உலக ஒளி உலா அன்பென்ற மழையிலே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே
கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே
கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுதும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கென தயாரிக்கப்பட்ட பிரத்தியேக பொருள்கள் மார்கெட்டில் சக்கைப்போடு போடும். இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக தங்கத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தங்க கிறிஸ்துமஸ் மரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 12 கிலோ தங்கத்தினால் 2.4 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கிறிஸ்துமஸ் மரம் டோக்கியோவில் ஜின்ஷா தனாகா என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் வைக்கப்பட்டுள்ளது..
அந்த மரத்தில் 60 இதய வடிவங்களும், 100 தங்க ரிப்பன்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மரம் தயாரிப்பதற்காக பயன்படுத்திய தங்கத்தின் மதிப்பு ரூ. 3.90 கோடி. இதற்கான வடிவமைப்பு, செய்கூலி போன்றவற்றினால் இந்த மரத்தின் மதிப்பு ரூ. 10.50 கோடியை எட்டியுள்ளது. நகைக்கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கவே இந்தத் திட்டமாம்.
இந்த மரத்தை 15 தங்க நகை நிபுணர்கள் நான்கரை மாதங்கள் இரவு-பகலாக சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.
2011 இனிமையாய் கொண்டாடிய மலரும் கனவான நினைவுகள்
கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது
ரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன்
(sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடினார்
சோல் இன்விக்டுஸ்
(“வெற்றிவீரன் சூரியன்”, “தோல்வியடையாத சூரியன்“) சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுள்..
டிசம்பர் 25 குளிர்கால சம இரவு பகல் நாள்..
இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டு
ஓ, எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…கிறிஸ்துவும் பிறந்தது”என்பார்கள்..
கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பார்கள்..
பண்டைய ஈரானில் “ஒளி பிறக்கும் தினம்” கொண்டாடப்பட்டது. (இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி போன்றது.
உச்சக் குளிர்காலத்தில்தான் உலகம் முழுவதும் மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமான மிகப்பெரிய விருந்துகள், கேளிக்கைகள் என்றும் தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள்.
குளிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர்!
தென் துருத்திற்கு அருகில் இருக்கும் ஆஸ்திரேலியா மட்டும் வெப்ப காலமாக இந்த டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறது..
மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன்.
வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் மரம், ஸாண்ட்டா கிளாஸ், வால் நட்சத்திரம், ஒளியுமிழ் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்மஸ் மரத்துண்டு (Yule log), காலுறை தொங்க விடுதல், குழுப்பாடல், கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் என கோலாகல கொண்டாட்டம் நிகழ்கிறது..
tags : merry christmas, tamil christmas, கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, tamil cgristmas greetings, ஏசு, ஏசு கிறிஸ்து,
க்ட
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments