/* ]]> */
Dec 272011
 

உலக ஒளி உலா ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

 

பூமாதேவி ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமாக பெரியாழ்வாரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தனர்.

விஷ்ணுசித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நந்தவனத்தை பராமரித்து, வடபத்ரசாயி பெருமாளுக்கு மாலை கைங்கர்யம் செய்து வந்தார். 

ஒரு ஆடிப்பூரத்தன்று கோயில் அருகில் இருந்த துளசித்தோட்டத்தில் ஒரு குழந்தையைக் கண்டெடுத்தார். அவளுக்கு “கோதை’ என பெயர் சூட்டி வளர்த்தார்.

பெருமாள் மீது அதீத பக்தி கொண்ட ஆண்டாள் அவரையே திருமணம் செய்வதென முடிவெடுத்தாள். 

தன் தந்தை சுவாமிக்கு அனுப்பும் மாலைகளைத் தன் கழுத்தில் போட்டு அழகுபார்த்து அனுப்புவாள். ஒருமுறை, அவளது அழகுக்கூந்தலில் இருந்த முடி ஒன்று மாலையில் மாட்டிக் கொள்ளவே, ஆண்டாள் தந்தையிடம் மாட்டிக் கொண்டாள். பெருமாளுக்கு இப்படி அபச்சாரம் செய்யலாமா என அவளைக் கண்டித்தார்.

ஆனால், அன்று அவர் அணிவித்த மாலையை பெருமாள் ஏற்க மறுத்தார். தன் பக்தை அணிந்த மாலையே தனக்கு வேண்டுமெனக் கேட்ட பெருமாள், அவளை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படியும், அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்தார். பின், சுவாமியுடன் ஜோதி வடிவில் ஐக்கியமானாள் ஆண்டாள்.

ராஜாங்க கோலம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உற்சவர் ரங்கமன்னார், வலதுகையில் பெந்துகோல் (தற்காப்புக்குரிய கம்பு), இடக்கையில் செங்கோல் ஏந்தி, இடுப்பில் உடைவாள் செருகி, காலணி அணிந்து ராஜகோலத்தில் இருக்கிறார். 


ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் மட்டுமே, விரதம் அனுஷ்டிக்கும் பொருட்டு இவர் வேஷ்டி அணிந்திருப்பார். மற்ற நாட்களில் நித்ய மணக்கோலம் என்பதால் ராஜாங்க கால உடை அணிவிப்பர். 

ஆண்டாள், திருமாலின் அம்சமான கண்ணனையே விரும்பினாள். எனவே, இத்தலத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக காட்சி தந்து அருள்புரிந்தார். எனவே, இங்குள்ள ரங்கமன்னார் கிருஷ்ணராகவும், ஆண்டாள் ருக்மணியாகவும், கருடாழ்வார் சத்தியபாமாவாகவும் அருளுவதாக ஐதீகம் உண்டு.

சிறப்பம்சம்: ஆண்டாள் கோயிலில் நடை திறக்கும் அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளை பார்ப்பதில்லை. கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியை பார்க்கின்றனர். பின் ஆண்டாள் முன் தீபம் ஏற்றுகின்றனர். திரையை விலக்கி, பக்தர்கள் ஆண்டாளைப் பார்த்த பின்னரே அர்ச்சகர்கள் ஆண்டாளை பார்க்கின்றனர்.

திருப்பதியிலும் ஆண்டாள் மாலை: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அவரது பிரம்மோற்ஸவ மாதமான புரட்டாசி கருடசேவை விழாவுக்கும், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அவருக்கு அணிவிக்கவும் கொண்டு செல்லப்படுகிறது. 

ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலை, மஞ்சள் செவ்வந்தி, விருட்சி என்னும் சிவப்பு நிற இட்லிப்பூ, வெள்ளை சம்பங்கி, பச்சை மருள், கதிர்பச்சைப்பூ ஆகிய பூக்களாலும், துளசி இலையாலும் தொடுக்கப்படுகிறது. இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது.

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை (இறைவனைச் சரணடைதல்) கடைபிடிக்க வேண்டும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. 

இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள். 

முப்பது நாள் கடுமையான நோன்பிருந்தாள். எண்ணியபடியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள். பூமியில் பிறந்தவர்கள், ஹரிநாமம் சொல்வதன் மூலம், நிச்சயம் அவனை அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.

அவள் தியாகச் செம்மலும் கூட. திருமாலின் துணைவியான பூமாதேவியே, ஆண்டாளாக அவதரித்தாள். கலியுகத்தில், இறைவனை அடைய, நாமசங்கீர்த்தனமே உயர்ந்தது என்பதை உலகத்தாருக்கு எடுத்துரைக்க, பூலோகத்துக்கு செல்லும்படி லட்சுமியிடம் சொன்னார் திருமால்; 

அவள் மறுத்து விட்டாள். “ஏற்கனவே சீதையாக பிறந்து, என் மேல் சந்தேகப்பட்டு, என்னைப் படுத்தியது போதாதா? இன்னொரு முறை பூலோகம் செல்லவே மாட்டேன்…’ என்றாள். 

பூமாதேவியை திரும்பிப் பார்த்தார் திருமால். பூலோகம் சென்றால் கஷ்டப்படுவோம் என்று தெரிந்தே, உலக நன்மைக்காக அவள் இங்கு வர சம்மதித்தாள். 

ஆண்டாள் எனும் பெயருடன், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற புண்ணிய ஷேத்திரத்தில், பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள். இறைவனை அடையும் வழியை எடுத்துக்காட்டிய பிறகு, அவரோடு கலந்தாள்.

“இறைவா… என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து…’ என வணங்கினால்; இறைவன் நல்லருள் தருவான்.

[andal+rangamannar.gif]

தமிழக அரசின் சின்னம்: ஸ்ரீவில்லி புத்தூர் கோயில் கோபுரம் 11 நிலைகளுடன் 196 அடி உயரம் உடையது. சிற்பங்கள் இல்லாத இந்தக் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக உள்ளது. இங் குள்ள தேரும் மிகப்பெரியது.

இருப்பிடம்: மதுரையில் இருந்து 85 கி.மீ., தொலைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளது.

போன்: 04563- 260 254.

[01_andal_kalyanam.jpg]

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!

எங்கள் ஆண்டாளும் ரங்க மன்னாரை மணந்தாளே.

கொத்தோட வாழை மரம் 

கொண்டு வந்து நிறுத்தி 

கோப்புடைய பந்தலுக்கு 

மேல் கட்டு கட்டி

கெளரி கல்யாண வைபோகமே 

லக்ஷ்மி கல்யாண வைபோகமே

மாலை சார்த்தினாள் கோதை 

மாலை மாற்றினாள் 

மாலடைந்து மதிலரங்கன் 

மாலை அவர்தன் மார்பிலே 

மையலாய் தையலாள் 

மாமலர் கரத்தினால் -

மாலை சார்த்தினாள் கோதை 

மாலை மாற்றினாள் 

மாலடைந்து மதிலரங்கன் 

மாலை அவர்தன் மார்பில

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை 

ஆசை கூறி பூசுரர்கள் 

பேசி மிக்க வாழ்த்திட 

அன்புடன் இன்பமாய் 

ஆண்டாள் கரத்தினால் 

மாலை சார்த்தினாள் கோதை 

மாலை மாற்றினாள், பூ – மாலை சார்த்தினாள்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே 

பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே 

ஸ்ரீ  ரங்க மன்னா மணமகன் ஆனாரே 

நம்ம ஆண்டாளும் மணமகள் ஆனாளே 

வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம் 

கோதைக்கும் ரங்கனுக்கும் ஆனந்தம் 

நாம் செய்த பூஜா பலமும் 

இன்று பலித்ததம்மா – ஆனந்தம்

[thirumanjanam.bmp]

புனிதமான பொருட்களின் வடிவங்களை கோலத்தில் வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். 

வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். 


 

ஏறு முகமான பலனை இது தரும்.கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஜக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது. சகல நன்மையும் தரும்.


[new+year.jpg]

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>