/* ]]> */
Aug 302011
 

முந்தி வரமருளும் முக்குருணி விநாயகர்

எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே!

[baananukkuangamvettiyaleelai.jpg]

முத்துக்கள் தோற்கும் மோகனப் புன்னைகையோடு, இந்திரலோகத்துக் காமதேனுவையும், அமுதசுரபியையும் விட அதிகமாய்க் அருள் சுரக்கும் கண்ணாட்சியால் அண்ட சராசரங்களையும் காத்து ரட்சிக்கும் அன்னை

Madurai Meenakshi Amman

மாணிக்கமூக்குத்தியும், மரகதப் பச்சைக் கிளியும் செங்கோலும் தாங்கி அருளாட்சி புரியும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் விக்ரஹங்கள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி. (6 கிலோ) இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு மெகா சைஸ் கொலுக்கட்டை படைக்கப்படுகிறது.

ஒரு முறை திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வலி நீங்க மீனாட்சிக்கு தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அப்படி தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்டமான பிள்ளை யார் கிடைத்தார்.

[IMG_3083.JPG]

அவரை சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி “முக்குறுணி விநாயகர்’ என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர்.

இவருக்கு விநாயகர் சதுர்த் தியன்று 18படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக் கிறார்கள் அந்த பெயரே விநாயகருக்கு நிலைத்துவிட்டது.

அவ்வளவு பிரமாண்டமாக இருந்தாலும், சிறிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

கணேச ருணஹர ஸ்துதி

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் 

லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் 

ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் 

ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.

தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை விநாயகர்: மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் .அர்த்தமண்டபம்/கருவறைக்கும் முன்னால், வாயிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு சிறியமேடை. அங்கு இரண்டு பிள்ளையார்கள் இருப்பார்கள். இருவரையும் சேர்த்து ‘இரட்டைப்பிள்ளையார்’ என்று அழைப்பார்கள். இங்கு பூஜையாகித்தான் கருவறைக்குள் செல்வார்கள்..

 இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங்களை வணங்குவது மரபாக இருக்கிறது. இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது

  Ganesh Chaturthi Orkut  Myspace Facebook Friendster scraps comments Ecards and codes       பிள்ளையாருக்கு இரண்டுதன்மைகள் உண்டு. ஆகமங்களில் அது சொல்லப்பட்டிருக்கும். விநாயகர் வழிபாட்டு நூல்களில் ‘காரியசித்தி மாலை’ என்று ஒன்று உண்டு. இதனைச் சங்கடஹர சதுர்த்தியன்று படிப்பார்கள். மற்றபடிக்கு,  காரியசித்திக்காகவும் படிப்பார்கள்.

      வேண்டிய அடியார்க்கெல்லாம்

            விக்கினம் கெடுப்பாய் போற்றி

      வேண்டி வந்தனை செய்யார்க்கு

            விக்கினம் கொடுப்பாய் போற்றி

      வேண்டுவார் வேண்டிற்றெல்லாம்

            விளைத்தருள் விமல போற்றி

      மாண்ட துட்டர்க¨ளைக்கொல்லும்

            மறமிகு மள்ள போற்றி.

Vyaghrapada Ganeshani, in female form with tiger feet

Ganeshani Statue

புதன் தலம்: நவக்கிரகங்களில் மதுரை புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6- 7 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் படைத்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. நைவேத்யத்தை கோயிலில் தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கடைத்தேற்றும் கருணைக் கடலாக மீனாட்சி சுந்தேரஸ்வரர் திகழ்கின்றனர்.

 முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் யானைகள் சிறப்பு பூஜைகள் நடத்தின.

தங்க மூஷிக வாகனத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர்.

 விநாயகர் உருவமும், அதன் தத்துவமும்….

கணபதியின் உருவத்தின் அர்த்தங்கள்

 பெரிய தலை – பெரியதாக சிந்தித்தல். வெற்றிக்கான முதல்படி பெரிய அளவில் யோசிப்பது

பெரிய காதுகள் – நிறைய கேள்- மற்றவர் பேசுவதை எந்தவித குறுக்கீடும் செய்யாமல் கேட்டல். 2ம் படி

 சிறிய கண்கள் – கூர்மையான கவனம். 3 ம் படி- மனதை திசை திருப்பாமல், எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிறுத்துதல்.

