/* ]]> */
Oct 062011
 

வெற்றித்திருநாள் விஜய தசமி

durga maa

ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே

சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே

சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே

ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே 

Maa Durga Goddess

ஒன்பது நாள் நவராத்திரிகள் அன்னை மஹிஷாசுரனுடன் போரிட்டு அவனை வென்ற நாள்தான் விஜய தசமி, என்னதான் தீமை ஆட்டம் போட்டாலும் முடிவில் நன்மையே வெல்லும் என்றும் அனைவருக்கும் உணர்த்தும் நாள்.

தீய சக்தி கொண்ட அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழித்து வெற்றி வாகை சூடிய தேவி, அந்தந்த அசுரர்களை மாய்த்தவள் என்ற விதத்தில் அவர்கள் பெயரைக் கொண்டு துதிக்கப்படுகிறாள். அந்த அசுரர்களுடன் தேவி நடத்திய அப்போர்கள் மைசூர் நகரை ஒட்டியே நடைபெற்றதாக ஐதீகம்! இக்கருத்துக்கு ஆதாரமாகச் சண்ட முண்டர்களை அழித்தவள் சாமுண்டீஸ்வரி! 

மகிஷனை மாய்த்தவள் மகிஷாசுர மர்த்தனி போன்ற நாமங்களைக் கூறலாம்

Maa Durga Goddess

வங்காளத்திலோ தங்கள் அன்னையர் இல்லத்திற்கு தன் குழந்தைகளான, சரஸ்வதி. லக்ஷ்மி, கணேசன், முருகன், மருமகள் அப்ராஜிதாவுடன் திருக்கயிலாயத்திலிருந்து தன் தாய்வீட்டிற்கு வந்த அன்னை துர்கா மீண்டும் திருக்க்யிலாயத்திற்கு செல்லும் நாளாக சிறப்பிக்கின்றனர்.

jai mata di g by vikas mehta

மைசூரிலே தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது

மராட்டியர்கள் சின்ன மண் கிண்ணங்களில் பாலிகை தெளித்து அதாவது மண் நிரப்பி, நவதான்யங்களை அதில் விதைத்துப் பின் தினமும் தண்ணீர் விடுகிறார்கள். அதன் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து தம் வாழ்க்கையையும் கணிக்க்கிறார்கள். பின் விஜயதசமி அன்று கடலில் கலக்கிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும், ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலுக்கும் தவறாது செல்கின்றனர்

வட நாட்டில் இராமபிரான் இராவணனை வென்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது.

இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்படும் ராம் லீலா சிறப்பாக கொண்டாடப்படும் நாள்

ராமர் இராவணனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றதை நவராத்திரியாகக் கொண்டாடுகிறார்கள். அதர்மம் அழியும், தர்மம் வெல்லும் என்பதைச் சிறப்பாக “ராம் லீலா” என்று பத்து நாட்களும் நாடகம் நடத்துகின்றனர். தில்லியில் ராம்லீலா என்ற பெரிய மைதானத்தில் துளசிதாசரின் இராமாயணத்தை நாட்டிய நாடகமாக நடிக்கின்றனர்.

நடுவே வால்மீகி இராமாயணத்தின் ஸ்லோகங்களும் சேர்க்கப்படுகின்றன. ஸ்ரீராம் தியேட்டர்ஸ் ஒவ்வொரு வருடமும் இதை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். வெளி நாடுகளினின்றும் பல மக்கள் இதைக் காண வருகின்றனர்.

அந்த மைதானத்தில் பிரும்மாண்டமான மூன்று அசுர பொம்மைகள் செய்து வைக்கின்றனர் – இராவணன், கும்பகர்ணன் மற்றும் இந்த்ரஜித். அந்தப் பொம்மைகளில் பல தரப்பட்ட வெடிகள் உள்ளே வைக்கப்படுகின்றன. கடைசி நாள் ஸ்ரீராமர் இராவணனை வதம் செய்ய இரதத்தில் இலக்குவன் மற்றும் அனுமாருடன் வருவார். இராவணனைத் துரத்தித் துரத்தி வில் எய்துவார். அந்த மைதானத்தைச் சுற்றிச்சுற்றி இருவரும் சண்டையிட்டுக் கொண்டே வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். பின் தருமம் ஜெயிக்கும். 

முதலில் இந்திரஜித் அடிபட்டு மலை போல் சாய்வான், பின் அவனைத் தொடர்ந்து கும்பகர்ணனும் அப்படியே விழுவான். இவர்கள் விழ உள்ளிருந்த விதவிதமான பட்டாசுகள் வெடிக்கும். பின் இராவணனுக்கும் இதே கதிதான். அவன் மேல் அம்பு படும் சமயம் அதனுள் இருக்கும் வெடிகள் ஊரையே கூட்டி விடும். இராவணன் பெரிய சத்தத்துடன் கீழே சாய்வான்.

ஸ்ரீ ராமச்சந்த்ர கீ ஜய்! பரமசுத அனுமானகீ ஜய்!’என்ற கோஷங்கள் முழங்கும்.

இராவணன் அசுர பொம்மையிலிருந்து பல வர்ணஜாலங்கள் உண்டாகி நம்மை பிரமிக்க வைக்கும். கடைசியில் ஆகாயத்தில் ஒரு நீலப் பிரகாசமான ஒளி போய் கலக்கும். கடைசியில் வெடிக்கும். நாம் காதை மூடிக் கொண்டுதான் பார்க்க வேண்டும். அத்தனை சத்தம். ஒரு குண்டு வெடிப்பது போல் இருக்கும்.

மஹாபாரதக் கதையில் பஞ்ச பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து தாங்கள் வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களையெல்லாம் எடுத்து அந்த ஆயுதங்களுக்கு பூஜை செய்த நாள்.

ஆயுதபூஜை செய்யும் பழக்கம் இதிலிருந்துதான் தொடங்கியது. வைணவத்தலங்களில் அதனால்தான் விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை சாதித்து வன்னி மரத்தில் அம்பு எய்யும் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

விஜயதசமி தினம் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அன்னையின் அருளால் அது நிச்சயம் வெற்றி அடையும். குறிப்பாக சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களுக்கு பூஜை செய்து இன்று படிப்பை ஆரம்பிக்க மிகவும் உகந்தது. கேரள மாநிலத்தில் அக்ஷராப்பியம் குழந்தைகளுக்கு விஜயதசமி தான் செய்யப்படுகின்றது.

மதுகைடபர், சும்ப நிசும்பன், சண்ட முண்டன், இரக்த பீஜன், மஹிஷாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து தேவர்களையும் மனிதர்களையும் சர்வ லோகங்களையும் காத்து இரக்ஷித்தருளிய ஜெய துர்க்கையை, விஜய மஹிஷாசுரமர்த்தினியை, ஜெய ஜெய சாமுண்டியை மனமார துதித்து நோயின்மை, கல்வி, தனம், தானியம், அழகு, புகழ், பெருமை, வலிமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், நல் ஊழ், நுகர்ச்சி என்னும் பதினாறு செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ இமய கிரி ராஜ தனயையிடம் மாதேவி அன்னையிடம் விஜய தசமி சிறப்புத்திருநாளில்   வேண்டி நலம் பெறுவோம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

Ramlila Mela.

 

Ramlila Mela

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>