/* ]]> */
Oct 052011
 

நகரேஷு காஞ்சியில் நவராத்திரி 

Navratri Graphic #6

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உருவானாய் போற்றி

வழிபட்டு வருவோர்க்கு வாழ்வு என்றும் நிறைவாக்கும் முக்தித் தலங்கள் ஏழினுள் ஒன்று காஞ்சிபுரம். 

Ekambar temple, Kancheepuram - image courtesy: Wikipedia

நான்கு வேதங்களும் மா உருவாக பூசித்த தலம் கச்சி ஏகம்பம்.

பஞ்சபூதத் தலங்களுள் மண்ணாக (பிருத்திவி) அருள் பாலிக்கும் ஆலயம் . ஏலவார்குழலி உடனாகிய திருஏகம்பப் பெருமான் ஒற்றை மாவடியின் கீழ் எழுந்தருளி இவ்வுலகைக் காத்து வருகிறார்..

காஞ்சியின் அமைப்பு மயிலைப் போன்று இருந்ததாக காளிதாசர் பெருமையுடன் குறிப்பிடுவார்.. 

கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட இராஜகோபுரம் 192 அடி உயரமுடையது. கோபுரத்தில் ஒன்பது நிலைகள் உள்ளன. . கோபுரத்தின் கீழே மேற்குப் பக்கத்தில் ஆறுமுகப் பெருமானும், கிழக்குப் பக்கத்தில் விநாயகரும் மிகப்பெரிய உருவில் இருந்து அருள் பாலிப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது.இராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது சரபேஸ்வரர் மண்டபம் என வழங்கப்படும் வாஹன மண்டபம் ஆகும்.

 திருவேகம்பநாதர் ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

இடது பக்கமாக கம்பா தீர்த்தம் அமைந்துள்ளது. கங்கை, யமுனா, சரசுவதி ஆகிய நதிகளில் நீராடிய புண்ணியம் இத்தீர்த்தத்தில் கிடைக்கிறது.

விகட சங்கர விநாயகர் சந்நதி இருக்கிறது. இங்குதான் இரட்டைப் புலவர்களால் மிகப்பெருமைவாய்ந்த திருவேகம்ப நாதர் உலா பாடப்பட்டது.

நவராத்திரி காலங்களில், மக்களால் சிறப்பாக அபிஷேக ஆராதனைகளுடன் விளங்கும் பிரளயகால சக்தி சந்நிதி அமைந்துள்ளது. உலக அழிவின்போது மக்களைக் காத்து இரட்சித்த அம்பாளாகையால் இந்த அம்பாளுக்குப் பிரளயகால அம்மன் எனப் பெயர் வழங்கப்படுகிறது.

அதையடுத்து பிரகாரத்தில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். அதற்கருகில் 108 தனி லிங்கங்களும், ஒரே லிங்கத்தில் 1008 சஹஸ்ரலிங்க சந்நதியும் அமைந்துள்ளன. சஹஸ்ரலிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்தால் நினைத்தது நடக்கும்! கேட்டது கிடைக்கும்!

ஏகாம்பரநாதர் ஆலயத்துள் தட்சணாமூர்த்தி சந்நிதி கிடையாது. இவ்வாலயத்திற்கே சிறப்புத் தரும் பெரிய ஆலமரம் ஒன்று சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது. 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாமரத்தை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் வழிபட்டதாக வரலாறு!

 மாவடியின் கீழ் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரப் பெருவிழாவில் சுவாமி திருக்கல்யாணத்தின்போது மாவடியின் கீழே ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெறக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

 அம்பலவாணர் (நடராஜர்) சந்நிதி இங்கு உள்ளது. நடராஜர் உருவம் ஐம்பொன்னால் ஆகிய மிகப்பெரிய திருமேனியாகும்.

ஆலயத்தின் உள்ளே ஏலவார்குழலியாகிய அம்பிகை இறைவனை அடையும் பொருட்டு கம்பா நதியில் மணலால் லிங்கம் உருவாக்கி, தவம் செய்து வழிபட்டாள். அப்போது இறைவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை உருவாக்க, அம்பிகை பயந்து மணல் லிங்கத்தை மார்புறத் தழுவினாள் என்பது வரலாறு.

எனவே இன்றும் அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையார்க்கே நடைபெறுகின்றன. மணல் லிங்கமாக எழுந்தருளியிருக்கும் திருவேகம்பப் பெருமானுக்குச் சாந்து சாத்தித்தான் இன்னமும் வழிபாடு நடைபெறுகிறது.

சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமான் தழுவக் குழைந்தார் என்பர்.

ஆலயத்தின் பிரகாரத்தில் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்சந்நிதி இருக்கிறது. மூலவருக்கு நிலாத் திங்கள் துண்டத்தான், சந்திர சூடப்பெருமாள் எனத் திருநாமங்கள் உண்டு. சந்திர புஷ்கரணி தீர்த்தத்தை உடைய இங்கு வீற்றிருக்கும் தாயருக்கு நேர் ஒருவரில்லா வள்ளி, நிலாத் திங்கள் துண்டத் தாயார் எனப் பெயர்கள் வழங்குகின்றன.

Kanchipuram Kailasanathar temple parrots

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பார்வதி தவத்தைச் சோதிக்க சிவபெருமான் மாமரத்தை எரித்தார். அன்னை தன் தங்கையின் பொருட்டு மாமரத்தைத் தழைக்கச் செய்தார். அவள் தாபத்தைத் துண்டித்தபடியால் நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் வழங்கலாயிற்று.

 சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது “உன்னைப் பிரியேன்” என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

நாயன்மார் மூவராலும் பட்டிணத்து சுவாமிகளாலும் பாடல் பெற்ற தலமாகும். இவ்வாலயத்தில் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

 

காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.

அருகில் உள்ள விமான நிலையம் – சென்னை 56 கி.மீ தொலைவில்.

 Swamy Manavala Maamunigal, Kanchipuram

Swamy Manavala Maamunigal, Kanchipuram

 

Kanchipuram - Sculpted figure Varadaraja Perumal temple

Kanchipuram Photo

 

 

Kanchipuram Photo

gopuram of the Ekambareshwar temple

File:Ekambareshwar Gopuram.jpg

Kanchi Kamakshi temple

 

 

File:Kanchi Kamakshi temple22.jpg

File:Kanchi Kamakshi temple1.jpg

Navratri Graphic #6

 


ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>