/* ]]> */
Nov 112011
 

ஸ்ரீலட்சுமி –சிங்கிரிகுடி சிம்மன்

    

 

 

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே 

விஷ்ணு பத்ந்யை தீமஹி 

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’ 

என்பது ஸ்ரீமகாலட்சுமியின் காயத்ரி. இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து,  ஆராதித்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்..

வாளொடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த

நீளிருங் கனக முட்டை நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி

கோளடும் திரிவது என்ன, குலமணிக் கொடும்பூண் மின்ன,
தாளினை இரண்டும் பற்றிச் சுழற்றினன் தடக்கை ஒன்றால்.

கம்பர் வருணித்தபடி

கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.

ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

“நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை’ என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் 

திருவோணத்திருவிழவில் அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவன்

ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர் களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இது. ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.தாயார் கனகவல்லி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். பிரகாரத்தில் ராமர், ஆண்டாள், கருடன், விஷ்வக்சேனர், 12 ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.அகோபிலம் 4வது ஜீயரின் பிருந்தாவனம் உள்ளது. திருவிழா காலங்களில் கோயிலின் பின்புறம் உள்ள பத்து தூண் மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. வைகானஸ ஆகமப்படி பூஜை நடக்கிறது.

மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங் களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்தார். இதைக் குறிக்கும் வகையில் , இங்கு மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர். இவ்வாறு ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

 

மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப் படும் தலம் உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

மூலவர் நரசிம்மர்

[Gal1]

நரசிம்மர் தன் 16 திருக்கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், க்ஷீரிகா எனப்படும் குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை ஏந்தி யுள்ளார். மற்ற கரங்களால் இரணிய சம்ஹாரம் நடக்கிறது.குடலைக் கிழிப்பது, குடலை மாலையாகப் பிடித்திருத்தல், இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது ஆகிய சாகசங்களைச் செய்கிறார்.

ஓம் நமோ நாராயணாய! 

ஓம் நமோ நாராயணாய!! 

ஓம் நமோ நாராயணாய!!!

ஆண்டாள்

[Gal1]

கனகவல்லி தாயார்

[Gal1]

ராமர்

[Gal1]

Ugra Narasimhar on the Rajagopuram

 

 

 

Inner Mandapam

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>