/* ]]> */
Jan 072012
 

உலக ஒளி உலா திருவாதிரைத் திருநாள்

காலங்களில் அவள் வசந்தம்,

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி,

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா,

பாடல்களில் அவள் தாலாட்டு!

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்!

காலங்களைக் கடந்த ரம்மியமான

கண்ணதாசனின் பாடல் வரிகள்

மனதை மயக்கும் அருமையான உயர்ந்த மாதங்களில் மார்கழியை பீடுடைய மாதமாகக் கொண்டாடுவோம்..

மாதங்களில் நான் மார்கழி – என்றான் கீதையில் கண்ணன்.

மாதங்களில் தலைசிறந்த மார்கழி மாதத்தில்- பிதுர்களின் தினமான அமாவாசை அன்று..மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆதிமூலம் அனுமன்

மார்கழி மாதத்தில் திருமாலை வழிபடும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வழிபடும் ஆதிரைத் திருநாளும் மகா வியதீபாதமும் சிறப்பு வாய்ந்தவை.

 மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் தினம் ஆதிரைத் திருநாள் ஆகும். வியதீபாதம் என்பது இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று. நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பதுபோல யோகங்களும் இருபத்தேழு உண்டு. இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும்.

 ஆனால் இந்த யோகங்களில் ஒன்றான வியதீபாதம் மார்கழி மாதத்தில் ஏற்படும்போது இதற்கு “மகா வியதீபாதம்’ என்று பெயர். ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.

 வியாதிபாத யோகம் வரும் நாளில் நடராசர் திருநடனத்தினைக் காண்பது சிறப்பு என புராணங்கள் கூறுகின்றன. மார்கழி மாதத்தில் வரும் வியாதிபாத யோகத்தன்று நடராசர் திருக்கோலம் காண்போருக்கு வாழ்வில் சுபப் பலன்கள் யாவும் கிட்டும்; வேண்டியவற்றைப் பெறுவர்.

 மார்கழி மாத தொடக்கத்தில் தான் பாரதப் போர் தொடங்கியது. பதினெட்டு நாட்கள் நடந்த இந்த போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்தது. விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்தது மார்கழி மாதமே. வைகுண்ட ஏகாதசி திருநாள் மார்கழி மாதத்தில் தான் வருகிறது.

 ஆருத்ரா தரிசனம்

 மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியன்று கொண்டாடப்படுவது ஆருத்ரா தரிசனம் என்ற ஆடல்வல்லானின் ஆனந்த திருநடன நன்னாள்.  சிதம்பரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். நடராசருக்கு வருடம் ஆறு அபிஷேகம் நடைபெறும். அதில் சிறப்பானவை மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும்தான்.

ஆருத்ரா அன்று திருவாதிரைக் களி செய்து படைப்பர். 

“திருவாதிரைக் களி ஒரு வாய்’ என்பது வழக்கு. அதை ஒரு கவளமாவது சாப்பிட வேண்டும்.

திருவாதிரைக் களி ஒருவாய் உண்ணாதவர்க்கு நரகக்குழி என்பார்கள்…

மார்கழியில் வரும் மஹா உற்சவம் திருவாதிரைத்திருநாள்…. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை.

இது தேவர்களின் வைகறை பூஜை நேரமாகும். அதனால் திருவாதிரையன்று நடராசருக்கு வைகறையில் ஆயிரங்கால் மண்டபத்தில் அபிஷேகம் நடை பெறும். இவ்விழா பத்து நாட்கள் நடை பெறும். பத்தாம் நாளான திருவாதிரைத் திருநாளில் திருத்தேர் உலா நடைபெறும்.

