/* ]]> */
Apr 062012
 

உலக ஒளி உலா -புனித வெள்ளி

 தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
 யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது

தாரணி மீதினிலே!

எத்தனை உண்மை வந்து பிறந்தது

இயேசு பிறந்ததிலே!

இத்தனை நாளும் மானிடன் வாழ்வது 

இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்

என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரையில் மருந்து 

தேவை நித்தியமே!

விண்ணர சமையும் உலகம் முழுவதும்

இதுதான் தத்துவமே!

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே

இயேசுவை நம்புவமே!”

கண்ணதாசன்

மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை நினைத்து உலக வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்பதால் “பெரிய வெள்ளி’ ,ஆங்கிலத்தில் “குட் பிரைடே’  என்க் கொண்டாட்ப்படுகிறது…

இயேசு உயிர்துறந்த நாளுக்கு முன்புள்ள நாற்பது நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் சுகபோகத்தைத் துறந்து உபவாசம் மேற்கொள்கிறார்கள். 

பெண்கள் ஆடம்பரத்தையும் அலங்காரத்தையும் தவிர்த்து, அர்ப்பண வாழ்வை நடத்துகிறார்கள். மங்கல நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை. 

சுக போகத்தை ஒதுக்குவதால் மிச்சப்படும் பணத்தை ஏழைகளுக்கு உதவி, புண்ணியம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

நோன்பிருக்குங்கால் நோயாளி போல

வேடமணிந்து வேதனை காட்டி

போலித் தனத்தில் புகழ்பெற வேண்டாம்


முகத்தை கழுவி முடியினைச் சீவி

அகத்துத் தூய்மையை முகத்தினில் காட்டி

அடுத்தவர் நோன்பை அறியா வண்ணம்

ஆண்டவன் மட்டுமே அறியும் வண்ணம் இருந்தால்

அது தான் இகத்திலும் பரத்திலும் சுகத்தைத் தரும்

ஒருவர் செய்யும் தவறுகளுக்கு வேறொருவர் தண்டனை ஏற்கும் நிலை வந்தால் அவரை “பலிஆடு’ என குறிப்பிடுவார்கள்..

பாவங்களுக்காக ஆடு மரித்ததன் மூலம் தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ எனக்கூறி மன ஆறுதல் பெறுகிறார்கள்..

அந்த வகையில் இயேசுகிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், “இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் எல்லாருக்காகவும், அவர்களின் பாவங்களுக்காகவும் பலி ஆடாக இயேசு அவர்கள் பாவங்களை தன்மேல் ஏற்று, தன் ஜீவநாடகத்தை முடித்ததன் மூலம் மக்கள் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமானார்.

புனிதவெள்ளி நாளில் பாவம் இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்கிறார்கள்..

இயேசு உயிர்த்தெழுந்தார், இன்றும் ஜீவிக்கிறார் என்ற நம்பிக்கையுடன் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. 

அவரது பிறப்பை கிறிஸ்துமஸ் என்கிறார்கள்..

ஈஸ்டரை ஒட்டி ஜெருசலேம் நகரில் மக்கள் பவனி வருவது குருத்தோலை ஞாயிறு எனப்படுகிறது..

சீடர்களால் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதை “பெரிய வியாழன்’ என்றும், அவரது மரண நாளை “புனித வெள்ளி’ என்றும் நினைவு கூறப்படுகிறது,,. 

சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை சந்தித்து, தான் கூறிய படியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த சம்பவமான, ”ஈஸ்டர்’ பெருநாளே, உலக வரலாறுக்கு வித்திட்ட நாளானது. 

 


இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்காக அவரை காட்டிக்கொடுத்தான். 

இயேசுவும் சிலுவை மரணத்தை சந்தித்து, தன் ரத்தத்தை சிந்தி, மனுக்குல பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். “” தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக எப்போதும் பரிசுத்தமாக வாழவேண்டும்,” என பைபிள் தெளிவுபடுத்துகிறது.

ஈஸ்டர் காலத்தில் மக்கள் தவவாழ்வு வாழ்கின்றனர். தங்கள் சுகங்களை குறைத்துக் கொள்கின்றனர். 

ஆனால், ஆண்டுதோறும் 40 நாட்கள் மட்டுமே விரதம் இருந்தால் போதாது. மீதியுள்ள நாட்களிலும் பாவவாழ்வுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கொடுக்கக்கூடாது.  ’ஈஸ்டர்’ உணர்த்தும் தத்துவம் இதுவே. 

உயிரை கொடுத்தார்; உலகை மீட்டார்:

இந்திய மொழிகளில் பைபிள் முதன் முதலாக மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் என்பது பெருமைக்குரிய விஷயம். 

நல்ல விதைகள் எப்போதுமே பயன் தராமல் போவதில்லை,

இயேசுவின் மரணம் புதைப்பல்ல,விதைப்பு.

மனுக்குலத்தின் மீட்பு மண்ணுக்குள் மரணிக்குமா ?

இல்லை அது தரையில் பயணிக்கும்.

சதிகளின் சட்டங்கள் உடலை வருத்தின,

நீதியின் தேவன் புது உயிரை வருத்தினார்.

நிரந்தர மீட்பைத் மக்களுக்குத் தரவே மீட்பரின் உயிர்ப்பு வரமானது.

வரலாறுகள் எல்லாம் நரை முடி தடவ, புது வரலாறு ஒன்று

புதிதாய் இதோ இங்கே நிகழ்ந்தது.

இது, ஏழைகளுக்காய் விழுந்த தங்கத் துண்டு,

மக்கள் தொண்டு கொண்டு வாழ்வை வென்றவரின் 

ஓர் இறவாக் காவியம் இது.

இயேசு, மனிதராய் வந்ததால் மனுமகனானவரல்ல,

மனுமகனாகியதால் மனிதனாய் வந்தவர்.

எனவே சாவு அவருக்கு சாய்வு நாற்காலி.

சாவு அவருக்கு இன்னொரு ஓய்வு, 

மரணம் அவருக்கு விசுவாச ஊழியன்.

இதோ, இந்த மகத்துவ சகாப்தம் இங்கே முற்றுப் பெறவில்லை… ஆரம்பமாகிறது.

இது மண்ணில் விழுந்து மனதில் முளைக்கும் விதை.

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>