/* ]]> */
Oct 162011
 

சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்

ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்து தாய்நாடு திரும்ப பிரிஸ்பேன் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியது. சுத்த சைவம் என்பதால் இந்தியாவிலிருந்து செல்லும் போது விமானத்தில் எதுவும் சாப்பிடாதாததால் விமானப் பணிப்பெண் நீங்கள் திரும்பும் போது சைவ உணவு ஏற்பாடு செய்கிறோம் உங்கள் ரிட்டன் பயணச்சீட்டைத்தாருங்கள் இருக்கை எண்ணையும், தேதியையும் குறித்துக் கொள்கிறோம் என்று சொல்லி குறித்துக் கொண்டு , இப்போது அருமையான சைவ உணவு வழங்கினார்கள்.

ஒரு கால் இழந்த வெள்ளைக்காரர் ஒருவர் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாமல் விமானப் பணிப்பெண்களிடம் கேட்டு பானமும் கொறிப்பதற்கான பண்டங்களும் கேட்டு சாப்பிட்டபடியே இருந்தார்.

 முன் பக்கத்தில் குழந்தைகளுக்கான தொட்டில் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஏதாவது அழும் குழந்தையோ, அடம் பிடிக்கும் குழந்தையோ கண்ணில் தென்பட்டால் அது இந்தியக் குழந்தையாக மட்டுமே இருந்தது ஆரய்ச்சிக்குரியது.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஸ்டாப் ஓவர் என்று அழைக்கப்படும் தங்கும் நேரம் பன்னிரண்டு மணிநேரமாக இருந்தது. சிட்டி டூர் என்று அழைத்துச் செல்கிறாகள். நான் உலகப்பிரசித்தி பெற்ற , புதுப் பொலிவுடன் இருந்த விமான நிலையத்தையே சுற்றிப்பார்க்க முடிவெடுத்தேன். ஏற்கெனவே ஒருமுறை செந்தோசா தீவு மற்றும் பல இடங்களைப் பார்த்துவிட்டதால், விமான நிலையத்தையே சுற்றி வந்தேன்.நாமே நினைத்தாலும் தொலைந்து போக முடியத பாதுகாப்பான இடமல்லவா??

 இந்திய அரங்கு ஒன்று நம் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.மெகந்தி வைத்து அழகு படுத்தினார்கள். நிறைய ஆங்கிலேய பெண்களும், சில ஆண்களும் கூட வியப்புடன் மருதாணி போட்டுக்கொண்டார்கள்.

 காதலன் படத்தில் பிரபுதேவா நக்மாவுக்குச் செய்து கொடுத்த கிலுகிலுப்பை போல் பனை ஓலையிலும், ஒயரிலுமாக செய்து அன்பளிப்பாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார்கள். அதுமட்டுமா? பழ்ங்கால ராந்தல் விளக்கு, பாத்திரங்கள் அடுக்கி கிராமத்து வீடு போல் அலங்கரித்து ,அங்கே அமரவைத்து படம் எடுத்து அப்போதே கையில் படத்தைக் கொடுத்து மகிழவைத்தார்கள்.

 கண்களையே நம்பமுடியவில்லை கிளிக்கூண்டுடன் ஜோதிடம் பார்க்கிறேன் என்றார். இ-மெயிலும், வந்த விமானத்தின் பெயரும் பதிந்து கொண்டு, கிளியைக் கூப்பிட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னார். அது பல அட்டைச் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுவிட்டு, என் பெயருக்கான சீட்டை எடுத்துக்கொடுத்தது

அவர் என்னையே படித்துக் கொள்ளச் சொன்னார்.

நம் கிராமத்தில் கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டின் படமும், ஜோசியக்காரர் ராகத்துடன் படிக்கும், பலனும், அதை வாய்பிளந்து கேட்கும் மக்களுமாக சூழ்நிலையே கலக்கலாக இருக்குமே! இங்கோ !ஆங்கிலத்தில் பலன் எழுதியிருந்த நான்கு வரியைப் படித்ததும் சரியாக் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டார் – அவர் சிங்கப்பூரிலேயே பிறந்த இலங்கையைச் சேர்ந்தவராம்.ஆக்டோபஸ் ஜோதிடம் நினைவுக்கு வந்தது. அடுத்த முறை முயற்சிப்பார்களோ என்னவோ.

