/* ]]> */
Nov 162011
 

செல்வ முத்துக்குமாரர் 

சிவந்த கிரகமான செவ்வாயின் ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில்..

அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ அங்காரகனை வழிபட்டு வர ஏற்றம் பல உண்டாகும்.

 எவ்வளவு சாதுர்யமாக விஞ்ஞானத்தை, ஆன்மிகத் தேனில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்!

நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.

செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.

செவ்வாய்க்கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர்.

அங்காரகனுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், அபிஷேகம் செய்து ஆலயம் முழுவதும் வலம் வருவார்கள்

முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும்.

வைத்தியக் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..

 செல்வ முத்துக்குமாரர் : வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் “செல்வ முத்துக்குமாரர்’ என அழைக்கப்படுகிறார்.

முருகன் செல்லக் குழந்தையானதால் அவரை தூங்க வைத்த பின்புதான் சிவனுக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.

செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார். 

சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.

கண்ணொளியால் இருளகற்றிக் காப்பாற்றி சித்தமெல்லாம் நிறைந்திருந்து தன் சின்ன முல்லைச் சிரிப்பாலே பேரருளின் ஒரு துளியால் பித்தமெல்லாம் தெளிய வைக்கும் அன்னை தையல்நாயகி

வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.

 தங்க சித்திரமாய் முத்து நகை வடிவழகோடு வாதையெல்லாம் தீர்த்திடுவாள்

 தாயின் வாஞ்சையுடன் அரவணைக்கும் அன்னை தைலநாயகி 

பச்சைக்கல்லாலான மரகத சிவலிங்கங்கள் தரிசித்தால் வாழ்வில் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.

Maragatha Lingam 

கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் கற்பகவிருட்சமாய் கோரிய வரம் அருள்வார்.

செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .

வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.

இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.

செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.

தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது.

மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம்

செல்வமுத்துக்குமாரர் சந்நிதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

சுவாமிக்கு மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் கண்கொள்ளாக்காட்சி..

 மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி

மாறி யாடெ டுத்த சிந்தை யநியாய

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி

வாரை யாயி னிப்பி றந்து இறவாமல்


வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎரித்து உன்றன்

வீடு தாப ரித்த அன்பர் கணமூடே

மேவி யானு னைப்பொல் சிந்தை யாகவேக ளித்துகந்த

வேளெ யாமெ னப்ப ரிந்து அருள்வாயே


காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட

கால பாநு சத்தி யங்கை  முருகோனே

காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த

காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா


சேலை நேர்வி ழிக்க றம்பெ ணாசைதோளு றப்பு ணர்ந்து

சீரை யோது பத்த ரன்பி லுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த

சேவல் கேது சுற்றுகந்த பெருமாளே.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கே உரிய திருப்புகழ் பாடல்கள் பாடி பவரோக வைத்திய நாத பெருமாளை வணங்கினோம்.

தினமும் அர்த்த ஜாமத்தில் முருகனுக்கு முத்துகுமார சுவாமிகளுக்கு தீபாராதனை நடக்கும். புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம், எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம், பால் அன்னம், பால் நைவேத்தியம் இரவு 9 மணிக்கு விசேசமாக பூஜை நடத்தி வழிபடுகின்றனர்

தையல் நாயகிக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

 கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம்.

அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு.

Vaitheeswaran Temple Photo - nataraja

Vaitheeswaran Koil wall painting,

 

Vaitheeswaran Temple Tower - Mayiladuthurai, Tamil Nadu

ganesh-statue-at-the-top-of-the-gopuram Vaitheeswaran Temple

Vaitheeswaran Temple Photo - ganesh statue at the top of the gopuram

Vaitheeswaran Temple Photo - detail of gopuram

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>