 பத்து நாட்களும் நடராசர் வாகனத்தில் உலாவருவார்.  ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா. அன்று மூலவரே தேரில் உலா வரும் அதிசயம் காணலாம்.பத்தாம் நாள் அதிகாலை வேளையில், சிறுசிறு மணிகள் அசையும் வெண்சப்பரத்தில் நடராசர் திருவீதி உலா வருவார். அப்போது நடராசர் சிலையைத் தூக்குபவர்கள் நடராசர் ஆடுவதுபோல அசைந்தாடி வருவது மெய் சிலிர்க்கும் காட்சியாகும். பக்தர்கள் ஆர்வத் துடன்- பக்தியுடன் நடராசரைத் தரிசிப்பார்கள். அன்று மட்டும் களியும் படைப்பார்கள்.

 உத்தரகோச மங்கை ஆலயத்தில் ஆறடி உயர மரகத நடராசர் சிலை எப்போதும் சந்தனக் காப்பால் மூடப்பட்டிருக்கும். இக்கோவிலில் நடராசர் சந்நிதி மூடப்பட்டே இருக்கும். வெளியில் இருந்து மட்டும் தரிசிக்கலாம். ஆருத்ரா தரிசன விழா பத்து நாட்கள் நடக்கும். திருவாதிரையன்று முதல் நாள் மரகத நடராசரின் சந்தனக்காப்பு களை யப்படும். காலை 9.00 மணிக்கு காப்பு களைந்து அபிஷேகம் செய்வர். இரவு 11.00 மணி வரை மரகத மேனி தரிசனம் காணலாம். விடியற்காலை சந்தனக் காப்பிடப்படும். பின் அடுத்த வருடம் தான் இக்காட்சியைக் காணலாம்.

 இங்குள்ள மரகத லிங்கத்திற்கும் படிக லிங்கத்திற்கும் தினம் அன்னாபிஷேகமும் நடத்துவார்கள்.

 நடராசர் சந்திப்பு வைபவம்

 சென்னை சவுகார்பேட்டையில் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று, வெவ்வேறு நான்கு கோவில்களிலிருந்து வரும் நான்கு நடராசர் திருவடிவங்கள் சாலை ஒன்றின் சந்திப்பில் ஒன்றை ஒன்று பார்த்தபடி நிற்கவைத்து ஆராதனை செய்யும் வைபவம் சுமார் 250 ஆண்டு காலமாக நடைபெறுகின்றது. அந்த நான்கு கோவில் நடராசர்கள்: ஏகாம்பரேஸ்வரர் நடராசர், அருணாசலேஸ்வரர் கோவில் நடராசர், குமரக் கோட்ட நடராசர் (சிவசுப்ரமணியர் ஆலயம்), காசிவிஸ்வநாதர் ஆலய நடராசர். (இவர் நால்வரில் மிகப் பெரிய வடிவினர்.)

 கோவைத் திருவாதிரை

 இந்நாளில் கோவை மாவட்டப் பெண்கள் மாங்கல்ய நோன்பு நோற்பார்கள். அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வர். பாவம் விலக நெய் தீபம் ஏற்றுவார்கள்.

 கேரளத் திருவாதிரை

 மணமான புதுப் பெண்கள் “பூத்திருவாதிரை’ என்ற பெயரில் முதல் திருவாதிரை நாளைக் கொண்டாடுவார்கள். அன்று இப்பெண்கள் பத்து வித மலர்கள் பறித்து மணமாகாத பெண்களுக்குச் சூட்டி, “உங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கணும்’ என்பர்.

 ” நாளெல்லாம் திருநாளாகும்; நடையெல்லாம் நாட்டியமாகும்… தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜர்

arudhra darshan

 

திருவல்லிக்கேணியில் உடையவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் அற்புதக்காட்சி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: 

 உத்திரகோசமங்கையில் சந்தனக்காப்பில் ஆருத்ரா தரிசனம் தந்த நடராஜர்

வருகிற 22-ந்தேதி திருஉத்திரகோசமங்கை</p><br />
<p> கோவிலில் “ஆருத்ரா தரிசனம்”</p><br />
<p> சிறப்பு ஏற்பாடுகள் செய்ய கலெக்டர் உத்தரவு

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>