/* ]]> */
Jul 132021
 

உலகிலேயே அதிக காலம் வாழ்பவை ஆமைகள்தான்

ஆமைகள்

  • உலகிலேயே அதிக காலம் வாழ்பவை ஆமைகள்தான்: நிஜமல்ல. அதிக இயக்கமின்றி வாழ்வதால், ஆமைகள் தோராயமாக 150  முதல் 200 ஆண்டுகள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை விட க்வாஹாக் (Quahog)  எனும் சிப்பி மீன் வகை, 500 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. எனவே அதிக நாள் வாழும் பந்தயத்தில் ஆமையை முந்துவது இந்த மீன்தான்.
  • கடினமான சூழல்களில் அனைத்து உயிரினங்களும் வாழ மூடியாது: உண்மை. குறிப்பிட்ட தட்ப வெப்ப  சூழ்நிலையில்  தாக்குப் பிடித்து வாழும் தன்மை கொண்டது. நுண்ணோக்கியால் பார்க்கக்கூடிய இந்த உயிரினம் ஆழ்கடலிலும் எரிமலையைச் சுற்றிய பகுதியிலும், அன்டார்ட்டிக்கிலும் வாழ்கின்றன. இதேபோல ஆங்க்லர்ஃபிஷ் எனும் மீன் ஆழ்கடலில் வாழ்கிறது அதிக ஆழம் என்பதால், பிற உயிரினங்கள் அழுத்தம் தாங்காமல் இறந்துவிடும் சூழலில், ஆங்க்லர்ஃபிஷ் ( Anglerfish) என்ற இந்த மீன் மட்டுமே தாக்குப் பிடிக்கிறது.
  • சிலந்திகள் பூச்சி இனத்தைச் சேர்ஜ்ந்தவை அல்ல. : உண்மைதான். எண்கால் உயிரினமான  சிலந்தி பூசிகளின் உடல் பாகங்களோடு ஒப்பிடுகையில் மாறுபட்டவை. எட்டு கால்களையும், இரண்டு உடல் பாகங்களையும் கொண்டவை. பூச்சிகள் ஆறு கால்களையும் மூன்று பாக உடல்களையும்  கொண்டவை. தேள், உண்ணி , பேன் ஆகியவற்றோடு தொடர்புடையது என்று கூறலாம். எண்கால் உயிரினங்களின் பிரிவிற்கு அராய்ச்சினிட்ஸ் ( Aracinids) என்று பெயர்.
  • பறவைகளின் இறகு கெராட்டின் புரதத்தால் உருவாகிறது:  உண்மைதான். பறவைகளின் இறகுகள் மட்டுமல்ல. அவற்றின் விரல் நகங்கள், அலகுப் பகுதிகள் கூட கெராட்டின் எனும் பாதுகாப்புப் புரதத்தால் உருவாகின்றவைதான். இறகுகளின் நடுப் பகுதியில் உள்ள தண்டுப் பகுதியை க்வில் (Quill) எனலாம். இறகின் இறுதியில் உள்ள மென்மையான பகுதிக்கு , வெனே(Vene) என்று பெயர்.

**************************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>