/* ]]> */
Feb 072012
 

உலக ஒளி உலா தைப்பூசத் திருத்தேரோட்டம்

 

 


murugan_jd1pu7kq.jpgmurugan_jd1pu7kq.jpg


Thaipusam Batu Caves Greetings Card

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

animated-globe.gifHindu Gods Images Pictures Greeting Cards and Scraps for Orkut

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள்தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. 


 முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும். 

அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.


பழனி மலையில் வைத்துத்தான் மகன் முருகனுக்கு வேல் கொடுத்தார் பார்வதி.

 

எனவே பழனியில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகப் பெருமானின் தலங்களை விட விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

 அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்..


 

தேர் ரதவீதிகளை வலம் வரும் போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுத பாணிக்கு அராகரா என்று பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி பக்திப்பரவசம் பரவச்செய்வார்கள்..

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் 

தந்த சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த 

அருள்மிகு வள்ளி தெய்வானை சமேதர் முத்துக்குமார உற்சவம் 

முருகனின் மணக்கோலம்

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். 

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். 

தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோவிலில் 

காவடியுடன் ஆடிப்பாடி வந்த சேர்ந்த பக்தர்கள்.


திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக் கரையில் தவமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.


பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்திக் கலசத்திலிருந்து எழுந்து வரும்படி பதிகம் பாடி ஞானசம்பந்தர் அவளை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு தைப்பூசத்தன்று நடந்ததாக மயிலை கபாலீஸ்வரர் தலபுராணம் கூறுகிறது.


ஸ்ரீவள்ளியை முருகப் பெருமான் திருமணம் புரிந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வேள்வி மலை. இங்குள்ள கோவிலில் முருகப் பெருமான் எட்டடி, எட்டு அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் சுமார் ஆறடி, இரண்டு அங்குல உயரத்தில் ஸ்ரீவள்ளி வளமாக அருள்கிறாள். வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. எனவே இங்கு தெய்வானை விக்கிரகம் இல்லை. கும்பகோணத் திலிருந்து தென் கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத் தலம். இங்கு காவேரி ஸ்ரீமன் நாராயணனை நோக் கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது. இத்தலத்தில் மட்டும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய தன் ஐந்து பத்தினிகளுடன் தேரில் பவனி வருவார்.

திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்ச வம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்..


புலிக்கால்  முனிவர் (வியாக்ரபாதர்), பதஞ்சலி முனிவர், ஜைமினி முனிவர் ஆகிய மூவருடன், தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் இறைவன் நடனம் ஆடினார். அதுவே ஆனந்த நடனம் ஆகும். இந்த அற்புத நிகழ்வு சிதம்பரத்தில் தை மாதத்தில் பௌர்ணமி கூடிய பூசத் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது. மேலும் பல திருத்தலங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.


சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள். அதை நிரூபிக் கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஸ்ரீரங்கம்- கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி காணுகிறாள் மாரியம்மன். 

 அப்போது ரங்கநாதர் கோவிலிலிருந்து மாலை, சந்தனம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் யானைமீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கப்படுகிறது.

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். தரைமட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் இந்தக் குகை உள்ளது. இந்தக் குகைக் கோவிலின் முகப் பில் 42.7 மீட்டர் உயரமுள்ள முருகப் பெருமான் அருள் புரிகிறார்.

. இந்தச் சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானதாம். இந்த முருகன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். பத்து குகை முன்புறமுள்ள பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழிவார்கள். 

தைப்பூசம் மிகச் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை பஞ்சமூர்த்திகள்தேரோட்டம்


Shrungagiri Shanmukha Temple, Bangalore

பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்தையொட்டி…

தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். 

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். 


பழநி தைப்பூச தேரோட்ட விழா

முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

சிங்கப்பூர் தைப்பூசம் 

Hawaii, USA

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>