/* ]]> */
Aug 242011
 

ஸ்ரீபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில்

மாறும் காட்சி அமைப்பு கண்டு களிக்க…..இங்கே…..

 

 

[Image1]

வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும் அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது.


 இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும்,இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது

.

மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்கள் தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன

.

100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில்,

 ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது.

 அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது.

 மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்.

Starpath-sripuram

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி செல்போன், கேமரா, தின்பண்டங்களை வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்

கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழியெங்கும்

 சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்து,

 வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது.

இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல்

 விளக்குகளும சேர்ந்து இரவை பகலாக்குகின்றன

.

 கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள்

 பச்சைப்பசேல் என்று  காட்சியளிக்கின்றன

.

தென்றல்  காற்று  இதமாக  வீசுகிறது.   மனநிம்மதியுடன்

 இறைவழிபாடு செய்ய முடிகிறது.

 கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 பக்தர்கள்  அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

 தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும்

 தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் ஜொலிக்கிறது.

அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன

 பிரமாண்டமான 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில்

ஆயிரம் திரிகள் போட்டு விளக்கு ஏற்றலாம்.

கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும்,

புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை,

லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன.

 கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

[Gal1]

தமிழக பொற்கோயில் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு பொற்கோயில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற  பல பெரிய கோயில்களில் மூலஸ்தான விமானங்கள் தங்கத்தால்  அமைக்கப்பட்டுள்ளன.

 ஆனால், வேலூர் ஸ்ரீபுரம் “லட்சுமி நாராயணி கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டு தங்க கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது

.

சுயம்பு லட்சுமி நாராயணி : தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் பிள்ளையாரும், நந்தியும் சுயம்புமூர்த்தியாக உள்ளனர். மதுரை உள்ளிட்ட சில சிவாலயங்களில் சிவன் சுயம்புவாகவும், கோயமுத்தூர் மாவட்டம் காரமடை ரங்கநாதர் ஆகிய இடங்களில் பெருமாள் சுயம்புவாகவும், சென்னை திருவேற்காடு போன்ற பல தலங்களில் மாரியம்மன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் முருகன் ஆகியோர் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிப்பதை தரிசித்திக்கிறோம். 

வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள்

லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, ..இத்தகைய சுயம்பு கோலத்தைக் காண்பது அரிதிலும் அரிது

vellore golden temple darshan booking

.ஏழுமலையானின்  பார்வையில் திருமகள் வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண் பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில்,இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது.

மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு “ஸ்ரீபுரம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. “ஸ்ரீ’ என்பது மகாலட்சுமியை குறிக்கும்

. திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பவர்கள்,அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர்  நாராயணிபீடத்தையும் தரிசிப்பது சிறப்பு.

மக்களை மகிழ்விக்கும் மகாலட்சுமி : மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. மூலஸ்தானத்தில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அருளுகிறாள்.

sri-sakthi-amma

தங்கத்தில் ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

 தங்கக் கோயிலைச் சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

 தங்கக் கோயிலை எழுப்பிய சக்தி அம்மா, ஏன் இந்தக் கோயில் தங்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது பற்றி கூறும்போது, “”மக்களை ஆன்மிக சம்பந்தமான கருத்துக்களை கேட்க வைப்பதும், கோயிலுக்கு வரவழைப்பதும் கடினம்.இப்படி ஒரு பிரமாண்டமான தங்கக்கோயில  என்றால் அதைப்பார்ப்பதற்கு மக்கள் உடனே வந்து விடுவார்கள்.


அவ்வாறு வரக்கூடிய மக்கள் தங்ககோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதுடன், உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்துச்செல்வார்கள்,”என்றார். சக்தி அம்மா தரிசனம்: பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய  கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக்கோயிலை “நாராயணி பீடம்’ என்கின்றனர்.

இந்த பீடத்தில், கோயிலின் நிறுவனரான “சக்திஅம்மா’ இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது.

images (334×151)

எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பு சார்பில் ஸ்ரீபுரம் தங்ககோவிலுக்கு,  பசுமைக்கோவில் விருது மற்றும் இந்தியாவின் தலைசிறந்த சுற்றுச்சூழல் வளாகம் ஆகிய விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>