 சிறிய வாய் – குறைவாக பேசுதல் – 4 ம் படி – நிறைய கேட்க வேண்டும், படிக்க வேண்டும் ஆனால் குறைவாக பேச வேண்டும். குறைவாகவும், அளந்தும் பேசுபவருக்கு வார்த்தைகள் சொந்தம் / கட்டுப்படும் அல்லாவிடில் வார்த்தைகளுக்கு அவர் கட்டுப்படவேண்டி இருக்கும். இதைத் தான் திருவள்ளுவர் “நா காக்க, காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற சிக்கனமாக சொன்னார்.

 ஏகதந்தம் – ஒரு தந்தம் – 5ம் படி – கெட்டதை விலக்கி நல்லதை எடுத்துக் கொள்ளல். நான்காம் படி, குறிக்கோளை அடையும் வழியில் நல்லது, கெட்டது இரண்டும் வரும். அப்போது கெட்டதை விலக்கி நல்ல வழியில் செல்ல வேண்டும்.

 தும்பிக்கை – தும்பிக்கை விநாயகரின் ஐந்தாவது கரமாக கருதப்படுகிறது. ஐந்து கரத்தனை, ஆனை முகத்தானை என்று அவரை வழிபடுவதுண்டு. திறமை மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை – 6ம் படி – திறமையும் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையும் மிகவும் இன்றியமையாதது.

 கோடரி – அறுத்தல் – பாசம், பந்தம் போன்ற கட்டுப்பாடுகளை அறுத்தல் – 7ம் படி – இதன் அர்த்தம் ஒரு கர்மயோகியைப் போல் லட்சியத்தை (அ) குறிக்கோளை அடைய செயல்படுவது. அதில் இந்த கட்டுப்பாடுகளினால் வரும் தடைகளை ஒரு பற்றற்ற துறவியைப் போல் விலக்குதல்.

 கயிறு – வாழ்வின் உண்மையான குறிக்கோளுக்கு இழுத்துச் செல்ல.- 8ம் படி –  பெரிதாக யோசித்து சாதிக்க வேண்டிய காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிலைநிறுத்தினால், குறிக்கோளை அடைய வழிகள் தன்னால் பிறக்கும்.அபயம் / வாழ்த்தும் கை – வாழ்த்துதல் – 9ம் படி -

விநாயகரின் அபய ஹஸ்தம் தன் பக்தர்களை காக்கும் கவசம். அவர்களின் பக்தி வழியில் வரும் எல்லா தடங்கலையும் விலக்கி அவர்களை உய்விக்கும் ஒரு வரப்பிரசாதம். – வந்தவர்களை எப்போதும் நன்றாக கவனித்து, வேண்டியவற்றை தன்னால் இயன்ற அளவில் செய்தல்.

 பெரிய வயிறு – ஜீரணிப்பதற்கு – 10ம் படி – தன் குறிக்கோளை அடையும் வழியில், எத்தகைய துன்பம் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் பொறுமையாக சகித்து ஜீரணித்தல்.

 மோதகம் (கொழுக்கட்டை) – பலன்கள் – 11ம் படி – மேல் சொன்ன படிகளின் படி சென்றால் கிடைக்கும் பலன்கள் கொழுக்கட்டை எப்படி இனிக்கின்றதோ அது போன்ற தன்மை உடையது.

 மூஞ்சுறு – வாகனம் – ஆசைகள் – 12 ம் படி – ஆசைகள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஆசையை கட்டுப்படுத்தாமல் அதன்படி நடந்தால் நம்மை கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். ஆகையால் ஆசையை கட்டுப்படுத்தி அதை நம் வழிக்கு திருப்பி நடந்தால் அது நாம் அடைய வேண்டிய குறிக்கோள் என்ற இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்.

 பிரசாதம் – பழங்கள் – மேல் சொன்ன வழிகளின் படி நடந்தால், இந்த உலகமே வசப்படும் மற்றும் நமக்காக காத்திருக்கும்.

vinayagarvinayagarvinayagar

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>