/* ]]> */
Nov 042017
 

உலக மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்ப ஆக்ஸிஜன் போதுமானதாக உள்ளதா?

OXYGEN

ஒரு நிமிடத்தில் சராசரியாக 7 முதல் 8 லிட்டர் ஆக்ஸிஜனை உள்ளே இழுக்கிறோம். உள்ளே இழுக்கும் காற்றில் , சுமார் 20% ஆக்ஸிஜன் என்றால், நாம் மூச்சை வெளியே விடும்போது அதில் 15 % ஆக்ஸிஜன் உள்ளது. ஒவ்வொரு முறை உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனில், நான்கில் ஒரு பகுதியை மட்டுமே நமது உடல் உள்வாங்கிக்கொள்கிறது. எனவே ஒரு நாளில் நாம் சுமார் 600 லிட்டர் ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறோம்.

3040 மீட்டர் உயரமும் 60 செ.மீ. தடிமனும் உள்ள மரம் ஒரு நாளைக்கு சுமார் 92 லிட்டர் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதாவது சராசரியாக வளர்ந்த 7 மரங்களைன் ஆக்ஸிஜனை ஒரு நாளைக்கு நாம் பயன்படுத்துகிறோம்.

உலகில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தேவையான ஆக்ஸிஜனை உருவாக்க சுமார் 4900 கோடி மரங்கள் தேவை. இன்று உலகம் முழுவதும் சுமார் 40,000 கோடி மரங்கள் உள்ளன என ஒரு மதிப்பீடு கூறுகிறது.  மனிதனைத் தவிர பல்வேறு விலங்குகளும் சுவாசிக்க ஆக்ஸிஜன் தேவை என்பதை நினைவில் நிறுத்தவும். மேலும் மரம் மட்டுமல்ல. பல்வேறு உயிரிகளும் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளே இழுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியே விடுகின்றன.

உலகின் 90% உயிர்ப் பொருட்கள், ஆக்ஸிஜனை வெளியிடும் உயிர்த் திரள்கள்தாம். ஏதோ விபத்தில் ஆக்ஸிஜன் தரும் உயிரிகள் , தாவரங்கள் என ஏதும் இல்லாமல் போனாலும் 5 கோடி ஆண்டுகளுக்கு , 700 கோடி மக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் பற்றிக் கவலையில்லை. வேறு இயற்கை வளங்கள் அழிவதுதான் இன்றைக்கு நாம் சந்திக்கும் பெரும் சவால்களில் ஒன்று.

^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>