/* ]]> */
Sep 052011
 

மலர்க்கடலில் மகாராணி நகரம்

படிமம்:Flores.gif

ஆஸ்திரேலியாவில் City of Toowoomba, சென்றிருந்தோம்.

நூறு நூறு மலைகளின் ராணி ஊட்டி, இளவரசி கொடைக்கானல், ஏழைகளின் ஊட்டி ஏற்காடு ,காஷ்மீர் மலர் பள்ளத்தாக்கு ஆகியவற்றை சேர்த்தால் கூட அத்தனை பிரம்மாண்ட பூக்கடல்காட்சி கிடைக்குமா என்று மலைக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்தியது.

Toowoomba Carnival of Flowers

 

வசந்தத்தை வரவேற்கும் உற்சாகத் திருவிழாவாக செப்டம்பர் மாதம் பூக்களின் கண்காட்சி அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சி. மலர்களின் ஊர்வலம் பேரணியாக நடைபெற்ற்து. உணவுத்திருவிழாவும் சிறப்பு.

Toowoomba flower festival - Toowoomba, Queensland

Brisbane, Sydney, Melbourne and Darwin  ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து 90 நிமிடப் பயணத்தில் கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது பூக்களின் கடலான City of Toowoomba,

toowoomba garden city

 ஹாலந்தைத்தாயகமாகக்கொண்ட துலிப் மலர்களின் தோட்டக்காட்சி வசீகரித்தது.

பாப்பி மலர்கள் வெகு அழகானவை. சமையலுக்குப் பயன்படும் கசகசா பாப்பி செடியின் விதைதான். இதன் பிசின்தான் போதைதரும் அபின் என்று சொல்கிறார்கள். அரபு நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் கசகசாவை மசாலாப்பொருள்களுடன் எடுத்துச் சென்றால் அரபுநாட்டுக் கொடுஞ் சிறையில் வாடவேண்டியதுதானாம்.

ரோஜாத்தோட்டம்தான் எத்தனை அழகு! மனதைக் கொள்ளை கொண்டது. பிறந்தநாள் விழாவோ, திருமணக் கொண்டாட்டமோ நிகழ்ந்திருந்த மகிழ்வலைகள் நிரம்பியிருந்தது. அங்கே ஒரு ஆராய்ச்சிக்கூடமும் இருந்தது. பார்வையிட ஆசைப்பட்டேன். காட்சி நேரம் முடிந்திருந்ததால் பார்க்க முடியவில்லை.லதா மண்டபமாகவண்ண வண்ண ரோஜாப்பூக்களாலேயே ஆன பெரிய குடில் மணம் பரப்பி அழகால் நிறைத்தது

அரபுநாட்டிலிருந்து வந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பெயர் விசித்திரமாக இருந்தது -டெவில் ட்ரீ என்று எழுதியிருந்தது.

இன்னொருமரம் இத்தாலியிலிருந்து வந்திருக்கிறேன் ஏஞ்செல் ட்ரீ -தேவதை மரமென்று சொன்னது.

toowoomba queenslandசெர்ரீ மரம், அவகேடா மரம் இன்னும் இன்னும் பெயர் வாயில் நுழையாத பூக்களை சுமந்திருந்த மரங்களின் பெயர்களை எல்லாம் படித்தவாறே வலம் வந்தோம்.

வசந்தங்கள் வந்து வாழ்த்தும் பொழுதெங்கும் மனம் நிறைந்த விழாக்கோலம்..

தலைக்குமேல் உச்சியில் வாட்டிவதைக்காத சூரியன் பார்த்துக்கொண்டிரும்போதே மெதுமெதுவாக வர்ணஜாலம் காட்டி மெல்லிய பூமழையாக தூறலுடன் வானவில்லும் காட்டியது. சின்னஞ்சிறுமியாய் பூக்களுக்குப் போட்டியாக பலவர்ணங்களை ஹோலிப்பண்டிகை போல் ஈஷிக்கொண்டு வானம் எழில் காட்சி காட்டியது.நிறங்கள் நிரம்பிய வானம் அழகா? பூக்களின் வண்ணம் அழகா??

சொல்லமுடியாமல் சந்தோசமாக தோற்றுப் போனோம்.

Rose Sky

நடுக்கடலில் கப்பல் ஒன்றின் மேலிருந்து பார்த்தால் சுற்றிலும் நீலக்கடலும் மேலே நீலஆகாயமும் காட்சிப்படுவது போல இங்கோ சுற்றிலும் எங்கும் பூக்கள் …பூக்கள் நிறைந்த பூக்கடலும் வானத்தில் பலவர்ண மாயாஜால நிறங்களாக நொடிக்கொரு நிறம் கட்டிக்கொண்டு எங்கெங்கும் வண்ணப்பந்தல். தத்தகாயமாய் எழிலுற சிரித்தவாறே முழு நிலவு எழுந்து எழில் கோலம் காட்டியது.

Posted Image

 

 

 

243a5c64.jpg Toowoomba Lions

 

பூங்காவில் வண்ண வண்ண விளக்குகள் பளிச்சிட்டு இந்திர லோக மாய உலகிற்கு அழைத்துச்சென்றது. இவ்வளவு நேரம் பார்த்த காட்சி சட்டென மாறி மாறி வேறு காட்சியாக காட்டிய விஞ்ஞான விந்தை.

 

toowoomba queensland

 

குளிர் வாட்ட ஆரம்பித்தது. மனமே இல்லமல் கிளம்பிவரவேண்டி இருந்தது.மரங்கள் பொன்துகள்களாக மஞ்சள் நிற மலர்களைதூவி பொற்பாதை அமைத்துக்கொடுத்தது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>