/* ]]> */
Jan 202012
 

அஷ்ட ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும்,பெயர் புகழும் பெற்
லட்சுமி குபேர மந்திரங்கள்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள
சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!
2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச
குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய
ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!
4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!
8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!
9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!
10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!
11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!
12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!
13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!
14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!
15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!
16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!

ஓம் நமோ நாராயணாய

குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பொதிகை மலைக்கு வந்தான். ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையில் பெருமாளைப் பூஜிக்க நினைத்தான். அவரது வராக அவதார சிலையை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டான். காலப்போக்கில் அந்த இடம் மறைந்துவிட்டது.

ஒருசமயம் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய பெருமாள், நதிக்கரையில் புதைந்து கிடப்பதாகக் கூறினார். அவர் அரசனிடம் அதுபற்றி கூறவே, அவன் சிலையைக் கண்டுபிடித்து கோயில் எழுப்பினான்.

கல்யாண வரம்: ஆதிவராகர், பத்மபீடத்தில் மடியில் பூமாதேவியை அமர்த்தி காட்சியளிக்கிறார். எப்போதும் தாயாருடன் சேர்ந்திருப்பதால் இவர், “நித்ய கல்யாணப்பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்திற்கு “கல்யாணபுரி’ என்றும் பெயருண்டு.

திருமணமாகாதவர்கள் உற்சவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபடுகிறார்கள். உற்சவருக்கு “லட்சுமிபதி’ என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புதுமணத்தம்பதிகள் இங்கு சென்று வந்து வாழ்வைத் துவங்கலாம். திருமண நாளைக் கொண்டாடுவோர் இவரை வணங்குவதன் தீர்க்காயுளும், சகல செல்வங்களும் பெறுவர்.
பூதேவி

ஸ்ரீதேவி

பூமாதேவியை மீட்க, சுவாமி வராக அவதாரம் எடுத்தார் என்பதால், பூமாதேவிக்கு தனி சன்னதி உள்ளது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர், இந்த சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடியுள்ளார். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற கருட சேவை செய்து வழிபடுகிறார்கள். ஒரு ஆண்டில் பலநாட்கள் இங்கு கருடசேவை நடக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், செல்வம் பெருகவும் இங்கு வழிபடுகிறார்கள்.

கருட வாகனம்

திருமணநாளைக் கொண்டாடும் தம்பதியர், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாளை தரிசித்தால், தீர்க்காயுளும், சகல செல்வங்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.

இரண்டு தரிசனம்: பெருமாள் வராக மூர்த்தியாக, பூமாதேவியை மடியில் அமர்த்தியபடி பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.
மூலவர் ஆதிவராகர்

இவருக்குதாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது.இதற்காக தினமும் காலையில் சுவாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்குச் சென்று, தீர்த்தம் எடுத்து வருகிறார்.
மூலவர் விமானம்

சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் இருக்கிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர். தினமும் காலையில் இவருக்கு பூஜை நடக்கும். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.
விமான சன்னதியில் சயனப்பெருமாள்

கோயில் மேல் சுவரில் மூல கருடாழ்வார் இருக்கிறார். ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனத்துடன், பூ ஆடை அணிவித்து பூஜை நடக்கும்.
கோயிலின் மேல்பகுதியில் கருடாழ்வார்

பிரகாரத்தில் லட்சுமி நாராயணர், விஷ்வக்ஸேனர், ஆழ்வார்கள் சன்னதி இருக்கிறது. பெருமாளின் தசாவதார வடிவங்கள், சுவாமி சன்னதி பின்புறம் இருக்கிறது. யானை, குதிரை வாகனங்களுடன் பீட வடிவில் சாஸ்தா இருக்கிறார்.
உற்சவர் லட்சுமிபதி

திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூர ஊஞ்சல் உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் 35 கி.மீ.. பழைய பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 7- 10.30 மணி, மாலை 5.30- இரவு 7.30 மணி.

விருதுநகர் ராமர் கோயில் ஆஞ்சநேயர்,
நாணயங்கள், ரூபாய் நோட்டு அலங்காரம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>