 சில கணிணிகளும் அதற்கு மேல் காமிராவுமாக இருந்த இடத்தில் காமிராவைக் கிளிக் செய்துவிட்டு, இ மெயில் தட்டச்சு செய்தால் அடுத்த நொடி புகைப்படம்  அந்த மெயிலுக்குச் சென்றடைகிறது.

அங்காங்கு இருந்த கணிணியில் இந்தியவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் சாட் செய்தேன். முப்பது நிமிடங்களில் கணிணி தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. காத்திருப்பவர் நமக்குப்பிறகு யாரும் இல்லாவிட்டால் மீண்டும் நாமே இயக்கலாம்.

 கால் பிடித்துவிடும் இயந்திரம் ஆங்கங்கே இருக்கிறது. முப்பது நிமிடங்களுக்கு மேல் இயக்குவது ஆரோக்கியமானதல்ல என்று குறிப்பிடிருக்கிறார்கள்.

சுற்றிச்சுற்றி கால் அசரும் போதெல்லாம் நேரம் செட் செய்துவிட்டு கால்களுக்கு மசாஜ் செய்து கொண்டால் மீண்டும் நடக்க உற்சாகமாக இருக்கிறது.

மசாஜ் நிலையங்களில் மெனிகியூர்,பெடிகியூர், கழுத்து மசாஜ செய்ய கட்டணம் உண்டு. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்றவற்றிற்கு நல்ல ரிலீப் கிடைக்குமாம்.

 திரைப்பட அரங்கில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருக்க இருக்கையில் சிலர் தூங்கிக் கொன்டிருந்தார்கள்.

அரேபிய உடையுடனும்,பர்தாவுடனும் ஒரு கூட்டம் கடக்க, துபாய் செல்லும் விமானம் கிளம்பத்தயாரானது தெரிகிறது.

சீருடை அணிந்த ஜப்பானிய மாணவர்கள் தங்கள் ஆசிரிய வழிகாட்டியுடன் லண்டன் பயணத்திற்குத் தயாரானார்கள்.

சென்னை செல்லக் காத்திருந்த மாணவர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

டிரேவலேட்டர்கள் மிகவும் வசதியாக இருக்கின்றன.அருமையான இயற்கைச் சூழலிலான பட்டாம்பூச்சி பூங்கா கண்ணயும் கருத்தையும் கவர்ந்தது.

காகடஸ் கார்டனில் கள்ளிச் செடிகளின் அணிவகுப்பு. கள்ளிக்கேது முள்ளில் வேலி ??

சூரியகாந்திப் பூங்கா சூர்யப் பிரகாசத்துடன் போட்டியிட்டு மலர்ந்து , முகம் மலர்ச்சியுறச் செய்தது.

 காவேரி உணவகத்தில் சைவ உணவு கிடைக்கிறது. பில்டர் காபியும்.

கண்ணாடிச் சுவர்களின் வெளியே விமானம் இறங்குவதும்,புறப்படுவதுமாக காட்சிப்படுகிறது. மழை பெய்து சூழலை மேலும் அழகாக்குகிறது.

விமான நிலயத்தில் வாங்கும் பொருள்களுக்கு சலுகை அறிவிப்புகளோடு கண்கவரும் விற்பனை நிலையங்கள் ஏராளம்.

ஸ்குரூக்கள் என்னும் விமான நிலையப் பணியாளருக்கான சிறிய ஜீப் போன்றும், இருசக்கர வாகனம் போலும் பணித்துக் கொண்டிருந்தன.

அதிநவீன தொலைக்காட்சிப்பெட்டிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பகிக் கொண்டிருக்க, மிக வசதியான இருக்கைகள் அமைத்திருக்கிறார்கள்.

Changi Airport Orchid Garden - Singapore, Singapore

 மீன்களோடு குளமும் ,பாலமும், அழகிய இருக்கைகளும், பசுமையான சூழலுமாக மனம் கவர்கிறது. அந்த மீன் விலை மிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாஸ்து மீன் என்னும் அரவணா மீன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் விளயாட அருமையான விளையாட்டிடத்தில் மகிழ்ச்சியாக பல்வேறு தேசக் குழந்தைகள் விளயாடிக் களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வண்ண வண்ண கிரையான்களும், காகிதங்களும் உலோக அச்சில் காகிதத்தை வைத்துத் தீட்டினால் உருவங்கள் தோன்ற குதூகலத்துடன் குழந்தைகள் கைவண்ணம் கண்டு மகிழ்கிறாகள்.

 உலகின் சிறந்த விமான நிலையத்தில் மறக்க முடியாத நினைவுகள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>