வற்றாத வரமருளும் புன்னை நல்லூர் மாரியம்மன்
மாசிமகத்தன்று நான்காவது வருடமாக ஆயிரத்தெட்டு பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தார்கள்.
ஒவ்வொரு ஆடிமாத மூன்றாம் வெள்ளிக் கிழமையும் புன்னைநல்லூர்
மாரியம்மனின் உருவப்படத்துடன் பல வாகனங்களில் ஊர்வலமாக
பூக்களைக் கொண்டு வந்து அர்ச்சனை செய்கிறார்கள்.
மகான் சதாசிவப்பிரம்மேந்திரரால் புற்றில் தோன்றிய சுயம்பு அம்மனுக்கு
விக்ரகம் அமைக்கப்பட்டது
மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிசேகங்கள் செய்யப்படுவதில்லை.தைலக் காப்பு சாற்றப்படுகிறது.விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிசேகம் நடைபெறுகிறது.அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறும்.அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து.அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும்.அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம் புணுகு அரகஜா ஜவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் நடைபெறும்.தைலாபிசேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம் இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.உள்தொட்டி நிரப்புதல் அம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும்.பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வௌதத்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது.இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும் சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போதுவரை உள்ளது.இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கிறார்கள்.
அம்மன் தரிசனம் முடித்து ஆட்டோவில் செல்லும் போது தியாகராஜ ஆராதனை தினமானதால் அவரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜரின் ச்ந்ததியர் வீடு அருகில் இருக்கிற்து. பார்க்க விருப்பமா
என்று வினவினார்.
தேடிப்போன தெய்வமே நேரில் வந்து தரிசனம் கொடுத்த சிலிர்ப்புடன் பந்தல் போட்டு பசுஞ்சாணம் மெழுகி அரிசிமாவினால் இழைக் கோலமிட்ட எளிய
பழங்கால அக்ரஹ வீட்டினுள் அடிஎடுத்து வைத்தோம்.
எங்களை வரவேற்ற மகானின் சந்ததியர், பூஜை அறையில் தியாகராஜரின் முன்னோர்கள் வழி ஆராதிக்கப்பட்டு, தியாகராஜரால் அனுதினமும் கீர்ததனைகளால் ஆனந்தப்பட்டு அவருக்கு சாட்சாத் ராமலட்சுமண சீதை அனுமனாகத் தரிசனம் தந்த மூலராமரின் ஆராதனை விக்ரஹம் கற்பூர ஜோதியில்
ஜெகஜ்ஜோதியாக கண்முன்!!
யானேயோ தவம் செய்தோம் ! என்ற உணர்வுடன் மெய்சிலிர்க்க வணங்கினோம்.
எட்டு வயதில் பிரம்ம உபதேசம் செய்விக்கப்பட்ட தியாகராஜர் தொண்ணூற்று ஆறு
கோடி ராம ஜெபம் செய்தவுடன் ராம தரிசனம் கிடைக்கப் பெற்றாராம்.
ஆராதனை விக்ரகம் தியாகராஜரின் உடன்பிறப்பால் காவிரி வெள்ளத்தில் வீசப்
பட்டதாம். ராமா!!ராமா!! என்று கதறியவருக்கு கருடன் வட்டமிட்டு அடையாள்ம்
காட்ட மீட்டெடுத்ததாக செவிவழி வரலாறும் கொண்ட அபூர்வ விக்ரகமாயிற்றே அது.
நிதி சால சுகமா ராமா? என்று அரசவைப்பரிசிலை விரும்பாத தூயவரால் அபிஷேகிக்கப்பட்ட பொக்கிஷ தரிசனம்!!
மன நிறைவுடன் திரும்பினோம்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments