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>