/* ]]> */
Nov 122018
 

உறங்கும்போது மூக்கு வாசனைகளை உணருமா?

நெருப்புப் புகையின் நெடி தூக்கத்தில் உள்ளவர்களை  விழிக்கச் செய்யுமா என ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர் அதற்காக 10 பேரை ஆய்வுக் கூடத்தில் தூங்கச் செய்து , அந்த அறையில் நெருப்புப் புகையை ஏற்படுத்தினர். 10ல் 2 பேர் மட்டுமே விழித்துக்கொண்டனர். அதாவது இரவில் தூங்கும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதன் புகையை நுகர்ந்து மட்டும் ஒருவரால், விழிக்க முடியாது. என்பதை இந்த ஆய்வு நிறுவியது.

இரண்டாவது ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 20 வயதுடைய 6 இளம் நபர்களைத் தேர்வு செய்து, அவர்கள் தூங்கும்போது, மூக்கால் மட்டும் சுவாசம் செய்யும் பயிற்சியைத் தந்தனர்.பின்னர் நறுமணம் கொண்ட பெப்பர்மின்ட் (peppermint), துர்நாற்றம் கொண்ட பைரிடீன் (pyridine) ஆகிய 2 மணங்களைத் தூங்கும் நபர்களின் மூக்கில் குழாய் வழியாகச் செலுத்தி, ஆராய்ச்சி செய்தனர்.  தூக்கத்தின் 4 நிலைகளிலும் இந்த ஆய்வைச் செய்தனர்.

முதற்கட்ட தூக்க நிலையில் பெப்பெர்மிண்ட் நறுமணத்தை உணர்ந்து சிலர் விழித்தனர். அடுத்தடுத்த துக்க நிலைகலில் எவரும் விழிக்கவில்லை. பைரிடீன் மணம் சில சமயம் விழிப்பை  ஏற்படுத்தினாலும் ஆழ்ந்த தூக்க நிலையில் உள்ளவர்களை விழிக்கச் செய்யவில்லை. எந்த தூக்க நிலையாக இருந்தாலும் சத்தம் அவர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தியது.

^^^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>