உலக ஒளி உலா சமர்த்தனே மணி மரகத மயில்வீரா .
- ஓம் சக்தி ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் -
பராசக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம் வெற்றி வடிவேலன் - அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ! - பகையே! துள்ளி வருகுது வேல் - ஓம் சக்தி
தெய்வப் பாடல்களில் ஆறு துணைகளில் மகாகவி பாரதியார் முருகனின் வெற்றி வடிவேலின் துணையைப் போற்றி மனதில் வீரம் செறிய வைப்பார்...
தருக்கு லாவிய … கொடியிடை மணவாளா …
சமர்த்த னேமணி மரகத மயில்வீரா …
திருக்கு ராவடி நிழல்தனில் … உறைவோனே …
திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே. …
அருணகிரிநாதரால் சம்ர்த்தனாகிய முருகன் எழிலுற பாடப்பட்ட அழகிய திருத்தலம் திருவிடைக்கழி..
அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும் வர
அவர் அவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே …
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக
மன் அருள் திருவினைப் புணர் அரி திரு மருகோனே .
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள்
வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே. ...
திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.
தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் தலம்.
இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.
தமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கென்று உள்ளத் திருத்தலங்களில் குரா மரத்தினைக் தன்னகத்தே தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைகழி மிக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
இக்குரா மரத்தினடியில் முருகப் பெருமான் விரும்பி காலாற நடந்து ,உலா வந்து மற்றும் சிவப் பெருமானை பூஜித்து வரம் பெற்றார்.
அருணகிரி நாதரும் கந்தனைப் பாடி போற்றி அஷ்டமாசித்திகள் அடைந்த அற்புதமானத் திருத்தலம்..
அதிசயம் பல நிறைந்த குரா மரத்தின் பூக்களை அனைத்து மதத்தினரும்,மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அணிவித்து மகிழ்வர்.
தைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது!
திருவிடைக்கழி திருத்தலமும் குரா மரமும்
திருக்கோவில் தல விருட்சங்களில் மிகவும் அபூர்வமான ஒன்று குரா மரமாகும்.
முருகனை, ராகுபகவான் வழிபட்ட தலமாகும்.
”குரா” என்பதைத் திரும்பி படித்தால் ராகு என்பது விளங்கும்.
ராகு தோஷத்தால் பீடிக்கப்பட்டு களத்ர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, தோஷம் நீங்கப் பெறலாம்.
குன்றிருக்கும் இடம் மட்டும் குமரன் இருக்கும் இடமல்ல, குரா மரம் இருக்கும் இடமும் குமரன் இருக்கும் இடமே.
ஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் அமைந்துள்ளது. குரா மரத்தின் இலைகளுக்கு விஷமுறிவு சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.
குரா மரத்தின் மலரைப் போற்றாத சமய இலக்கியமே இல்லை எனலாம்.
குராமரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஒரேத் திருத் தலம் திருவிடைக்கழி ஆகும்.இம்மலரில் முருகனது திருப்பாதம் ஒளிந்து உள்ளது என்று திருப்புகழில் அருணகிரி நாதர் போற்றி உள்ளார்.
“சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி
இருக்கு வேந்தனும் இமையவர் பரவிய
திருக்குராவடி நிழல்தனில் உலவியப் பெருமானே”
வெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது வடக்கே குரா மரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது..மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் குராமரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று..
இங்கே யோக சுப்பிரமணியர் என்றத் திருநாமத்துடன் முருகர் சிவ பெருமானை பூஜித்தார்.
இங்கே இதனருகேயே மகிழ மரம் ஒன்று இருக்கிறது.இது இத்தலத்தில் உள்ள பாபநாச பெருமானுக்குறிய தலவிருட்சமாகும்.
இரண்டு தல விருட்சம் ,கருவறையில் இரண்டு பெருமான்,இரண்டு கோபுரம்,இரண்டு சண்டிகேஸ்வரர் என்று இரண்டிரண்டாக காணப்படுவது மிக்கச் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருவிடைகழிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு, இங்குதான் தெய்வானைக்கும் முருகப்பெருமானுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாம். இதற்கு சான்றுபோல் தெய்வானை சந்நிதியில் உள்ள அவரின் சிலையில் முகம் முருகப்பெருமானை நோக்கி சற்றே நாணத்துடன் தலை சாய்த்து இருப்பதுபோல் காணப்படுகிறது.
திருவிடைக்கழி முருகன், தெய்வானை.
திருமணத்தடை நீக்கி திருமணம் கைகூட நிகழ்த்தபடும் வழிபாடுகள் மூலம் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்பது சத்தியம்….
இத்திருத்தலம் மயிலாடுதுறை அருகே திருக்கடவூர் கோவில் மற்றும் தில்லையாடித் திருத்தலத்தின் அருகே உள்ளது..
சூரபத்மன் வதம் செய்தபின் சுறா வடிவமெடுத்து மறைந்த சூரபத்மனின் புதல்வன் இரண்யனை வதம் செய்து தன் மீதான சாபம் தீர ஈசனை நோக்கி தவம் செய்த இடம்
முருகப் பெருமானையும்,குரா மரத்தினையும் நினைத்து பிரார்த்தணை செய்தால் முருகன் அருள் கிட்டுவது திண்ணம்,,,,
‘
முருகன், அழகன், அலங்கார முருகன் .MURUGANUKKU AROHARA!!!
DEVI KOLAPURAMMA, MYSORE, CURRENCY DECORATION, INDIA.
கோலாபுரி அம்மன் பணமுடிப்பு அலங்காரம், மைசூர்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments