/* ]]> */
Nov 092011
 

ஐப்பசியில் ஐயனுக்கு அன்னாபிஷேகம்

॥SHIV ANIMATION॥ - bhole nath..........॥SHIV ANIMATION॥ - bhole nath..........

Lord Sahasralingamurthy in Silver Kavacham after Annabhishekam

தஞ்சாவூர். பெருவுடையார், அன்னாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஒலித்த சாமவேதத்தை உன்னிப்பாக ஒருமுகப்பட்ட மனதுடன் கவனித்தேன்.

“அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்ட மந்திரம் மனதைக்கவர்ந்தது.

நம் உடல் ஆதாரமான அன்னத்தால் ஆக்கப்பட்ட அன்னமயகோசம்..

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. 

அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

காசியிலே அன்னபூரணியாக அருட்காட்சி தந்து சிவனுக்கும் சகல் ஜீவராசிகளுக்கும் அன்னமளிக்கிறாள்.

Annabhishekam at Rathnagiriswarar Temple

தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர்.

ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்ப்டுகிறது.

THIRUVANAIKOIL KUBERA LINGAM ANNABHISHEKAM 

*”அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று சொல்வது மரபு. அதாவது, அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே  “சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர்.

அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது.

ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும். 

சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம்.

ஐப்பசி பௌர்ணமியன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்.

அறுவடையான புது நெல்லைக் கொண்டு அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும் தில்லையிலே அனுதினமும் காலை பதினோரு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர் வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம் என்வே பாண லிங்கத்தின் மேல் பட்ட அன்னம் பிரசாதத்தில் தவிர்க்கப்பட்டு ஆவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது.

அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல் ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

[annabishekam.jpg]

ஒரு முறை கொட்டும்மழையில் கங்கைகொண்ட சோழ்புரத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி தரிசிக்கும் பாக்கியம் கிடைததது.

தஞ்சை பெரிய கோவிலைப் போலவே காட்சி தரும் சிவலிங்கம் பதிமூன்றரை அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். ஒரே கல்லால் ஆன ஆவுடையாரின் சுற்றளவு அறுபதடி. அவருக்கு எதிரில் அமர்ந்துள்ள மிகப்பெரிய நந்தி மிகுந்த கலைநுட்பத்துடன் அமைந்துள்ளது. 

அம்மன் பிரஹந்நாயகி. பிரகாரத்தில் அனுக்கிரக சண்டேஸ்வரர், கஜசம்ஹாரமூர்த்தி, நடன கணபதி, ஞான சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்

பால் சுனை கண்ட சிவபெருமான், அன்னாபிஷேகம், திருப்பரங்குன்றம்

BRAHADEESWARA (ANNABHISHEKAM),THANJAVUR 

தஞ்சாவூர்  மூலை ஆஞ்சநேயர், தேங்காய் அலங்காரம். 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>