Nov 042011
அச்சம் தீர்க்கும் அஞ்சு வட்டத்தம்மன்
மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறையொளி நாவினர் கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.
-திருஞானசம்பந்தர்
- கந்தசஷ்டியின் போது முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்து, பின் மிகவும் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். கொல்வது என்பது யாராயிருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும். ஆகையால் பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் பரிகாரம் செய்துக்கொள்கின்றனர்.
- முருகனும் ஹத்தி தோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார். இது நாகப்பட்டினம் அருகில் இருக்கிறது. அழகான ஆறு ஒன்றும் அங்கு ஓடுகிறது. இங்கு இருக்கும் ஈச்வரன் அட்சயலிங்கர் க்ஷ்யம் ஒழிப்பவர், கெடுதலை ஒழிப்பவர், வியாதியை ஒழிப்பவர்.
- மூலவர் கேடிலியப்பர்
- அம்பாள் பெயர் சுந்தரகுஜாம்பிகை.
- முருகன் இந்தத் தலத்திற்கு வந்து தன் வேலை ஊன்ற, அந்த இடத்திலிருந்து புனிதநீர் பீச்சியது, அதுவே தீர்த்தமானது. அந்த தீர்த்தத்தில் நீராடி, பின் தியானத்தில் அமர்ந்தார்.
- பிரணவமே ஓதிய அழகன் தானே தியானத்தில் இருக்கிறார், அப்போதும் சூரசம்ஹாரக் காட்சிகள் அவர் தியானத்தைக் கலைத்தனவாம். தன் அன்னை உலகமாதாவை வணங்கினார், பின் வேண்டிக் கொண்டார், “தாயே, உலக நன்மைக்காக சூரசம்ஹாரம் செய்து விட்டு வந்தேன், ஆனாலும் என் மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது, தாங்கள் தான் அருள் புரிய வேண்டும்”.
- முருகனைச் சுற்றிப்பல பயங்கர முகங்கள் தாண்டவமாடின, எல்லாம் பார்க்க முடியாதபடி கோர உருவங்கள். அன்னை இதைப் பார்த்தாள். தானும் அவைகளை விரட்டி அடிக்க தன்னை மிக்வும் கோரமாக்கிக்கொண்டார்.
- எல்லா திசைகளிலும் தன் உருவத்தைப் பரப்பி ஒரு வேலி போல் போட்டு நின்றாள். அவள் பெயர் அஞ்சு வட்டத்தம்மன் ஆயிற்று. அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி நின்று முருகனைக் காத்ததால் இந்தப்பெயர்.
- அஞ்சு வட்டத்து அம்மன்
- அந்த உருவத்தைக்கண்டு பிரும்மஹத்திகள் ஓடிப்போயின.
- முருகனும் தவத்தை முடித்து அருள் பெற்றார்.
- இந்த இடம் கீழ்வேளூர் என்று ஆனது.
தலவிருட்சம் இலந்தை
நந்தி
குபேரன்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments