/* ]]> */
Jan 162012
 

உலக ஒளி உலா பொங்குக செல்வப் பொங்கல்

 

மாடு என்றால் செல்வம் என்கிற பொருளும் உண்டு..

நந்தி பூஜை

 மாட்டுப் பொங்கல் அன்று திருவண்ணாமலை கோவிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று  அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்யும் வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு  காட்சி தருவார்.

  மாட்டுப் பொங்கல்

தனது வாகனத்திற்கு  முக்கியத்தும் கொடுக்கும் விதமாக  சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

 “செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும்சிறுகோலே”என்றுரைத்த கம்பர்,

“உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி” என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள்தான்இவர்கள்!

 

உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான்… பொங்கல் திருநாள்.

எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது. “மேழிச் செல்வம் கோழைபடாது” என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தைஆட்கொண்டிருக்கிறது. 

Surya Pongal (Offering to Sun)

இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து, ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன.

இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப்பூர்வமாகவும்உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்தசமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.

 

இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!

வரப்புயர நீருயரும்!

 நீருயர நெல்லுயரும்!

நெல்லுயுர குடியுயரும்!

குடியுயர கோனுயர்வான்!.

 இந்தப் பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்திருக்காலமாக இருப்பதுஎவ்வளவு பொருத்தமான ஒன்று; எவ்வளவு அறிவார்ந்த செயல் அது! அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப்பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்தபொருத்தமான செயல்!. 

 

 பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் எனவியப்பாம்

 வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே 

வாளொடு முன்தோன்றி மூத்தகுடி. 

 என்பது தமிழரின் வீரத்தை வலியுறுத்தும் புறப்பொருள் வெண்பாமாலை என்ற அரிய நூலில் இடம்பெற்றுள்ள பாடலிது. இத்தகைய தொன்மைக்காலவரலாற்று நாகரிகத் தோற்றக் காலத்திலேயே சூரிய வழிபாடும் அதையொட்டிய பொங்கல் திருநாளும் மறத்தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த ஆதாரச்சான்றுகளைப் பல பாடல்கள் மூலம் நாமறியலாம்.

பொங்கல் தமிழரால், வானியல் அறிவை வெளிப்படுத்தும் ஓர் அறிவியல் நுட்பத்தோடுகொண்டாடப்பட ஒரு பெருவிழா

 

ஒரு காலத்தில் இந்திரன் முதலான தேவர்களுக்கு மக்கள் விசேச பூசைகளைச் செய்தனர். அதனால் அவர்கள் கர்வம் கொண்டனர். அதனால் தேவதைகள்மூலம் வரவேண்டிய உதவிகள் குறைந்து விட்டன. மக்கள் கண்ணனிடம் வேண்டினர். இந்திரன் கோபமுற்றான். மிகுதியான மழை பொழியச் செய்து மக்களைதுன்பத்துக்குள்ளாக்க, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து மழையிலிருந்து மக்களைக் காத்தான்.

இந்திரன் மன்னிப்பு கேட்டான். கண்ணன்மக்களைப் பார்த்து கோ-பூசை செய்யுங்கள் என்று சொன்னதில் தொடங்கியது பொங்கல் பண்டிகை..” என்று பொங்கல் வரலாறு துவங்கியது..

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா தனிப்பெருந்திருவிழாக்கோலம் பூணுகிறது.

இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். 
ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>