/* ]]> */
Dec 222011
 

உலக ஒளி உலா ஓம்கார ரத உற்சவம்

 கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் ஆறு கி.மீ. சென்று, அங்கிருந்து கொடுவாயூர் பாதையில் ஐந்து கி.மீ. சென்றால் கேரளபுரம் எனப்படும் கொடுவாயூர் திருத்தலத்தை அடையலாம். 


இங்கு ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனத்தின்போது 

(மார்கழி மாத வளர்பிறை திருவாதிரை நாளில்) தேர்த்திருவிழா 

நடைபெறுகிறது. அந்த நாளில் வாணவேடிக்கைகள், வாத்திய கோஷங்கள் என ஊரே அமர்க்களப்படும்.

 

கேரளபுரம்  ஆலயம் தமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆலயத்தின் வாஸ்து முறையில் கட்டப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.


மூலசந்நிதிகளுடன் கணபதி, சுப்ரமணியர், சூரியன், பைரவர், தட்சிணா மூர்த்தி, நவகிரகங்கள் உட்பட அனைத்து சந்நிதி களும் ஆகம முறைப்படி அமைந்திருக்கும் இந்த ஆலயம், தோற்றத்தில் கேரள கட்டிடக் கலை பாணியிலும், பூஜை முறையில் தமிழக பழக்க வழக்கங்களிலும் உள்ளது! 


மேற்கு முகமாக ஈசன் அருள்புரியும் மிகச் சில தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

 

மாலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேர்முக மாக ஆலயத்தில் வீழ்வதால், இந்த ஆலயப் பிரதிஷ்டைக்கு மகத்துவமும் கூடுதல் சக்தியும் உண்டென்று நம்பப்படுகிறது.

தலபுராணத்தில், லக்ஷ்மியம்மாள் என்ற மூதாட்டி தென்காசியிலிருந்து கொண்டு வந்த மூன்று லிங்கங்களில் ஒன்றுதான் கொடுவாயூர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

 

கேரளபுரத்தில் நடக்கும் தேரோட்டத்திற்கு சிறப்பு அதிகம். தகப்பனாரான ஸ்ரீவிஸ்வநாதசாமி, தன் மைந்தர்கள் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆகியோருடன் ஒன்றாகச் சேருவார். 1600 மீட்டர் நீளத்தில் ஓம்கார ரூபத்தில் அமைந்திருக் கும் ரதவீதி வழியாக ரதம் செல்லும்.


இவ்வாறு செல்லும்போது சென்ற வழியே திரும்பி வராமலும், எதிரிட்டுப் பின்னோக்கிப் போகாமலும் தேரும் பக்தர்களும் செல்கின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதங்களும் ரதச் சக்கரங்களும் பூமியின்மீது ஓம்கார மந்திரம் எழுதிய பின்னரே இந்த ரத உற்சவம் பூர்த்தியாகிறது. 


அன்றிரவு ஒரு மணிக்கு பதினோரு ருத்ர ஜபங்கள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து பதினோரு அபிஷேகங்கள், வேதபாராயணம், அலங்காரம், தீபாராதனை என காலை ஐந்து மணி வரை நடைபெறுகிறது. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன், நெய், இளநீர், பால், தயிர், கரும்புச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது.

 

பக்தர்களின் முன்பாக தீபாராதனை முடிந்தவுடன், விரத சுத்தியுடன் உள்ள அர்ச்சகர்கள் தெய்வ விக்ரகங்களைத் தோளில் சுமந்து, மூன்று முறை ஆலயத்தை வலம் வந்து, பின்னர் மேலை நடையில் உள்ள அரச மரத்தைப் பதினோரு முறை வலம் வந்து, அதன்பின் விக்ரகங்களைத் தேரில் ஏற்றுகின்றனர். 


ஆருத்ரா தரிசன முகூர்த்தத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவானின் வாகனமான கருடன் ஆலய வீதியில் மூன்று முறை பிரதட்சிணம் செய்யும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

கேரளபுரத்தில் பதினொன்று என்னும் எண்ணிக்கையில்தான் எல்லாம் நடைபெறுகிறது!


 
Padayani is a festival celebrated in the central travancore region of Kerala 


Fireworks

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>