/* ]]> */
Oct 242011
 

தங்க அன்னபூரணி தரிசனம்

[Gajalakshmi.GIF]

Happy Diwali Glitter Greetings

அன்னபூர்ணே சதாபூர்ணே

சங்கர பிராண வல்லபே

ஞான வைராக்ய சித்யர்த்தம்

பிக்ஷாம் தேஹி ச பார்வதி.

படிமம்:Emblem of Ayyavazhi.jpgபடிமம்:Emblem of Ayyavazhi.jpg

முக்தி நகரமாம் வாரணாசியில் தங்க அன்னபூரணி தீபாவளியன்று லட்டுத்தேரில் வலம் வருகின்றாள். வருடத்தில் தீபாவளி சமயத்தில் மட்டுமே நாம் தங்க அன்னபூரணியை நாம் தரிசனம் செய்ய முடியும்

காசியில் அமர்ந்து இருக்கும் அன்னபூரணி, காசி விசாலாட்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி அங்கு வருபவர்களுக்கு பிரகாசம் என்கின்ற ஞானத்தைத் தந்து அங்கு வந்து மரணம் அடைபவர்களுக்கு அந்த கடைசி மூச்சோடு அவர்கள் செவிகளில் தாரக மந்திரமான ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்து அவர்களையும் அதை உச்சரிக்கச் செய்து அவர்களுக்கு முக்தி தருகின்றார்.

ஜீவ நதி. கங்கை, கங்கை என நாம் வாயாரச் சொன்னாலேயே நமது பாபங்கள் விலகும், புண்ணியம் கிடைக்கும். மனதில் உண்மையான தூய எண்ணத்துடன் கங்கா தேவியை நாம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக அவள் நமக்கு நாம் வேண்டியதை நடத்திக் கொடுப்பாள்.

அலஹாபத்தில் உள்ளவர் வேணி மாதவன். அவரே காசியில் காசி மாதவன் எனப்படுகிறார். சேதுவிலோ சேது மாதவன் என்ற பெயரில் உள்ளார்.

கல்லினுள் தேரைக்கும் கருப்பையுள் உயிருக்கும் அவள் அன்னமிட்டாக வேண்டும்.

அன்னபூர்னேஸ்வரி அம்மனின் ஆலயம். மூலஸ்தானத்தில் உள்ளவள் விக்ரஹம் பெரிய அளவில் உள்ளது.  அன்னபூர்னேஸ்வரியின் கையில் உள்ள கரண்டியால் உணவு தர அதை திருஓடு ஏந்திய கையில் பிட்சையாக பரமசிவன் வாங்கிக்கொள்வது அற்புதமான காட்சியாகும். அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனதில் தோன்றும்.

விஸ்வநாதர் சன்னதிக்கு எதிரில் லட்டுவிலான தேர் செய்து வைத்து இருப்பார்கள்.  அர்த்த ஜாம பூஜையின்போது பள்ளத்தில் உள்ள சிவனை மேலே கொண்டு வந்து ஒரு கட்டிலில் சயனிக்க வைப்பார்கள்.  ஸ்ரீ விசாலாட்ஷி அம்மனை தரிசனம் செய்தபின் கரையில் உள்ள வராஹி அம்மனையும் தரிசனம் செய்த பின் செல்ல வேண்டும்.

அன்னபூரணியின் மகிமையை கூற முடியாது. ஈரேழு பதினாறு லோகங்களையும் படைத்து ஈ எறும்பில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அன்றாடம் உணவு அளிப்பவள் அன்னபூரணி . அங்குள்ள விசாலாட்ஷிக்கு தென்னாட்டு மக்களினால் உணவு படைக்கப்படுகின்றது.

வடநாடெங்கும் தங்கள் இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

தீபாவளியன்றுதான் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களை பெற்றார். அதனால் தீபாவளியன்று பல்வேறு பலகாரங்களுடன் காசு, பணம் வைத்து குபேர பூஜை செய்வது உண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

பார்வதி தேவி கேதார கௌரி விரதம் 21 நாள் இருந்து விரதம் முடித்து இறைவனின் உடலில் இடப்பாகம் பெற்றது ஐப்பசி அமாவாசை அன்றுதான். இன்றும் பலர் தம் இல்லங்களில் கேதார கௌரி விரத நோன்பு கும்பிடுகின்றனர்.

 

நேபாள நாட்டில் தீபாவளியை “தீஹார்” என்ற பெயரில் 5 நாள் விழாவாக கொண்டாடுகின்றனர். இதில் லக்ஷ்மி பூஜை சிறப்பிடம் பெறுகின்றது.

 

தீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட முதல் நாடு சிங்கப்பூர் ஆகும் அமெரிக்காவும் தபால் தலை வெளியிட்டுள்ளது. .

குஜராத் மக்களுக்கு தீபாவளிதான் வருடப்பிறப்பு . அங்கு இத்திருவிழா லக்ஷ்மி பூஜை, புது கணக்கு ஆரம்பித்தல் என்று வெகு சிறப்பாக அமாவாசை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது. குஜராத் என்றாலே இனிப்புதான் ஐந்து நாட்கள் ஆனந்தமாக கொண்டாடுகின்றர் இவர்கள் முழு விடுமுறையுடன்.

படிமம்:Deepavali 18, Little India, Singapore, Oct 06.JPG

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>