/* ]]> */
Sep 192011
 

காபி in ஆஸ்திரேலியா

 ஆஸ்திரேலியாவில் எனது மகன்தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றவர், காபி தயாரித்துக் கொடுத்தார். அங்கே காபி இயந்திரம் இருந்தது. இதற்கு முன் வேலை பார்த்த இத்தாலிக்காரர் ஒருவர் இத்தாலியில் இருந்துவரும் போது வாங்கிவந்தாராம்.

இயந்திரம் வந்த புதிதில் யாராவது காபி தயாரித்தால் இரண்டு டாலர் அங்கிருக்கும் உண்டியலில் செலுத்திவிட வேண்டுமாம். ஒரு கட்டத்தில் அந்த இயந்திரத்திற்கான தொகை நாளடைவில் கிடைத்துவிட, அன்றிலிருந்து காபி தயாரித்துக் கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியது இல்லையாம். எப்படி எல்லாம் யோசித்திருக்கிறார்கள் பாருங்கள்.

அலுவலகத்திற்குள்ளே குளிர்சாதனப் பெட்டியில் பால் பாட்டில் எப்போதும் வைத்திருப்பார்களாம். கொண்டுசெல்லும் மதிய உணவுப் பாக்கெட்டையும் வைத்துக் கொள்கிறார்கள்.

மதிய உணவை சூடு”படுத்தி” சாப்பிடுவதற்காக நுண்ணலை அடுப்பு (Microwave Oven) ஒன்றும் வைத்திருக்கிறார்கள். ஒரு தட்டில் ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, வாழைப்பழம் போன்ற பழவகைகள், ரொட்டி வாட்டு மின் கலம் (Bread Toaster) ஒன்றும் இருந்தது. சோபா, டீபாய், பக்கத்திலேயே அலமாரியில் செய்தித்தாள்கள் என்று அழகாக அமைத்திருக்கிறார்கள்.

முதலில் பில்டரில் இருந்து கப்பைக் கழற்றி அதிலிருந்த காபித்தூளை அகற்றி, சுத்தமாகக் கழுவினார். காபிக்கொட்டையை அதற்கான இயந்திரத்தில் அரைத்து, கப்பில் நிரப்பினார். பிரிட்ஜிலிருந்துபாலை எடுத்து இயந்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தினார்.

அறுபது டிகிரி சென்டிகிரேடு உஷ்ணம் தான இருக்கவேண்டுமாம் மிகச்சரியாக சூடுவந்ததும் அலங்காரமான நுரைபொங்கித்ததும்பும், வெண்ணிற நுரையின் மேல் பழுப்பு நிற டிக்காஷன் மகுடம் வைத்து அட! அடா!! என் வாழ்வில் இப்படி ஒரு காபியைச் சுவைத்ததில்லையே நான்!!

ஹும் பாற்கடலைக் கடைவதற்குக்கூட இப்படி ஒரு சிரத்தை எடுத்திருப்பார்களோ என்னவோ! அத்தனை கர்மசிரத்தையாகத் தாயாருக்கு காபி தயாரித்த தனயனைக் கண்கொட்டாமல் கண்டு களித்தேன்!

சுவைத்து அருந்தினேன். பேஷ்! பேஷ்!

ரொம்ப நன்னா இருந்தது!!

நன்றி மகனே !!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>